இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் இயக்குனர் எட்கர் ரைட் பற்றியும், சிறந்த நண்பர்களான, நடிகர்கள் சைமன் பெக் மற்றும் நிக் ஃப்ராஸ்ட் பற்றியும் பார்த்தோம். இந்த மினிதொடர்பதிவு ஆரம்பிக்கப்பட்டதின் முதன்மையான நோக்கமான "The World's End" படத்தைப்பற்றி இந்தப்பதிவில் காண்போம்.
ஏற்கனவே இவர்களின் உருவாக்கத்தில் வெளிவந்த முதல் இரண்டு படங்களும் சக்கைப்போடு போட்டிருக்க, இந்த சீரிசின் மூன்றாவது மற்றும் கடைசிப் படத்தை வெளியிடுவதில் அவர்கள் ரொம்பவே யோசித்திருக்க வேண்டும். தொடர்படங்களாக வெளியிடுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால் முதல் படத்தைப் போல அடுத்தடுத்த படங்கள் இருப்பதில்லை. முதல் படம் வசூலில் அள்ளிவிட்டால் அதே பெயரை வைத்து மொக்கையாக அடுத்த படத்தை எடுத்து வெளியிட்டு காசு பார்த்து விடுவார்கள். இது ஹாலிவுட்டில் மட்டுமில்லாமல் தமிழிலும் நடந்திருக்கிறது.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் பில்லாவைச் சொல்லலாம். முதல் பாகம் வசூலில் மிகப்பெரிய சாதனையைப் படைக்க, அதே பெயரையும் அஜித்தையும் வைத்துக்கொண்டு காசு பார்க்க ஆசைப்பட்டு இரண்டாம் பாகத்தை எடுத்தார்கள். ஆனால் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பும் வசூலும் இரண்டாவதிற்கு கிடைக்கவில்லை (பில்லா-2 எனக்கு பிடிக்கும் என்பது வேறு விடயம்). இன்னும் சில உதாரணங்கள் நான் அவன் இல்லை-2, பீட்சா-2 வில்லா. இந்த வரிசையில் விஸ்வரூபம் மட்டும் சிக்காது என்றே நினைக்கிறேன். ஏன் என்றால் கதை யோசிக்கும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டும் என்று யோசித்து எடுத்திருக்கிறார்கள். அதனால் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்.
கோலிவுட்டின் நிலைமை இப்படி இருக்க ஹாலிவுட்டின் நிலைமை இன்னும் மோசம். அவர்கள் வெகுகாலத்திற்கு முன்பிருந்தே இந்த வேலையை ஆரம்பித்து விட்டார்கள். ஒரு படமோ அல்லது கதையோ நல்ல பிரபலமாகி விட்டால் அதைவைத்து வரிசையாகப் படங்களைத் தயாரிப்பது அவர்கள் வழக்கம். அதிலும் முதல் பாகம் ஹிட்டாகி விட்டால், அழுகிய முட்டையை எடுத்து தியேட்டர் ஸ்க்ரீனில் வீசி, போதும் போதும் என்று சொல்லும்வரை, அடுத்தடுத்த பாகங்களை எடுத்து குவித்து விடுவார்கள். இந்த விடயத்தில் அவர்கள் மானம் ரோஷம் எல்லாம் பார்ப்பதே இல்லை.
இதற்கு ஒரு உதாரணம் அல்ல, நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். ரீசெண்டாக வந்த படங்களைச் சொல்ல வேண்டுமென்றால் X-Men, The Fast and the Furious, Die Hard, Transformers, Paranormal Activity, Men in Black, Final Destination, The Hangover, Twilight. இந்த சீரிஸ்களில் கடைசியாக வந்த பாகத்தைப் பாருங்கள். அத்தனையுமே அரத மொக்கைகள். ஆனால் அதுவே அதன் முதல் பாகம் எப்படி என்று யோசித்துப் பாருங்கள் சூப்பரான படமாக இருக்கும். இப்படி ஒரு கதையோ அல்லது கேரக்டரோ மிகவும் பிரபலமாகிவிட்டால் அதைவைத்து வரிசையாக மொக்கைகளாக எடுத்து தள்ளி நம்மையும் நாக்கு தள்ள வைப்பதையே கொள்கையாக கொண்டுள்ளன ஹாலிவுட் ஸ்டுடியோக்கள். ஆனானப்பட்ட நோலனே இதிலிருந்து தப்பமுடியவில்லை. பேட்மேன் மூன்றாம் பாகம் எடுத்து இந்தப்பாழுங்குழியில் விழுந்துவிட்டார்.
இதைத்தவிர ஒருசில நீளமான சீரிஸ் படங்களையும், அதன் பாகங்களின் எண்ணிக்கைகளையும் இங்கே கொடுத்திருக்கிறேன். ஏதாவது சீரிஸ் விட்டுப்போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே.
Django - 31
Godzilla - 30
Tarzan - 29
James Bond - 23
Friday the 13th - 12
Star Trek - 12
Halloween - 10
Harry Potter - 8
Harry Potter - 8
Batman - 8 (Man of Steel sequel is on the way)
Saw - 7
Saw - 7
The Texas Chainsaw Massacre - 7
X-Men - 6 (7nth one is on the way)
The Fast and the Furious - 6 (7nth one is on the way)
Child's Play (Chucky series) - 6
Once Upon A Time In China - 6 (China only. others not included)
Rocky - 6
<-> of the dead series - 6->
Superman - 6
<-> of the dead series - 6->
Superman - 6
Die Hard - 5
Paranormal Activity - 5
Paranormal Activity - 5
Psycho - 5
Dirty Harry - 5
Resident Evil - 5
Final Destination - 5
Scary Movie - 5
Wrong Turn - 5
Home Alone - 5
The Twilight Saga - 5
Pirates of the Caribbean - 4 (5th one is on the way)
இப்படி இன்னும் கணக்கிலடங்காத அளவுக்கு பல சீரிஸ்களை எடுத்துத் தள்ளிவிட்டனர். இதில் அனிமேட்டட் சீரிஸ்களை கணக்கில் சேர்க்கவில்லை. அதையும் சேர்த்தால் இன்னும் அதிகமாக வரும். இதில் காமிக்ஸ், நாவல்கள் அல்லது புத்தகங்களை அடிப்படையாக வைத்து எடுத்த படங்களைக் கூட விட்டுவிடலாம். Wrong Turn, Scary Movie, Final Destination, Saw, Resident Evil, Paranormal Activity முதலான படங்கள் எல்லாம், முதல் படம் ஹிட்டடித்ததால் தான் அடுத்தடுத்த பாகங்களை எடுத்தனர். இன்னும் இந்த லிஸ்டில் நிறைய படங்களைச் சொல்லலாம். மற்ற அத்தனை பாகங்களும், அற்புதமாக அமைந்த அதன் முதல் பாகத்தைக் கெடுப்பதற்கென்றே எடுத்தது போல இருக்கும். கதையை வற்புறுத்தி உருவாக்கி, கதாபாத்திரங்களை வலியச்சென்று பிரச்சனையில் சிக்கவைத்து ஏனோ தானோவென்று கதையை நகர்த்தி எப்படியோ படத்தை முடித்துவிடுவார்கள். கதை கொஞ்சம்கூட முந்தின பாகத்தோடு ஒட்டாமல், தனியே துருத்திக்கொண்டு, திணிக்கப்பட்ட காட்சிகளெல்லாம் பிதுங்கிக்கொண்டு, ஒரிஜினல் கதையை விட்டு மாறுபட்டே இருக்கும். (இதைப்பற்றி தனியே ஒரு பதிவு விளக்கமாக எழுதினால் என்ன??)
இது அத்தனையும் எதற்காக கூறுகிறேன் என்றால், இந்தமாதிரி பல சீரிஸ்களின் கடைசி பாகம் மொக்கையாக அமைந்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த "The Hang Over" சீரிசிலேயே 3வது பாகத்தில் மொக்கையைப் போட்டுக் கொன்றுவிட்டார்கள். அந்தமாதிரி இந்த கார்னிட்டோ ட்ரைலாஜியும் மூன்றாவது பாகம் மொக்கையாக அமைந்துவிட்டதா என்பதுதான் கேள்வி. என்னைக் கேட்டால் இல்லை என்றே சொல்லுவேன். மூன்று பாகங்களும் அதனதன் வழியே சிறப்பு வாய்ந்தவை. மூன்று பாகங்களையும் நான் ரசித்தேன். ஆனால் மிகபிடித்த பாகம் எது ? அதை இந்தப்பதிவின் கடைசியில் பார்க்கலாம். இப்போது கதைக்குள்ளே போவோம்.
கதை ரொம்ப எளிமையான கதைதான். 40 வயதில் இருக்கும் ஒரு நண்பர்கள் குழு மீண்டும் தனது வாலிப வயதில் பண்ணிய விடயங்களைப் பண்ண நினைத்தால் ? என்ற ஒற்றைவரிக் கேள்விக்கான விடைதான் இந்தப்படம். 5 நண்பர்கள். தங்களின் 20களில் தங்கள் ஊரில் உள்ள 12 பப்களுக்கும் சென்று மதுவருந்த நினைக்கின்றனர். ஆனால் அதை அவர்களால் வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. வருடங்கள் உருண்டோடுகின்றன. அனைவருக்கும் 40 வயதாகிறது. 20 வயதில் பண்ண முடியாததை இப்போது முயற்சிசெய்து பார்த்தால் என்ன என்று ஒருவன் ஐடியா கொடுக்க அதன்படி ப்ளான் போடுகிறார்கள்.
ஒரு நாள் - 12 பப் - 12 பீர் பாட்டில்கள். இதில் ஒவ்வொரு பப்பாக குடித்துக்கொண்டே செல்லும்போது தான் அந்த ஊரில் உள்ள மக்களின் செயல்பாடுகள் மர்மமாக இருப்பதைக் கவனிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அந்த மர்மத்துக்கான காரணம் புரிகிறது. அங்கிருந்து சயின்ஸ் பிக்சன், ஏலியன் என கலந்துகட்டி அடிக்கும் கதையில், முழுமையாக நகைச்சுவையை பரபரவென்று படம் எங்கும் தூவி ரசிக்கிற விதத்தில் பரிமாறியிருக்கிறார்கள். என்ன இவ்வளவு தான் கதையா என்றால் ஆம் இவ்வளவுதான்.
இதற்கும் "This is the End" படத்துக்கும் உள்ள வித்தியாசமே கதையில் தான் இருக்கிறது. அந்தப்படம் வெறும் காமெடிக் காட்சிகளின் தொகுப்பாக மட்டுமே இருக்கும். கதைக்கு அந்தளவு முக்கியத்துவம் இருக்காது. காட்சிகளுக்காக கதை என்றளவில் மட்டுமே இருக்கும். ஆனால் அந்தப்படமும் எனக்குப் பிடித்துதான் இருந்தது. The World's End படம் அந்த மாதிரி இல்லை. நல்ல கதை இருக்கிறது. அதைச்சுற்றிதான் காட்சிகளும் அமைந்திருக்கும். கதைக்காக காட்சிகள் என்றளவில் இருக்கும். அதுதான் இந்தப்படத்தை வேறுபடுத்திக் காண்பிக்கும் முக்கியமான விடயம். அதுதான் This is the End படத்தைவிட The World's End படம் பெஸ்ட் என்று சொல்லப்படுவதற்கான காரணம் என்பது என் கருத்து.
நம் வாழ்க்கையில் மறக்க முடியாத, சந்தோஷமான தருணம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் எதுவென்று யோசித்துப் பாருங்கள். அது கண்டிப்பாக நண்பர்களுடன் இருந்த தருணம் அல்லது காலமாகத்தான் இருக்கும். அதிலும் கல்லூரிப் பருவம் தான் முதலில் தோன்றும். வாழ்க்கையில் எதைப்பற்றிய கவலையும் இல்லாமல், ஜாலியாக வாழ்ந்த நாட்கள் அவை. (இதில் விதிவிலக்குகள் உண்டு என்பதில் மாற்றுக்கருத்தில்லை). நான் கல்லூரியை விட்டு வெளியே வந்து 2 வருடங்கள் தான் ஆகின்றன. அதற்குள்ளாகவே எனக்கு, கல்லூரியைப் பற்றிய பல மலரும் நினைவுகள் வந்து, படுத்தி எடுக்கும். மறுபடியும் சின்னப்பையனாக மாறி கல்லூரிக்கே சென்று அதே நண்பர்களுடன் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். நான் மட்டுமல்ல, கிட்டத்தட்ட எல்லோருக்குமே இந்த எண்ணம் இருக்கலாம். நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இந்தப்படமும் அந்த நாஸ்டால்ஜியாவைப் பற்றிப் பேசியதுதான் உணர்வு ரீதியாக நம்மைக் கட்டிப்போட்டதற்குக் காரணம். நம்மை படத்தில் ஒன்ற வைத்ததும் கதையில் ஈடுபாடு ஏற்படக் காரணமும் அதுதான். என்னைப் போன்ற 20களில் இருப்பவர்களைவிட 30 அல்லது 40களில் இருப்பவர்களுக்கு இந்தப்படம் இன்னும் பிடித்துப் போகலாம். அவர்கள் இன்னும் மனதுக்கு நெருக்கமாக இந்தப்படத்தை உணரலாம். அதுதான் இந்தப்படத்தின் வெற்றி.
முதல்பாதி முழுக்க இந்தமாதிரி நாஸ்டால்ஜியா உணர்வுகளுடன் பயணிக்கும் கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு ஏலியன், சயின்ஸ் பிக்சன் என களம் மாறினாலும் அந்த உணர்வுகள் படம் முடியும் வரை போகவே இல்லை. ஒருவேளை ஏலியன் இல்லாமல் சாதாரண ட்ராமா, காமெடியாக எடுத்திருந்தால் இன்னும் பிடித்திருக்குமோ என்றுகூட தோன்றியது. அதற்கென்று இரண்டாம் பாதி மோசம் என்று சொல்லவில்லை. முதல்பாதியில் கிடைத்த உணர்வுகள் அப்படியே தொடர்ந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்பது மட்டும் தான் எனது ஆதங்கம்.
வழக்கம்போல வேகமான எடிட்டிங், Whip Pan என எட்கர் ரைட்டின் வழக்கமான மேக்கிங்கோடு படம் ஆரம்பிக்கிறது. சைமன் பெக் வாய்ஸ் ஓவரில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகத்துடனும் கதை ஆரம்பிக்கிறது. அங்கே ஆரம்பிக்கும் சைமன் பெக்கின் அதகளம் படம் முடியும்வரை அப்படியே இருக்கிறது. மனுசன் சும்மா பூந்து விளாடுறாரு. இந்தப்படத்தின் ஷோ ஸ்டீலர் (Show Stealer) என்றால் இவர்தான். அப்படியொரு பர்பார்மென்ஸ். இவரின் கதாபாத்திரத்திரம், நடிப்பைப் பற்றி மட்டுமே தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். அந்தளவுக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படம் பார்த்த ஒவ்வொருவரும் மறுக்க முடியாத உண்மை இது.
அதேபோல நிக் ஃப்ராஸ்ட், சைமன் பெக்குக்கு தான் ஒன்றும் சளைத்தவனல்ல என்பதுபோல நடிப்பை வழங்கியுள்ளார். மற்ற 4 நண்பர்களும் மதுவருந்த, இவர் மட்டும் மறுத்துவிடுவார். அதற்கு என்ன காரணம் என்று ஒரு ஃப்ளாஸ்பேக் வேறு உள்ளது. படத்தின் முக்கியமான ஒரு கட்டத்தில் பொறுத்தது போதும் பொங்கியெழு என ஒரே நேரத்தில் அத்தனை மதுக்கோப்பைகளையும் காலி செய்வதும், ஏலியன்களைப் பந்தாடுவதும் ரசனையான காட்சிகள்.
படம் முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய காட்சிகளெல்லாம் அதிகம் இல்லை. எட்கர் ரைட்டின் பாணியும், அதுவல்ல. ஆனால் ஜாலியான ஒரு மனநிலையுடன், ஒரு புன்சிரிப்புடன் படம் முடியும்வரை பார்ப்போம். அதுதான் எட்கர் ரைட்டின் பாணி. அந்தவகையில் சொல்லப்போனால் மற்ற இரண்டு படங்களை விடவும் இதில் இன்னும் நன்றாகவே வந்திருக்கிறது. ஒரு காட்சியை ரசித்து சிரித்து முடிப்பதற்குள்ளாகவே அடுத்த காட்சி வந்துவிடும். அப்படி படுவேகமான திரைக்கதை. காட்சிகள் அந்த வேகத்தில் வரும். அதனால் முதல் முறை பார்க்கும்போது கண்டிப்பாக நிறைய விஷயங்களை ரசிக்க தவறுவோம். அடுத்தடுத்து பல தடவைகள் பார்க்கிறமாதிரி படம் எடுப்பது தான் எட்கரின் பாணி. அதுவும் இந்தப்படத்தில் சரியாக அமைந்துள்ளது.
படம் பார்க்கும்போது சுவாரசியம் கெட்டுவிடும் என்பதால் நிறைய காட்சிகளைச் சொல்லாமல் தவிர்க்கிறேன். இல்லையென்றால் இன்னும் நிறைய உதாரணங்களை இங்கே அடுக்கிக்கொண்டே செல்லலாம். படம் பார்த்தவர்கள் (பார்க்காதவர்கள், பார்த்துவிட்டு வந்து) உங்கள் கருத்துக்களையும் பிடித்த காட்சிகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்னொரு பாராட்டத்தக்க விடயம், படத்தில் பல குறியீடுகள் உண்டு என்பதுதான். கலைப்படத்தில் தானே இந்தக் குறியீடெல்லாம் இருக்கும் எதற்கு இந்தக் காமெடிப்படத்தில் குறியீடு என்றால் அதுதான் எட்கர் ரைட்டின் ட்ரேட்மார்க். இந்தப்படத்தில் வரும் 12 பப்களின் பெயரில்கூட குறியீடு இருக்கிறது. படம் பார்க்கும்போது ஒவ்வொரு பப்பும் காண்பிக்கப்படும் போது , படத்தின் சந்தர்ப்ப சூழ்நிலையையும், காட்சியமைப்பையும் கவனித்தால் குறியீடுகள் புரியும். புரியாவிட்டாலும் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. படம் முடிந்து நெட்டில் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தப்படம் எனக்குப் பிடித்திருந்தாலும், இந்த ட்ரைலாஜியில் மிகப்பிடித்த படமென்றால் அது Shaun of the Dead தான். அதற்குப் பிறகுதான் இது. இருந்தாலும் இந்தப்படத்துக்கு நிச்சயமாக எனது ஃபேவரிட் லிஸ்டில் ஒரு இடம் உண்டு. நீங்களும் தவறவிடாமல் இந்தப்படத்தைப் பார்த்து ரசியுங்கள். படத்தின் ட்ரெயிலர் இதோ,
The World's End (2013) - One Night. Six Friends. Twelve Pubs. Total Annihilation.
பி.கு:
1.இந்தப்படத்தில் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் பிராஸ்னனும் நடித்திருக்கிறார்.
2.படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. ஆனால் அவை படம் பார்க்கும்போது கண்ணுக்குத் தெரியாததால் இங்கே குறிப்பிடவில்லை.
3.இத்துடன் இந்த மினிதொடர்பதிவு முடிகிறது.
முந்தைய பகுதி

முற்றும்
திஸ் ஸ் தி எண்ட் ஒரு கட்டுத்துக்கு மேல செம கடுப்பாயிடுச்சு.. ஆனா.. தி வார்ல்ட்ஸ் எண்ட் சூப்பர் படம்.. நோ கம்பேரிஸ்ன்.
ReplyDelete"This is the End" படமும் எனக்குப் பிடிச்சுதான் இருந்துச்சி. ஆனா அதவிட The World's End ரொம்ப பிடிச்சிருந்துச்சி :)
DeleteDjango - 31
ReplyDeleteGodzilla - 30
Tarzan - 29
James Bond - 23//
Friday the 13th - 12
Star Trek - 12
Halloween - 10
Harry Potter - 8
Batman - 8 (Man of Steel sequel is on the way)
Saw - 7
The Texas Chainsaw Massacre - 7
X-Men - 6 (7nth one is on the way)
The Fast and the Furious - 6 (7nth one is on the way)
Child's Play (Chucky series) - 6
Once Upon A Time In China - 6 (China only. others not included)
Rocky - 6
<-> of the dead series - 6
Superman - 6
Die Hard - 5
Paranormal Activity - 5
Psycho - 5
Dirty Harry - 5
Resident Evil - 5
Final Destination - 5
Scary Movie - 5
Wrong Turn - 5
Home Alone - 5
The Twilight Saga - 5
Pirates of the Caribbean - 4 (5th one is on the way)///இவ்வளவு தானா நான் என்னமோ நிறைய இருக்கும்னு நினைச்சேன்
இன்னும் ஏகப்பட்டது இருக்குது தல. நான் ரொம்ப ஃபேமஸா இருக்கற படங்கள மட்டும் தான் சொல்லியிருக்கேன். அதுபோக ட்ரைலாஜில பாத்தீங்கண்ணா நூற்றுக்கணக்குல படங்கள் இருக்கு..!! நெட்ல பாருங்க.. நாம ஆச்சரியப்படுற அளவுக்கு கணக்கு வழக்கு இல்லாம சீரிஸ் இருக்கு.
Delete