எவ்லின் மெர்சர் ஒரு வயதான பெண்மணி. இரவு நேரம், ஒரு கடையில் பொருட்கள் வாங்கிட்டுருக்கறப்போ, ஒரு சிறுவன் மிட்டாய் திருடுறத பாத்துடறா. அப்போ எவ்லின், அந்த சிறுவன் டார்னெல், கடைக்காரர் சமிர் இந்த 3 பேரத்தவிர வேற யாருமே இல்ல. சிறுவனை கையும் களவுமா பிடிச்ச எவ்லின்,
எவ்லின் : ஓகே டார்னால், அப்போ அந்த மிட்டாய் அதுவா உன் பாக்கெட்-குள்ள வந்துருச்சுனு சொல்றியா ? ஹங்? எனக்கு அப்டி தோணலை.சமிர் இப்போ போலிஸ்க்கு கால் பண்ணப்போறார். சமிர், போலிஸ்.
சிறுவன் : ப்ளீஸ், போலிசுக்கு கால் பண்ணாதீங்க, ப்ளீஸ்.
எவ்லின் : (சிறுவனுக்கு தெரியாதபடி போலிஸ்க்கு கால் பண்ணாதே என்று சமிருக்கு சைகை காமிக்கிறாள்) நீ திருடினா அதுதான் நடக்கும். பின்விளைவுகள சந்திச்சே ஆகனும்
சிறுவன் : அது ஜஸ்ட் ஒரு மிட்டாய் தான். அதுக்காக நான் ஜெயிலுக்கு போக விரும்பலை.
எவ்லின் : சரி. இன்னிக்கு வேணா நீ தப்பிக்கலாம். ஆனா பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்ற மாதிரி ஒரு நாள் நீ மாட்டிக்குவே. இப்டித்தான் உன் வாழ்க்கைய நடத்தனும்னு ஆசைப்படுறியா ?
சிறுவன் : இல்லை
எவ்லின் : நீ அப்டிப்பட்டவன் இல்லைனு நான் நம்பிட்டு இருக்கேன். உன் மேல நீயும் அந்த நம்பிக்கையை வைக்கனும்.
சிறுவன் : புரியுது மிஸ் எவ்லின்
எவ்லின் : இனிமேல் திருடுவியா ?
சிறுவன் : இல்லை. மாட்டேன்.
எவ்லின் : சரி. சமிர்கிட்ட மன்னிப்பு கேள்.
சிறுவன் : இனிமே திருட மாட்டேன் சார். (சமிர் போனை கீழே வைக்கிறார்)
எவ்லின் : இன்னிக்கு நீ ரொம்ப லக்கி தம்பி. போயிட்டு வா. இனிமே நல்ல பையனா நடந்துக்கோ..!!
சிறுவன் தன்னோட தவற உணர்ந்து, திரும்பி போகிறான். எவ்லின் கடைக்காரனை நோக்கி "சின்னப்பையன்ல.. கொஞ்சம் எடுத்து சொன்னா திருந்திடுவான்" என்றவாறே தனக்கு தேவையான பொருட்களை எடுக்க போகிறாள். அப்போ திடீர்னு முகமூடி போட்ட 2 பேர் கடைக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் கடைக்காரனை மிரட்டி பணம் பறிக்கிறாய்ங்க. இவய்ங்கள பாத்துட்டு ஒரு இடத்துல மறைவா ஒளிஞ்சுக்கறா எவ்லின். பணம் ஆட்டயப்போட்ட உடனே கடைக்காரனை சுட்டு கொன்னுடறாய்ங்க. சுடற சத்தம் கேட்டு பயந்து கத்திடறா எவ்லின். இந்த சத்தம் கேட்டு வர்ற திருடய்ங்க, அவளையும் சுட்டு கொன்னுடறாய்ங்க.
இதுதான் இந்தப்படத்தோட முதல் சீன். எப்பவுமே படத்தோட முதல் சீன், நமக்கு படம் பாக்கனும்ங்கற ஆர்வத்த தூண்டனும். அப்போ தான் அந்தப்படத்த தொடர்ந்து ஆர்வத்தோட பாக்க முடியும். சூப்பர் ஹிட்டான அத்தனை படங்களையும் எடுத்துப் பாருங்க. முதல் சீன் நம்மளை கவர்ற மாதிரி இருக்கும். உதாரணத்துக்கு, 'சிவாஜி' படத்துல வர்ற முதல் சீன். ரஜினியை கைது பண்ணி ஜெயில்ல போடுவாங்க. பொதுமக்கள்லாம் அதுக்கு எதிர்ப்பு தெரிவிப்பாங்க. ஆனா அரசியல்வாதிகளும், பிஸினஸ்மேன்களும் ஆதரிப்பாங்க. இப்டி முதல் சீன்லயே ரசிகர்களுக்கு ஒரு ஆர்வத்த உண்டாக்கி, படத்த இன்னும் சுவாரசியப்படுத்தியிருப்பாரு இயக்குனர் சங்கர்.
இந்த முதல் 5 நிமிடம், படத்தோட உண்மையான தொடக்கமா இருக்கனும்னு அவசியம் இல்ல. 'சிவாஜி' படத்துல முதல் 5 நிமிடக்காட்சி, படத்தோட பாதிக்கு மேல வர்ற சீன். இருந்தாலும் முதல் சீனா வைக்கப்பட்டிருக்கும். இதே மாதிரி இன்னொரு படம், டக்குனு மனசுல வர்ற படம் "Old Boy(2003)" இதிலேயும் படத்தோட முதல் சீன், ஆக்சுவலா படத்தோட பாதியில வர்ற சீன்.
அப்டி இந்தப்படத்திலேயும் முதல் சீனே படத்த பாக்கனும்னு ஒரு ஆர்வத்த தூண்டுது. அந்த துப்பாக்கிச்சூட்டுல இறந்துபோற எவ்லினுக்கு மொத்தம் 4 பசங்க. உதவி தேவைப்படுறவங்கள தேடிப்போயி உதவி பண்ற எவ்லின் ரொம்ப நல்லவ. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவள். அவளை கொன்னதுல அவளோட பசங்க 4 பேரும் செம காண்டாயிடுறாங்க. தன்னோட அம்மாவ கொன்ன திருடய்ங்களை பழிவாங்கியே ஆகனும்னு களத்துல இறங்குறாங்க.
அந்த 4 பேருல ஒருத்தன் மட்டும் கண்டும் காணாத மாதிரி இருக்கான். மத்த 3 பேரும் தீவிர விசாரணைல இறங்குறாங்க. விசாரணைனா சும்மா வாயால கேக்குறது இல்ல. அடி உதையோட தான் கேள்வியே கேக்க ஆரம்பிப்பாங்க. அப்டி அதிரடி விசாரணையில இது சாதாரண திருட்டு + கொலை கிடையாது. தன்னோட அம்மாவை கொலை பண்ணறதுக்காகவே திருடற மாதிரி பிளான் பண்ணி கொன்னுருக்கறது தெரிய வருது.
யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத எவ்லினை கொலை பண்ணது யாரு ?
அந்த இன்னொரு பையன் ஏன் கண்டும் காணாத மாதிரி இருக்கான் ?
நீங்க ஆக்சன் படங்களோட தீவிர விசிறினா, யோசிக்கவே வேண்டாம். உடனே இந்தப்படத்த பாருங்க. ஒரு நல்ல ஸ்டோரிலைனோட செம்ம ஆக்சன் தீனி கிடைக்கும். படம் பூரா ஏகப்பட்ட மாஸ் சீன்கள். தன்னோட அம்மாவை கொன்னவனை பழிவாங்குற சாதாரண கதை தான். தமிழ்லயே இந்தமாதிரி ஏகப்பட்ட படங்கள் இருக்கு. ஆனாலும் இந்தப்படம் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.
படத்துல வர்ற 4 பேரும் கூடப்பிறந்த அண்ணன் தம்பி கிடையாது. எவ்லின் 4 பேரையும் தத்து எடுத்து வளர்த்ததா காட்டுவாங்க. அதனால 2 பேரு வெள்ளையர்கள், 2 பேரு கருப்பர்களா இருப்பாங்க. அவங்க 4 பேரும் கொஞ்சம் முரடர்களா இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் பாசமா இருக்கறது பாக்க ரொம்ப நல்லா இருக்கும். எனக்கென்னவோ ஒரு தமிழ் படம் பாக்கற மாதிரி தான் இருந்துச்சு.
அதுல கடைசி 4வது தம்பிய, மத்த அண்ணன்கள்லாம் கிண்டலடிச்சுட்டே இருப்பாங்க. அதலாம் ரொம்பவே சுவாரசியமான காட்சிகள். அந்த 4 பேருக்கும் தனித்தனியா டேக்லைன் இருக்குது. தோ கீழே இருக்கற படத்துல பாருங்க.
அதுலயும் மூத்த அண்ணன்களா நடிச்சுருக்கற மார்க்கும் (Mark Wahlberg) டைரீசும் (Tyrese Gibson) செம்ம கெத்தா நடிச்சுருப்பாங்க. அவங்க படம் பூரா வர்ற தோரணைக்கே படம் உங்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போகும்.
இப்போதான் கொஞ்ச நாள் முன்னாடி, மார்க் நடிச்சு பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்குன "பூகி நைட்ஸ்" பாத்தேன். சும்மா மிரட்டலான படம் அது. போர்ன்(Porn) படம் எடுக்கறவங்களோட வாழ்க்கையை மையப்படுத்திய படம் அது. அதப்பத்தியும் கூடிய சீக்கிரமே எழுதுவேன்னு நினைக்கறேன். அப்பறம் இன்னொரு அண்ணன் டைரீஸ் பத்தி சொல்ல தேவையில்ல. ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், டெத் ரேஸ், ஃபாஸ்ட் அண்ட் ஃபியுரியஸ்னு பல படங்கள்ல நடிச்சவரு. இவரும் இவரு பங்குக்கு கெத்த காமிக்குறாரு.
இந்தப்படம் ஒரிஜினல் படம் கிடையாது. 1965ல வந்த The Sons of Katie Elder படத்த தழுவி எடுத்திருக்காங்க. இந்தப்படத்த தழுவி தமிழ்ல யாராச்சும் எடுத்தா நல்லாருக்கும். தமிழ்ல காப்பியடிக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் இதுல இருக்கு. கூடிய சீக்கிரம் ஏ.எல்.விஜய் மாதிரியான ஆட்கள் இதைக் காப்பியடிக்கக் கடவாக. அப்டி எடுத்தா, 4 ஹீரோசுக்கு என்னோட சாய்ஸ் அஜித், விஜய், தனுஷ், ஜீவா.
அப்பறம் இசை நல்லா இருந்துச்சு, எடிட்டிங் சூப்பரா இருந்துச்சு, இயக்கம் அருமையா இருந்துச்சுனு மொக்கயப்போட விரும்பலை. பழிவாங்குற ஆக்சன் படங்கள் பிடிக்கும்னா தைரியமா என்னை நம்பி பாருங்க. பிடிக்கலனா அப்பறம் இங்க வாங்க. பேசிக்கலாம் (அப்பறம் பேச்சுலாம் கிடையாது மவனே..சங்குதான்னு சொல்றது எனக்கு கேக்குது).
Four Brothers (2005) - They came home to bury mom... and her killer
இந்தமாதிரி படங்கள் எல்லாம் இப்பிடி எங்காச்சும் யாராவது அறிமுகப்படுத்தினாத்தான் பார்க்கமுடியுது. நன்றி தல
ReplyDeleteஉஷ்.. சத்தம் போடாதிங்க. ஏ.எல் விஜய் காதில விழுந்திடப்போகுது. அப்புறம் சர்வநாசம்
//உஷ்.. சத்தம் போடாதிங்க. ஏ.எல் விஜய் காதில விழுந்திடப்போகுது. அப்புறம் சர்வநாசம்//
Deleteஇவர விட்டா பட்டி டிங்கரிங் பாக்கறதுக்கு வேற ஆளு இல்லன்றாங்க.. அதான்.. ஒருவேளை வெங்கட்பிரபு சரியா வருவாரோ என்னமோ..(இவரு காப்பி விஜய் காப்பிய விட நல்லாருக்குங்கறது என் கருத்து)
அந்த சிவாஜி முதல் சீன் மேட்டர் சுவாரஸ்யமா சொன்னீங்க நண்பா,இதை மலையாளத்தில் திருடி 2007ல் மம்முட்டி,மனோஜ் கே ஜெயன்,பாலா போன்றோரை வைத்து big b என்னும் படமாக எடுத்து விட்டனர்.http://en.wikipedia.org/wiki/Big_B_%28film%29
ReplyDeleteவாங்கண்ணா..!!
Delete//மலையாளத்தில் திருடி//
அப்போ நம்ம தான் லேட்டா..??!! அய்யகோ.. இந்த அவமானத்தை எங்குபோய் சொல்லுவேன்.. இந்த விடயம் ஏ.எல்.விஜய், வெங்கட்பிரபு, முருகதாஸ் போன்றோருக்கு உடனடியாக சென்று சேர்க்கப்பட வேண்டும் என ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன். :P :)
நான் இந்தப்படத்தை பார்த்து விட்டேன் என்று இருந்து விட்டேன்.
ReplyDeleteஉங்கள் விமர்சனம்
படித்த பிறகுதான் பார்க்கவில்லையெனப்புரிகிறது.இனி டிவிடியை தேடி பிடிச்சு பார்த்து விடுகிறேன்.
இந்தப்படம் உங்களுக்கு பிடிக்குமானு தெரியலியே ஐயா..!!
Deleteமாஸ் காட்சிகள் நிறைஞ்ச ஃபுல் அண்ட் ஃபுல் கமர்சியல் படம் இது.
புடிக்கலனா என்ன சொல்லக்கூடாது பாத்துக்கோங்கோ..!!
i like punish movie ,will wach thanks yr post.
ReplyDeleteMohanduffy,
DeleteYea.. If you like revenge movies, then you'll surely like this also.
Thanks for your visit and comments yaar..!!
நாங்க TORRENT ல DOWNLOAD பண்ணி பார்த்து கொள்கிறோம். தேவை இல்லாமல் ரீமேக் செய்து எங்களை கொல்லாதீர்கள் என தமிழக இயக்குனர்களிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
ReplyDeleteகிக்கிபிக்கி..!!
Delete