முந்தைய பகுதி
அடுத்த பகுதி
மு.கு: போன பதிவை எழுதியபோதே இந்தப்பதிவில் பாதியை எழுதி ட்ராஃப்டில் வைத்திருந்தேன். சில கோளாறுகளால் அந்த ட்ராஃப்ட் முற்றிலுமாக அழிந்து விட்டது. பேக்-அப்பும் எடுத்து வைக்கவில்லை. அதனால் தான் மறுபடியும் அத்தனை விஷயங்களையும் எழுதி பதிவிடுவதற்கு தாமதமாகி விட்டது. மன்னியுங்கள் நண்பர்களே..!!
போன பதிவில் இயக்குனர் எட்கர் ரைட் பற்றிப் பார்த்தோம். மும்மூர்த்திகளில் மற்ற இருவரான சைமன் பெக் மற்றும் நிக் ஃப்ராஸ்ட் பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்.
2.சைமன் பெக் (Simon Pegg):
சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரிஸ் பற்றிய பட்டப்படிப்பைப் படித்துவிட்டு வாய்ப்பு கிடைக்காமல் ஸ்டேண்டப் காமெடியனாக ஆனவர். சிலகாலம் பிரிட்டிஷ் டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலும் வேலை பார்த்துள்ளார். பிறகு தனது நகைச்சுவை உணர்வால் அனைவரையும் கவர்ந்து சில தொலைக்காட்சி சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்தார். 1995 லிருந்து டிவி சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்தவர் சில பல சீரிஸ்களில் நடித்தார். 1999ல் வெளிவந்த "Spaced" (1999) என்ற காமெடி டிவி சீரிஸ்தான் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த சீரிசுக்குப் பிறகு பலராலும் அறியப்பட்ட ஒரு பிரபல நடிகராக ஆனார். அதன்பிறகு ஒருசில திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது. 2004ல் Shaun of the Dead நடித்தபிறகு உலகமெங்கிலும் அறியப்பட்ட நடிகராக ஆனார். அதுவரை மொக்கை பகடி(Spoof) படங்களையே பார்த்து வந்த ரசிகர்களுக்கு அந்தப்படம் ஒரு முற்றிலும் வேறான அனுபவத்தைத் தந்தது.
அந்தப்படத்துக்குப் பிறகு கிடைத்த உலகப்புகழினால் Mission: Impossible III, Star Trek போன்ற படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு கார்னிட்டோ ட்ரைலாஜியின் மற்ற இரண்டு படங்களிலும் நடித்து மேலும் புகழ்பெற்றார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் கதாசிரியராகவும் வல்லவராகத் திகழ்ந்தார். தனது ஆஸ்தான இயக்குனர் எட்கர் ரைட்டுடன் இணைந்து கார்னிட்டோ ட்ரைலாஜியின் 3 படங்களுக்கும் கதை எழுதியுள்ளார். இதுபோக இந்த மும்மூர்த்திகளும் முதன்முதலில் இணைந்த "Spaced" (1999) டிவி சீரிசுக்கும் எட்கர் ரைட்டுடன் இணைந்து கதை எழுதி உள்ளார். தொடர்ந்து இவரைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் இவரது நண்பரும், மும்மூர்த்திகளில் மூன்றாமவருமான நிக் ஃப்ராஸ்ட் பற்றியும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
3.நிக் ஃப்ராஸ்ட் (Nick Frost):
இவரது ஆரம்பகால வாழ்க்கையும் கிட்டத்தட்ட சைமன் பெக்-கின் ஆரம்பகால வாழ்க்கையைப் போன்றது தான். நடிக்க வருவதற்கு முன்பு 6 வருடங்கள் ஒரு ரெஸ்டாரண்டில் வெயிட்டராகவும், சமையல்காரனாகவும் வேலை பார்த்திருக்கிறார். பிறகு சிலகாலம் ஸ்டேண்டப் காமெடியனாகவும் இருந்திருக்கிறார். இவரும் சைமன் பெக்-கும் மிக நெருங்கிய நண்பர்கள் இன்றுவரையிலும். இருவரும் நடிக்க வருவதற்கு முன்பு ஒரே ஃப்ளாட்டில் தங்கியிருந்திருக்கின்றனர். சைமன் பெக் டிவி சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1999ல் Spaced என்ற சீரிசில் சைமன் பெக்-குடன் இணைந்து இவரும் நடித்தார்.
2 சீசன்களும் சேர்த்து மொத்தம் 14 எபிசோடுகள் மட்டுமே அடங்கிய அந்த சீரிசுக்கு இங்கிலாந்து முழுவதும் பெருத்த ஆதரவு கிடைத்தது. சிச்சுவேஷனல் காமெடியை வைத்து எழுதப்பட்ட அந்த சீரிசை இயக்கியவர் எட்கர் ரைட். இப்படி இந்த மூன்று பேரும் முதன்முதலில் இணைந்தது இந்த சீரிசில் தான். இதற்குப் பிறகு மூவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். அதற்குப் பிறகுதான் இந்த கார்னிட்டோ ட்ரைலாஜியை மூவரும் சேர்ந்து உருவாக்கினர்.
இந்த ட்ரைலாஜியில் வரும் 3 படங்களைத் தவிர, சைமன் பெக்-கும், நிக் ஃப்ராஸ்ட்-டும் இணைந்து வேறுசில படங்களிலும் நடித்துள்ளனர். அதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான படம் 2011ல் வெளிவந்த Paul. இந்தப்படத்தில் எட்கர் ரைட்டின் பங்கு எதுவும் இல்லை. ஏலியனை வைத்து பகடி செய்த இந்தப்படத்தின் கதையை சைமன் பெக் + நிக் ஃப்ராஸ்ட் இரண்டு பேருமே இணைந்து எழுதி உள்ளனர். இந்தப்படத்தில் E.T. the Extra-Terrestrial (1982) படத்தில் வருவது போன்ற ஏலியன் ஒன்று இடம்பெற்றிருக்கும். அதைவைத்து எவ்வளவு நகைச்சுவையாக கதையை கொண்டுபோக முடியுமோ அந்தளவு எடுத்திருப்பார்கள்.
இதில் சுவாரசியமான ஒரு ட்ரிவியா இருக்கிறது. தலைவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படங்களான Close Encounters of the Third Kind மற்றும் E.T. the Extra-Terrestrial (1982) படங்கள் இவர்களுக்கு மிகவும் பிடித்த படங்களாம். அந்தப்படங்களைப் பற்றிய குறிப்புகள் Paul படமெங்கும் நிறைந்திருக்கும். நிக் ஃப்ராஸ்டும், சைமன் பெக்கும் இந்தப்படம் தயாரிக்கப் போவதைப் பற்றி ஸ்டீவனிடம் சொல்ல, அவருக்கு அதன் கதை ரொம்பப் பிடித்துப்போய் விட்டதாம். உடனே தானும் இந்தப்படத்தில் ஒருகாட்சியில் கேமியோவாக வருகிறேன் என்று கூறினாராம். அதற்காகவே இந்தப்படத்தில் ஒரு காட்சி சேர்க்கப்பட்டது. அந்தக்காட்சியில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் குரல் மட்டும் வரும். 1982க்கு முன்னால் E.T. படம் எடுப்பதைப் பற்றி ஸ்டீவன் அந்த ஏலியன் Paul-டம் போன் போட்டு பேசுவதாக ஒரு காட்சி வரும்.
அதேபோல ஸ்டீவன் தான் இயக்கிய அடுத்த படமான The Adventures of Tintin படத்தில் சைமன் பெக் + நிக் ஃப்ராஸ்ட் இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்தார். அந்தப்படத்தில் போலிஸ் டிடெக்டிவ் இரட்டையர்களாக வரும் Thomson & Thomson கதாபாத்திரங்களுக்கு சைமன் பெக்கும் நிக் ஃப்ராஸ்டும் குரல் கொடுத்திருப்பார்கள். அதேபோல இன்னொரு முக்கியமான விஷயம் அந்தப்படத்தின் கதையை எழுதியவர்களுள் ஒருவர் எட்கர் ரைட்.
அதுபோக "பால்" படத்தைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. வேற்றுக்கிரகவாசிகளும் சினிமாவும் தொடர்பதிவில் 1947ல் நடைபெற்ற ஒரு மர்ம சம்பவத்தைப்பற்றிப் பார்த்தது நினைவிருக்கிறதா ? அந்த சம்பவத்தில் பூமிக்கு வருகிற ஏலியன் தான் இந்த பால். அதே தொடர்பதிவில் "ஏரியா 51" என்ற மர்ம இடத்தைப் பற்றியும் பார்த்தோம். அதைப்பற்றிய குறிப்பும் இந்தப்படத்தில் வரும். இதுவரை வந்துள்ள அத்தனை ஏலியன் படங்களையும் பகடி செய்வதே தெரியாமல் பகடி செய்திருப்பார்கள்.
இந்தப்படத்தில் வரும் ஒரு காட்சியைப்பற்றி நான் இங்கு பதிவிட்டே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு பார் - அதில் விதவிதமான குடிகாரர்கள் - 2 ஹீரோ & 1 ஹீரோயின் - ஹீரோயினை இரண்டு பேர் கிண்டல் செய்வதால் அதில் ஒருவனை அடித்துவிட்டு ஹீரோக்களிடம் ஓடிவிடுகிறாள் - அவர்கள் இவளை திருப்பி அடிக்க முயலும்போது அது தவறுதலாக வேறு ஒரு க்ரூப் ஆட்களின் மேல் பட்டுவிடுகிறது - அவர்கள் இவர்களை திருப்பி அடிக்க - ஒவ்வொரு க்ரூப்பும் மாறி மாறி அடித்துக்கொள்ள - பிண்ணனியில் ரகளையான ஒரு கிடார் இசை. அந்தக்காட்சி பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்கும். யூட்யூப்பில் தேடிப்பார்த்தேன். காணவில்லை. அந்தப்படம் வைத்திருந்தால் நேராக 57வது நிமிடத்துக்கு சென்று பார்த்தால் அந்தக்காட்சியை ரசிக்கலாம்.
