Aug 26, 2013

Now You See Me (2013) - நம்மை ஏமாற்றும் கண்கட்டி வித்தை


ஒரு வழியா பாத்து முடிச்சாச்சு. நெட்ல எல்லாரும் புகழ்ந்து தள்ளிட்டு இருக்கற இந்தப்படத்துக்கு இப்போதான் டாரண்ட்ல நல்ல பிரிண்ட் வந்தது. டவுண்லோடு பண்ணி பாத்த சூட்டோட இந்தப்பதிவையும் எயுதிகினு இருக்கேன்.


இந்த மேஜிக் சம்பந்தமான படங்கள்ல ஆர்வம் வந்ததே தலீவரு நோலனோட ப்ரஸ்டீஜ் படம் பாத்ததுல இருந்துதான். நோலனோட படங்கள்லயே எனக்கு ரொம்ப பிடிச்ச படம்னா அது ப்ரஸ்டீஜ் தான். இத்தனைக்கும் அந்தப்படத்தோட முக்கியமான க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எனக்கு முன்னாடியே தெரியும். அப்டியும் என்னைய அப்டியே கட்டிப்போட்டுருச்சு நோலனோட மேஜிக்கான அற்புத திரைக்கதை உத்தி. ஹாலிவுட்டின் சினிமா பாணியான 3 ஆக்ட் உத்தியையே மேஜிக்கில புகுத்தி வித்தியாசமான திரைக்கதையை வச்சு நம்மள ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு போயிருப்பாரு. நான்லீனியர் திரைக்கதை மெமண்டோவுக்கு அப்பறம் இந்தப்படத்துக்கு தான் கரெக்டா பொருந்தியிருக்கும்.

அதுக்கப்புறம் அந்த மாதிரி மேஜிக் பத்தியும் மேஜிக் பண்றவங்களப் பத்தியும் படம் இருக்கானு தேடி சலிச்சுப் போனதுதான் மிச்சம். கொஞ்சமே கொஞ்சம் படங்கள் தான் மேஜிக் பத்தி வந்துருக்கு. அதுலயும் மேஜிக் பத்தி மட்டுமே வந்துருக்கற படங்கள் ரொம்பக் குறைவு. "The Illusionist" இன்னொரு உதாரணம். அதுக்கப்புறம் முழுக்க முழுக்க மேஜிக் பத்தியும், மேஜிசியன்களோட வாழ்க்கையைப் பத்தியும் வந்துருக்கற முக்கியமான படம்தான் Now You See Me.

படம் இன்றைய நவீன காலத்துல நடக்குது. அமெரிக்காவோட வெவ்வேறு இடங்கள்ல மேஜிக் பண்ணி வாழ்ந்துகிட்டு இருக்கற திறமையுள்ள 4 மேஜிசியன்களுக்கு ஒருத்தன்டருந்து அழைப்பு வருது. 4 பேரையும் பல காலமா கண்காணிச்சுட்டு இருந்த அந்த எக்ஸ் மனிதன், தான் பண்ண இருக்கும் ஒரு பெரிய, உலகத்தையே கலக்கப்போகும் ஒரு வித்தைக்காக அந்த 4 பேரையும் செலக்ட் பண்றான். ஆனா அந்த 4 பேருக்கும் அந்த எக்ஸ் யாருனு தெரியாது.

சரியா ஒரு வருஷம் கழிச்சு, லாஸ் வேகாஸ்ல அந்த 4 பேரும் சேர்ந்து 4 ஹார்ஸ்மென் (4 Horsemen)-ங்கற பேர்ல ஒரு ஷோ நடத்துறாங்க. இங்கே இருந்தபடியே உலகத்தில் எங்கோ இருக்கும் ஒரு பேங்கை கொள்ளையடிக்கப்போறதா சொல்லுறாங்க. ஆடியன்ஸ்ல இருந்து ரேண்டமா ஒருத்தன செலெக்ட் பண்ணி, அவனை டெலிஹெல்மட் (TeleHelmet) மூலமா ஃபிரான்ஸ்ல இருக்கற பாரிஸ்க்கு அனுப்பி அவனோட பேங்கை கொள்ளையடிக்கறாங்க. அங்கே கொள்ளையடிச்ச பணத்தை உடனடியா லாஸ்வேகாஸ்ல ஷோ நடத்துற ஸ்டேஜ்க்கு கொண்டு வந்து ஆடியன்ஸ் மேல பணமழையா விழுகச் செய்றாங்க.

எல்லாத்துக்கும் ஒரே ஆச்சரியம். எப்பிடி இது சாத்தியம். சில நொடிகள்ல அந்த மனுசன எப்டி லாஸ் வேகாஸ்ல இருந்து பாரிஸ்க்கு அனுப்பினாங்க ? எப்டி கொள்ளையடிச்சாங்க? கொள்ளையடிச்ச பணம் எப்பிடி உடனடியா இங்கே வந்தது ? எல்லாமே சஸ்பென்சா இருக்கு. FBI இவங்க 4 பேரையும் கைது பண்ணி விசாரிச்சா அவங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கல. அதனால அவங்கள ரிலீஸ் பண்ணிடறாங்க. அதே சமயம் FBI கிட்ட அடுத்த ஷோல இதைவிட பெருசா ஒரு விஷயம் பண்ணப்போறோம் முடிஞ்சா கண்டுபிடிங்கனு சவால் வேற விடுறாங்க.

இதுக்கிடையில மோர்கன் ஃப்ரீமன் வர்றாரு. இவரோட வேலை என்னன்னா, பெரிய பெரிய மேஜிசியன்களோட ட்ரிக்கை எல்லாம் கண்டுபிடிச்சு அதோட சீக்ரட்டை வெளியிடறது தான். இவரு FBI கூட சேர்ந்துகிட்டு, அந்த 4 பேரும் எப்டி மேஜிக் பண்றாங்கன்னு கண்டுபிடிக்க உதவி பண்றாரு. இப்போ இவங்கள வச்சுகிட்டே அந்த ரெண்டாவது ஷோ நடக்குது. அவங்க என்ன எதிர்பார்த்தாங்களோ அதுக்கு மாறா வேற ஒன்னு நடக்குது. அத பண்ணிட்டு தப்பிச்சும் போயிடறாங்க.

ரொம்ப கடுப்பாகுற FBI அவங்களை வலைவீசி தேடிட்டு இருக்கும்போது அந்த 3வது மற்றும் கடைசி ஷோவை 4 ஹார்ஸ்மென் க்ரூப் அறிவிக்கறாங்க. இருக்கறதுலயே கஷ்டமான, பிரமாண்டமான அந்த ஷோவை அவங்க வெற்றிகரமா பண்ணாங்களா ? மோர்கனால அவங்களோட ட்ரிக்க கண்டுபிடிக்க முடிஞ்சதா ? இதுபோக சொல்லாம விட்ட இன்னொரு ட்ராக்கும் இருக்குது. இந்த 4 பேரையும் ஒன்னு சேத்த அந்த எக்ஸ் மனிதன் யாரு? அவன் ஏன் இதலாம் பண்றான் ? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் படம் பாத்து பதில் தெரிஞ்சுக்கோங்கோ.

ப்ரஸ்டீஜ் அளவுக்கு இல்லைனாலும், மேஜிக் சப்ஜெக்ட தொட்டதுக்கே பாராட்டுகளை தெரிவிச்சாகனும். ப்ரஸ்டீஜ்ல பழைய காலத்து மேஜிசியன்களோட போட்டி பொறாமையைப் பத்தி சொல்லிருந்தா, அதையே இங்க இந்தக்காலத்து மேஜிசியன்களப்பத்தி சொல்லிருக்காங்க. ஏகப்பட்ட திரைக்கதை ஓட்டைகள் இருந்தாலும் அதையெல்லாம் பத்தி யோசிக்க விடாம பண்ணுது அதிவேகமா நகர்ற திரைக்கதை. பரபரனு அடுத்தடுத்த காட்சிகள் வந்துகிட்டே இருக்கு. அத்தனையும் போரடிக்காம சுவாரசியமா நகர்றதுதான் படத்தோட வெற்றி.

அந்த 4 மேஜிசியன்களுக்கும் தனித்தனியா இன்ட்ரோ கொடுப்பாங்க பாருங்க. ஒவ்வொன்னும் செம கெத்தா இருக்கும். அதுலயும் வூடி ஹரால்சன் ஹிப்னாடிசம் மூலமா ஒரு ஜோடியை மயங்கவச்சு காசு பிடுங்கறதுலாம் செம ரகளையான சீன். அப்போ அந்த கணவன்கிட்டே "இனிமே உன் மனைவியை தவிர வேற பொண்ணுங்கள நினச்சேன்னா நான் அம்மணமா இருக்கற காட்சிதான் உனக்கு தெரியனும். எப்டி"ங்கற சீன் செம.

இந்த 4 பேரும் சேர்ந்து நடத்தும் அந்த முதல் ஷோ அருமை. இந்த 4 பேரும் பண்ற ட்ரிக்கை கண்டுபிடிக்கறவரா நம்ம மோர்கன் ஃப்ரீமன். இந்த 4 பேருக்கும் பண உதவி பண்றவரா மைக்கேல் கைன் (பேட்மேன கவனிச்சுக்கற ஆல்ஃப்ரெட் தாத்தா). அப்பறம் FBI அதிகாரியா நம்ம ஹல்க் மார்க் ரஃபல்லோ. இப்டி ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்துல நடிச்சுருக்கு. ஒருவேளை படத்தோட வெற்றிக்கு ஆடியன்சான நம்மளை திசை திருப்பற முயற்சி தான் இந்த நட்சத்திர பட்டாளமோ..??!!

பரபர காட்சிகளுக்கு படபடனு வசனங்கள். வேகமான கேமரா மூவ்மெண்ட்ஸ். அதிவேகமான எடிட்டிங்க். அதுக்கேத்த கெத்தான பிண்ணனி இசைனு அத்தனை டிபார்ட்மெண்டும் நல்லா ஒர்க் பண்ணிருக்காங்க. ஷோ நடத்துறப்போ வர்ற பிண்ணனி இசையெல்லாம் அற்புதம்.

இப்டி பலவகையில பாராட்டத்தகுந்ததா இருந்தாலும் சில ட்விஸ்ட்களை நம்மாள யூகிக்க முடிஞ்சுருது. நாம யூகிச்சபடியே காட்சிகளும் வர லைட்டா போரடிக்குது. ஆனாலும் இந்தப்படம் பார்க்கவேண்டிய படமே. அதிவேகமா நகர்ற திரைக்கதைகள் உங்களுக்கு பிடிக்கும்னா, லாஜிக் ஓட்டைகளைப் பத்தின கவலைகள் இல்லைனா தாராளமா இந்தப்படத்தைப் பார்க்கலாம். கதையை இன்னும் கொஞ்சம் மெருகேத்தி இருந்தால் இன்னும் நல்லா இருந்துருக்குமோன்னும் தோணுது.

இதுல இன்னொரு பாராட்டத்தக்க விஷயம் என்னன்னா பிரமாண்டமான காட்சிகள். அல்லது பிரமாண்டமா தெரியற மாதிரி காட்டுன விதம். மேஜிக்ல நாம நினச்சுப்பாக்க முடியாத விஷயங்களை அவங்க பண்ணும்போது ஆச்சரியமாவும், சுவாரசியமாவும் இருக்கு. அப்டி கதையோட லாஜிக் பத்தி யோசிக்க விடாம திசைதிருப்பி, ஒரு கண்கட்டி வித்தையா இந்தப்படத்தைக் கொடுத்து நம்மள ஏமாத்தி இருக்காங்க. படம் முழுசும் நாமே அந்த மேஜிக் உள்ளே இருக்கறது போல தோண வச்சுருவாங்க.

கதையைப் பத்தியும், திரைக்கதை லாஜிக் ஓட்டைகளைப் பத்தியும் யோசிக்காம பாத்தா ஒரு நல்ல ஃபுல் என்டர்டெய்னர் பாத்த ஃபீல் கிடைக்கும். பாருங்கோ.. எஞ்சாய் பண்ணுங்கோ.

Now You See Me (2013) - Look closely, because the closer you think you are, the less you will actually see.

10 comments:

  1. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் படம் பாத்து பதில் தெரிஞ்சுக்கோங்கோ... சரிங்க....

    ReplyDelete
    Replies
    1. வாங்கண்ணா,

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. படம் பாருங்கோ உங்களுக்குப் பிடிக்கலாம்.

      Delete
  2. வணக்கம் நண்பா...

    வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்... நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்...

    நன்றி...

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html

    ReplyDelete
    Replies
    1. சே.குமார்,

      வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பா..!!

      Delete
  3. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணே..!!

      Delete
  4. Watch "The Call", one of the best movie i have seen lately.. see it and i'm expecting ur review of it. :)

    ReplyDelete
    Replies
    1. "The Call" இந்தப்படம் பத்தி கேள்விப்பட்டேன் நண்பா.. நல்ல பிரிண்டும் வந்துருச்சி.. ஆனா இன்னும் பாக்கல.. உங்க ரெகமெண்டேஷனுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக படம் பாக்க முயற்சி பண்றேன்.

      உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இன்பா நேசன்..!!

      Delete
  5. i would recommend the prestige (2006) than this
    vaarththai.wordpress.com

    ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *