வேலைப்பளு ரொம்ப ஜாஸ்தியா இருந்ததால ரொம்ப நாளுக்கப்புறம் எழுதுறேன். சும்மா பத்தோட பதினொன்னா போகாம, எழுதியே ஆகனும்னு தோண வச்சுருச்சு இந்தப்படம். இதுக்கு முன்னாடி ராஜபாட்டை அனுபவத்துனால இந்தப்படம் போகனுமா வேணாமானு ரொம்ப யோசனையா இருந்துச்சு. அப்புறம் கடைசில நேத்துதான் இந்தப்படம் நண்பர்களோட போனேன்.
கதைனு ஒன்னியும் கிடையாது. இன்னிக்கு தினத்தந்தி பேப்பர் எடுத்து படிச்சாலும், இந்தப்படத்து கதையை மாதிரி ஒரு செய்திய படிக்கலாம். அப்டி டெய்லி நாம படிக்கிற, கேள்விப்படுற, பாக்குற ஒரு சாதாரண விஷயம் தான் இந்தப்படத்தோட கதைக்கரு. இருந்தாலும் விசுவலா அதை ஸ்க்ரீன்ல பாக்கறப்ப அது கொடுக்கற பாதிப்பு ரொம்பவே அதிகம்.
டீனேஜ்ல இருக்கற ஒரு காதல்ஜோடியை சுத்தி தான் கதை. இன்னிக்கு காதலர்களோட நிலைமைய சும்மா புட்டு புட்டு வைக்குது. ஏதோ ஒரு அவசரத்துல காதலிக்குறாங்க. எதுக்காக காதலிக்கறோம், உண்மைலயே இதுதான் காதலானு எதுவுமே தெரியாம பண்ற அவசரக் காதலர்களோட வாழ்க்கை சம்பவங்கள்தான் மொத்தக்கதையுமே.
முதல் பாதி முழுக்க ஹீரோவும், ஹீரோயினும் எப்டி நண்பர்களா இருக்கறாங்க, அப்புறம் எப்டி காதலர்களா மாறுறாங்கனு இளமைத்துள்ளலோட சொல்லிருக்காங்க. ஆனா இங்க கடுப்பாகுற ஒரு விஷயம் என்னனா, ஹீரோ ஹீரோயினா நடிச்ச நடிகர்கள் தான். இவந்தான் ஹீரோவானு அதிர்ச்சியடையற மாதிரி ஒரு பையன காமிக்குறாய்ங்க. அவன் சிரிக்கும்போது அவ்ளோ கடுப்பாகுது. சரி ஹீரோதான அவன் எப்டி இருந்தா என்ன ஹீரோயின் நல்லா இருப்பானு ஆர்வமா பாத்தா, அடுத்த அதிர்ச்சி. இந்த ஹீரோயின விட நல்ல ஃபிகர்லாம் என் காலேஜ்லயே இருக்குனா பாத்துக்கோங்க.
ரொம்பவே மெனக்கெட்டு ஹீரோயின அழகா காட்ட முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா அந்த ஹீரோவுக்கு அந்த ஹீரோயின் திங்கத்தெரியாதவனுக்கு பன்னு கிடைச்ச மாதிரிதான். ரெண்டு பேருமே நடிக்க நல்லா முயற்சி பண்ணிருக்காங்க. புதுமுகங்கள்ங்கறதால இதுக்கு மேல அவங்கள்ட்டருந்து எதிர்பார்க்க முடியாது. ரெண்டு பேருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நல்லா வொர்க்கவுட் ஆயிருக்கு.
அதே போல முதல் பாதில வர்ற காதல் சீன்கள்லாம் இன்னும் கொஞ்சம் ரொமான்டிக்கா எடுத்துருக்கலாமோனு தோணுது. "நான் மகான் அல்ல" ரொமான்டிக் சீன்கள்லாம் இன்னும் அப்டியே மனசில இருக்கு. அந்தளவுக்கு இந்தப்படத்திலேயும் முயற்சி பண்ணியிருக்கலாம். இருந்தாலும் இதுவும் நல்லாதான் இருக்கு.
இவங்களோட இந்த அறியாப்பருவத்து காதல் கர்ப்பத்துல வந்து முடியுது. இதுக்கப்புறம் அவங்க என்னென்ன பிரச்சனையெல்லாம் எதிர்கொள்ளறாங்கங்கறது தான் மீதிக்கதை. இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் அந்த ஹீரோயினோட அம்மா, அப்பாவா நடிச்சவங்க. ரொம்ப இயல்பா நடிச்சுருக்காங்க. குறிப்பா ஹீரோயினோட அம்மா. ஒரு டீனேஜ் பொண்ணுக்கும் அம்மாவுக்கும் இடையிலான அந்த உறவ ரொம்ப அற்புதமா காமிச்சுருப்பாங்க.
இந்தப்படத்தோட க்ளைமாக்ஸ் ஜூப்பரா இருக்கும்னு எல்லாரும் சொன்னதால நானும் சில பல யூகங்களோட பாத்தேன். நான் என்னலாம் யோசிச்சேனோ அதலாம் நடக்கவே இல்ல. சாதாரணமா நம்ம கேள்விப்படுற ஒரு விஷயம் தான் க்ளைமாக்ஸ்னாலும் நம்மால அதை ஜீரணிக்கவே முடியாது. அட்லீஸ்ட் சில நாட்களுக்காவது பாதிப்பை ஏற்படுத்தப்போவது உறுதி. இதுக்கப்புறம் என்ன சொன்னாலும் அது படத்தோட ஸ்பாய்லரா வந்து முடிய வாய்ப்பிருக்கறதால இதோட முடிச்சுக்கறேன்.
இப்டி ஒரு படத்த மசாலா தடவி எல்லாரும் பாக்கற மாதிரி எடுத்த சுசீந்தரனுக்கு ஒரு பெரிய பொக்கே பார்சல். படம் மொத்தமே 2 மணி நேரத்துக்கும் குறைவு தான். ஆனா சொல்ல வந்த விஷயத்த சும்மா நச்சுன்னு நெத்தியடியா சொல்லிட்டு போயிருச்சு. தியேட்டர்ல படம் முழுக்க கலாய்ச்சிகிட்டே இருந்த சில பேரு க்ளைமாக்ஸ் அப்போ அமைதியாகிட்டாங்க. படம் முடிஞ்சு சுசீந்தரன் பேரு வர்றப்போ அப்டி ஒரு மரியாதை. இப்டி ஒரு சாதாரண கதைக்கு சுவாரசியமான திரைக்கதை அமைச்சு தன்னோட திறமைய மறுபடியும் நிரூபிச்சுருக்காரு டைரக்டர்.
மொத்தப்படமும் அந்த க்ளைமாக்ஸ்க்கு பெரிய பாதிப்ப கொடுக்கறதுக்காக செதுக்கியிருக்காங்க. இன்றைய டீனேஜ் காதலர்களுக்கு ஒரு படிப்பினையா இந்தப்படம் இருக்கப்போவது உறுதி. பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கையா இருக்கும். படம் எண்டு க்ரெடிட் போடும்போது பட டைட்டில ஒரு தடவ யோசிச்சுப்பாத்தீங்கன்னா, அதுவே பல சிந்தனைகளுக்கு வழி வகுக்கும். ஏன் இந்த டைட்டில் வச்சுருக்காங்கனு அப்போ தான் புரியும்.
இசையைப்பத்தி சொல்லியே ஆகனும். ரொம்ப நாளைக்கப்புறம் யுவன் தன்னோட திறமைய மறுபடியும் நிரூபிச்சுருக்காரு. பின்னணி இசையில படத்துக்கு தேவையான பாதிப்பை ஏற்படுத்துறாரு. பாடல்கள்லாம் முன்னாடியே ஹிட்டாயிருச்சுனாலும் பாக்கறதுக்கும் ரொம்ப நல்லாருக்கு. யுவன் வாய்ஸ்ல ஆராரோ பாட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு மனச விட்டு அகலப்போறது இல்ல.
ஒளிப்பதிவு முதல்பாதி முழுக்க அவ்ளோ அழகா எடுத்துருக்காங்க. கண்ணுல வச்சு ஒத்திக்கலாம் போல அவ்ளோ அழகான காட்சிகள். இளமைத்துள்ளல அப்டியே ஸ்க்ரீன்ல கொண்டு வர்றார். படத்தோட வெற்றியில ஒளிப்பதிவும், இசையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
ஆதலால் காதல் செய்வீர் - கண்டிப்பாக டீனேஜ் பசங்களோட பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்.
"இவந்தான் ஹீரோவானு அதிர்ச்சியடையற மாதிரி ஒரு பையன காமிக்குறாய்ங்க. அவன் சிரிக்கும்போது அவ்ளோ கடுப்பாகுது"
ReplyDeleteஎனக்கும் அதே கடுப்பு தான்
அட்லீஸ்ட் ஒரு அழகான ஹீரோயின போட்டுருந்தா இதலாம் தெரிஞ்சுருக்காது. நம்ம கடுப்பு என்னன்னா இவனுக்கெல்லாம் ஃபிகர் மாட்டுதேனு தான்.. ஹிஹி ;) :p :p
Deleteசரி ஹீரோதான அவன் எப்டி இருந்தா என்ன ஹீரோயின் நல்லா இருப்பானு ஆர்வமா பாத்தா, அடுத்த அதிர்ச்சி. இந்த ஹீரோயின விட நல்ல ஃபிகர்லாம் என் காலேஜ்லயே இருக்குனா பாத்துக்கோங்க. I think this is what the director wants to show through people we see everyday life. If it is by Ajit or Hanshika it will touch anyone because we see them as different breed and forget it as just cinema.
ReplyDeleteஹாய் அனானி,
Deleteஇந்தப்படத்துக்கு புதுமுகங்கள் தான் சரி.. கொஞ்சம் ஃபேமஸா இருக்கறவங்கள போட்டுருந்தாலும் நல்லா இருந்துருக்காது. அந்த வகையில உங்க கருத்தோட முழுக்க ஒத்துப்போறேன். மத்தபடி இந்த அழகு ஃபேக்டர் இந்தப்படத்தோட மையக்கருத்தை எந்த வகையிலயும் பாதிக்கல.
அடுத்த டைம் வரும்போது ஒரிஜினல் பேர்ல வாங்க நண்பா..!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
இப்ப தான் படத்தை முடிச்சேன் தல, உடனே உங்க விமர்சனத்தை தான் படிச்சேன். ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. எனக்கு என்ன என்ன தோணிச்சோ அதே தான் நீங்களும் எழுதி இருக்கீங்க.
ReplyDeleteஇந்த கதைக்கு அந்த ஹீரோ தான் சரியான பிட், நடிப்புல பெருசா இம்ப்ரெஸ் பண்ணல. ஹீரோயின் வழக்கு என் படத்தோட கதாநாயகி போல. படம் ரொம்பவே எதார்த்தமா இருந்திச்சு.
வழக்கு என்-க்கு அப்புறம் நான் பார்த்த நல்ல படம். கிளைமாக்ஸ் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்திச்சு.
வாங்க தல,
ReplyDeleteஅதிலும் படத்தோட இரண்டாம் பாதில, பெற்றோரோட வலி, வேதனைகளை இந்தளவு நுணுக்கமா வேற எந்த படமும் சொன்னதா எனக்கு தெரியல..!!
அப்புறம் கடைசி காட்சில (க்ளைமாக்ஸ் பாடலுக்கு முன்னாடி ஹீரோ, ஹீரோயினோட நிலையை காமிக்குற சீன்) ஆணாதிக்கம் அதிகமா இருக்கறதா எல்லாரும் குற்றம் சாட்டுறாங்க. எனக்கென்னவோ சமூகத்துல என்ன நடக்குதோ அத அப்டியே யதார்த்தமா பதிவு செஞ்சுருக்காரு இயக்குனர். இதுக்கு குற்றம் சாட்டனும்னா சமூகத்த தான் சொல்லனும்.
அப்பறம், அப்டியே நீங்களும் உங்க பார்வைல ஒரு விமர்சனத்த போட்டிருங்க தல..!!
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_3.html?showComment=1378165049455#c4515847910923155297வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
Deleteசெய்திக்கும் வருகைக்கும் மிக்க நன்றி ரூபன்..!! :)
-நன்றி-
-அன்புடன்-
-கில்லாடி ரங்கா-
ஏங்க இவ்ளோ உருகி உணர்ந்து எழுதுனா ,,,, செண்டிமெண்டல் இடியட்டுன்னு சொல்லுறாய்ங்க ஒரு குருப்பு (இந்த படத்துக்கு , தங்கமீன்கள் இதை எல்லாம் நல்ல விதமா பேசியதால ரெம்ப பாதிக்கப்பட்டேன் ) உங்களுக்கு அப்பிடி இல்லை போல நல்லது.
ReplyDeleteதல,
Deleteஇந்தப்படம் செண்டிமெண்டலா எனக்கு ஒன்னும் தெரியல.. யதார்த்தமா தான் இருந்தது. அந்த க்ரூப்பு அப்டியே சொல்லிட்டு திரியட்டும். நீங்க கவலைப்படாதீங்க.. உங்க கருத்தை எப்பவும்போல ஆணித்தரமா சொல்லுங்க..!! (ஆனா நான் இன்னும் தங்கமீன்கள் பாக்காததுனால அதப்பத்தி ஒன்னும் சொல்ல முடியாத நிலையில் இருக்கேன்)