இப்போது எதற்கு இதைக் கூறுகின்றேன் என்று குழப்பம் வருகிறதா ? அப்டியே இந்தப்பதிவிற்கு சென்று அதில் ஒன்பதாவது பாராவை மட்டும் படித்துவிட்டு வாருங்கள். அதில் ஒரு பார் சீன் வருகிறதா ? இப்போது மேலே சொன்ன பார் சீனையும், இந்தப்படத்தில் வரும் பார் சீனையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரே மாதிரி காட்சியமைப்பு தெரிகிறதா ? அவ்வளவுதான் விஷயம். இங்கே இதை ஒரு குற்றமாக நான் சொல்லவில்லை. தமிழ்ப்படங்களில் இதுபோன்ற இன்ஸ்பிரேஷன்கள் சகஜம்தான். அதுபோக காட்சியமைப்பு மட்டும்தான் ஒரே மாதிரி. மற்றபடி இரண்டு படங்களுமே முற்றிலும் வேறுபட்டவை.
இந்த இருவரின் படங்களுக்கும் நான் ஒரு தீவிர ரசிகன். காமெடி என்கிற பேரில் நமது தமிழ்ப்படங்களில் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் கொலையாய்க் கொல்லுவார்கள். இந்தப்பதிவின் ஆரம்பத்தில் அதைப்பற்றி சற்று புலம்பியிருப்பேன். அப்படிப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு மத்தியில் ரசிக்கிற விதத்தில் பகடி காமெடிப்படங்களைத் தருவதில் இவர்கள் மூன்று பேருமே (இயக்குனரோடு சேர்த்து) வல்லவர்கள். இவர்களின் இந்த ட்ரைலாஜி பின்னாட்களில் ஒரு க்ளாசிக் சீரிசாக மாறப்போவது உண்மை. அந்தளவு இவர்களின் படங்களைப் பற்றிப் பேச இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது.
ட்ரைலாஜி என்பதால் மொத்தம் மூன்று படங்கள். ஆனால் பதிவு மட்டும் இரண்டு என்றால் நன்றாகவா இருக்கும். அதனால் இத்தோடு இந்தப்பதிவை முடித்துக்கொண்டு அடுத்த பதிவில் சந்திப்போம். அடுத்த பதிவில் "The World's End" படத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். அத்தோடு இந்த மினிதொடர்பதிவையும் முடித்துவிடலாம்.
முந்தைய பகுதி
அடுத்த பகுதி
தொடரும்-
சூப்பர் பதிவு , தெரியாத தகவல் தெரிஞ்சிட்டேன் மிக்க நன்றி :)
ReplyDeleteவாங்க தல,
Deleteவருகைக்கு மிக்க நன்றி. அப்டியே படம் பாத்து உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.
அருமையான பதிவு, பிடிச்ச விடயங்களைப்பற்றி எழுதும் போது அது இயல்பாகவே சுவாரஷ்யமாக அமைந்துவிடுகிறது. அதை எழுத்தில் கொண்டு வருவதற்குத்தான் படாத பாடு பட வேண்டியிருக்கும்... அது உங்களுக்கு எளிதில் வருகிறது.
ReplyDeleteநமக்கும் மிகப்பிடித்த இயக்குனர். இவர் ஸ்டைலை பின்பற்றித்தான்.....
//அதை எழுத்தில் கொண்டு வருவதற்குத்தான் படாத பாடு பட வேண்டியிருக்கும்// - இதைத்தான் நல்ல கலாய்ப்பு என்பர்.
Delete//இவர் ஸ்டைலை பின்பற்றித்தான்.....//
இப்போலாம் கமெண்ட்லயே சஸ்பென்ஸ் வைக்க ஆரம்பிச்சிட்டீங்களா.. பலே பலே.. நடத்துங்க..!!
ஜி சூப்பர் ஜி,
ReplyDeleteஜி. தேங்க்ஸ் ஜி. :)
DeleteJi Now You C Me film paathean...Nalla irunthuci mikka nandri...
ReplyDeleteஅருண் குமார் ஜி,
Deleteதேங்க்ஸ்ஜி. படம் பாத்துட்டு, இவ்ளோ தூரம் வந்து சொல்லிருக்கீங்க. உங்க வருகைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக.