Dec 31, 2013

டாப் 10 ஃபேவரிட் தமிழ்ப்படங்கள் 2013

போன பதிவில் டாப் 10 மொக்கை தமிழ்ப்படங்களைப் பார்த்தோம். இந்தப்பதிவில் எனக்குப் பிடித்த டாப் 10 தமிழ்ப்படங்களைப் பார்ப்போம். இதில் ஒருசில படங்கள் விட்டுப்போயிருக்கலாம். நல்ல படங்கள் என்று நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்ட சில படங்களை நான் இன்னும் பார்க்கவே இல்லை. அப்படிப்பட்ட நான் பார்க்காத, ஆனால் பார்க்க நினைக்கும் படங்களைத் தனியாக லிஸ்ட் தருகிறேன். இந்த லிஸ்டில் நான் பார்த்த வரைக்கும் எனக்குப் பிடித்த படங்களை அதே ஆர்டரில் தருகிறேன்.

1.ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


இந்தப்படம் ஏன் இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு காரணம் போதும். மிஷ்கின்

2.சூது கவ்வும்


இந்தப்படம் ஏன் எனக்குப் பிடித்தது என்பதை முன்பே இந்தப்பதிவில் விரிவாகச் சொல்லிவிட்டேன். கமர்சியல் படத்தின் இலக்கணத்தைக் கரைத்துக்குடித்து அதன்படி அச்சுப்பிசகாமல் எடுக்கப்பட்ட படம். காமெடிப்படங்கள் என்று சொல்லிக்கொண்டு வந்த அபத்த குப்பைகளைப் பார்த்து நொந்து போயிருந்த சமயத்தில் இரட்சகனாய் வந்து காப்பாற்றிய படம். முதல் படத்திற்கேயுரிய குறைகள் சில இருந்தாலும் வரவேற்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டிய படம் இது என்பதில் சந்தேகமேயில்லை.

3.மூடர் கூடம்


ஒருசில இடங்களில் திரைக்கதை மெதுவாக சென்று போரடித்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சூப்பர் முயற்சி. அருமையான காமெடிப்படம். அதிலும் கொள்ளையடிப்பதற்காக அந்த வீட்டிற்கு அதிகாலையில் சென்று பல்பு வாங்கும் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

4.நேரம்


படம் வெளிவந்து நீண்ட நாட்கள் கழித்தே இந்தப்படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. "நான் இதுவரை வந்துள்ள அத்தனை படத்திலிருந்தும் திருடுகிறேன்" என்ற க்வண்டினின் பிரபலமான வாசகத்தோடு ஆரம்பிக்கும் படம் கடைசி வரை ஏமாற்றவே இல்லை. படம் முடிந்தபோது நல்ல படத்தைப் பார்த்த திருப்தி கிடைத்தது.

5.விடியும் முன்


நேற்றுதான் இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பிடித்த 10 படங்கள் தேற்றுவதற்கு தத்தளித்துக் கொண்டிருந்த எனக்கு ஆபத்பாந்தவனாய் வந்து காப்பாற்றிய படம். தமிழில் ஒரு நல்ல த்ரில்லரைப் பார்த்த திருப்தி. அதேபோல யாரும் தொடத்தயங்கும் ஒரு கதைக்களம். அதிலும் நுணுக்கமாக செதுக்கப்பட்ட காட்சிகள், டீட்டெயிலிங், நடிகர்களின் அலட்டலில்லாத இயல்பான நடிப்பு என என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது இந்தப்படம்.

6.பாண்டிய நாடு


என்னதான் இன்னுமொரு "நான் மகான் அல்ல"வாக இருந்தாலும் இந்த வருடம் வந்த ஆக்சன் படங்களில் இந்தப்படம் குறிப்பிடத்தகுந்த படம் தான். இந்தப்படத்தைப் பற்றி மேலும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்.

7.கல்யாண சமையல் சாதம்


என்னை உண்மையிலேயே வெகுவாக ஆச்சரியப்படுத்திய படம் இது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, படத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது இந்தப்படம். அடல்ட் காமெடியை தமிழில் இவ்வளவு எளிமையா, முகம் சுளிக்காதவாறு எடுத்ததற்கே இந்தப்படத்தின் இயக்குனரைக் கொண்டாடலாம். பிரசன்னா இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க துணிந்தது பாராட்டத்தக்க விடயம்.

8.ஆதலால் காதல் செய்வீர்


படம் முழுவதும் அவ்வளவு பிரமாதமான காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் க்ளைமாக்ஸ் காட்சி ஒன்றுக்காகவே இந்தப்படம் இந்த லிஸ்டில் இடம் பெறுகிறது. இந்தப்படத்தைப் பற்றி மேலும் படிக்க இங்கே க்ளிக்குங்கள்.

9.பரதேசி


எவ்வளவுதான் குறைகள் கூறினாலும், பரதேசி முழுக்க க்ளிஷே காட்சிகளால் நிரம்பியிருந்தாலும் கூட இந்தப்படம் எனக்கு பிடித்த படங்களின் லிஸ்டில் சேருவதைத் தவிர்க்க முடியவில்லை. டிபிகல் பாலா படம். இருந்தாலும் இதற்கு முன்வந்த அவன் இவன், நான் கடவுள் போன்றவற்றிலிருந்து மாறுபட்டு, வன்முறையைக் கையில் எடுக்காமலே க்ளைமாக்சில் அதற்குரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம். காமெடிக்குப்பைகளுக்கு இது எவ்வளவோ தேவலாம். இந்தப்படத்தைப் பற்றி மேலும் எனது கருத்துக்களைப் படிக்க இங்கே க்ளிக்குங்கள்.

10.விஷ்வரூபம்


தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் ரிலீசுக்கு இவ்வளவு பிரச்சனைகள் வந்தது இந்தப்படத்திற்காகத்தான் இருக்கும். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். ஆனால் அவை அத்தனையும் பூர்த்தி செய்யப்பட்டனவா என்றால் அது கொஞ்சம் கேள்விக்குறி தான். படம் வித்தியாசமான களத்தில் இருந்தாலும் லாஜிக் ஓட்டைகள், மெதுவான திரைக்கதை போன்றவை மிகப்பெரிய குறைகளாக உள்ளன. அதிலும் பரபரப்பாக இருக்க வேண்டிய க்ளைமாக்ஸ் ஏனோதானோவென சென்று ஏமாற்றத்தையே தந்தது. ஒருவேளை அடுத்த பாகத்தில் மொத்தமாகக் காட்டுவதற்காக மிச்சம் வைத்திருக்கலாம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இருந்தாலும் ரசிப்பதற்கு இந்தப்படத்திலும் நிறைய காட்சிகள் உள்ளன. அதற்காகவே இந்தப்படம் இந்த லிஸ்டில் இடம்பெறுகிறது.

இந்த 10 படங்களில் மூடர்கூடம், விடியும் முன் ஆகிய இரண்டும் வேறு இரண்டு படங்களின் காப்பி/இன்ஸ்பிரேஷன் என்று கூறுகிறார்கள். சூது கவ்வும் படத்திலேயே கூட பல படங்களின் காட்சிகளின் இன்ஸ்பிரேஷன் தெரியும். ஹ்ம்ம்.. என்ன செய்ய??

இந்த 10 படங்களைத் தேர்வு செய்வதற்கே நாக்கு தள்ளிவிட்டது. இதற்கடுத்தாற்போல குறிப்பிடத்தகுந்த வேறுசில படங்களும் கவனத்தைக் கவர்ந்தது. அவை,

1.இரண்டாம் உலகம்
2.ஆரம்பம்
3.பிரியாணி
4.வத்திக்குச்சி
5.உதயம் NH4
6.வருத்தப்படாத வாலிபர் சங்கம்
7.எதிர் நீச்சல்
8.சென்னையில் ஒரு நாள்

இதற்கடுத்து இந்தப்படங்களையும் பார்த்தேன் என்று பதிவு செய்வதற்கேற்ற சில படங்கள்,
1.இவன் வேற மாதிரி
2.ராஜா ராணி
3.இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
4.ஐந்து ஐந்து ஐந்து
5.தீயா வேலை செய்யணும் குமாரு
6.தங்க மீன்கள்
7.6 மெழுகுவர்த்திகள்
8.ஆதி பகவன்

மற்ற படங்கள் ஏதும் இங்கே குறிப்பிடும் அளவுக்கு கூட இல்லை என்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன். ஏதேனும் படம் மிஸ் ஆகியிருந்தால் கீழே கமெண்டில் பரிந்துரை செய்யுங்கள். பார்க்க முயற்சி செய்கிறேன். நன்றி.

அம்புட்டுதேன்.

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அது தனி லிஸ்டா அப்பாலிக்கா வரும் :)

      Delete
  2. உன்னிப்பான நல்ல தொகுப்பு...! பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. நல்ல லிஸ்ட் தங்கமீன்கள் மட்டும் தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு நீங்க கொடுத்து இருப்பதில். கல்யாண சமையல் சாதம் மிக பிடித்தது சமீபத்தில் தான் நானும் பார்த்தேன் நண்பா. மூன்று பேர் மூன்று காதல் சேரன் -பானு பகுதி 45 நிமிடங்கள் பாருங்க (ஏற்கனவே பார்த்தும் பிடிக்கலனா ப்ரியா விடுங்க :) ) ஹரிதாஸ் நல்ல படம் , தலைமுறைகள் (நிச்சயம் காணுங்கள் நான் இன்னும் பார்க்கவில்லை ) , மதயானை கூட்டம் பாருங்க கதை களத்தின் நேட்டிவிட்டி அப்படியே வெற்றிமாறன் படம் போல இருக்குபா. என்றென்றும் புன்னகை எனக்கு ஓகே ரகம் உங்களுக்கு பிடிக்கலாம் பாருங்க, தகராறு ( திமிரு , சுப்ரமணியபுரம் கலவை ) :)

    ReplyDelete
    Replies
    1. தங்கமீன்கள் - எனக்கு அவ்ளோவா பிடிக்கல தல. நாடகத்தனமா இருந்துச்சி. ஆனா கற்றது தமிழ் எனக்குப் புடிக்கும். அடுத்த படம் எப்புடி எடுக்குறார்னு பாக்கலாம்.

      அப்பறம் நீங்க சொன்ன எந்தப்படத்தையும் இன்னும் பாக்கல. இனிமே தான் பாக்கனும். தகராறு டிவில ஒன்னு ரெண்டு சீன்ஸ் பாத்தேன். பிடிச்சிருந்துச்சி. பாக்கனும்.

      அதெல்லாம் இருக்கட்டும். நீங்களும் ஒரு லிஸ்ட் போடுங்க தல (ப்ளாக்ல)

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *