கற்பனைக்கும் அறிவியலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது க்ரியேட்டிவிட்டி. நேற்றைக்கு கற்பனையாக இருந்த ஒரு விஷயம் இன்றைக்கு அறிவியலால் உண்மையாகி இருக்கிறது. அறிவியல் புனைவுகளில் கற்பனையாக சொல்லப்பட்ட பல விஷயங்கள் இன்றைக்கு உண்மையிலேயே சாத்தியமாகி இருக்கின்றன. அப்படி இன்றைய அறிவியல் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு முன்னேறி இருக்கின்றது. சென்ற நூற்றாண்டு மனிதனிடம் சென்று "உலகின் எந்த மூலையில் இருக்கும் மனிதனிடமும் உடனடியாகப் பேசலாம்" என்று சொன்னால் நல்ல அறிவியல் கதை என்று சிரிப்பான். ஆனால் இன்று மொபைல் என்ற கருவியின் மூலம் அது உண்மையிலேயே சாத்தியமாகி இருக்கிறது.
இதுபோன்ற பல புதிய விஷயங்கள் அறிவியலினால் சாத்தியமாக இருந்தாலும், இயற்கையை மட்டும் மனிதனால் முழுவதுமாக அறிந்துகொள்ள முடியவில்லை. இதுவரை மனிதன் இயற்கையைப் பற்றி தெரிந்து கொண்டது 1 சதவீதத்திற்கும் குறைவே என்றால் அது மிகையில்லை. உலகம் எப்படி தோன்றியது என்பதில் தொடங்கி பிரபஞ்சம் எப்படி விரிந்துகொண்டே செல்கிறது என்பது வரை பல ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த இயற்கை. அவ்வளவு ஏன் இந்த பூமியிலேயே மனிதனால் அறிந்துகொள்ளப்படாத பல விடயங்கள் உள்ளன. உதாரணத்திற்கு "பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle)".
பல மர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தப்பகுதியில் பல அமானுட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இன்றைய அறிவியலினால் கூட அந்தப்பகுதியைப் பற்றியும், அங்கு நடந்த அமானுட சம்பவங்களைப் பற்றிய விளக்கங்களையும் தெளிவாகக் கூற முடியவில்லை. இது இன்றைக்கும் இயற்கையின் ஒரு மர்மமாகவே இருக்கின்றது. இதுபோன்ற விடை கண்டுபிடிக்க முடியாத பல விடயங்கள் இந்த பூமி கிரகத்திலேயே இருக்கின்றன. அறிவியலினால் விடை கண்டுபிடிக்க முடியாத இந்த இடத்துக்கு கற்பனையினால் பல புனைவுகளும், தியரிகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
அதில் ஒன்றுதான் ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் இருப்பு. அங்கு ஏலியன்கள் வசிப்பதாகவும், நம்மால் பார்க்க முடியாத அளவுக்கு அங்கு பல வசதிகளுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதாய் கதையை கட்டி புத்தகங்களும், படமும் எடுத்து கல்லா கட்டி விட்டனர். இன்னும் சில தியரிகளைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். அந்தப்பகுதியில் பயணித்த கப்பல்களும், விமானங்களும் கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போய்விட்டன. அதற்கு காரணம் இந்த பெர்முடா முக்கோணம் ஒரு ஊடகமாய் இருப்பதால் தான். எதற்குரிய ஊடகம் ?
இங்குதான் டைம் ட்ராவல், மல்டிவெர்ஸ், பேரலல் யுனிவெர்ஸ் கான்சப்டுகள் வருகின்றன. நாம் வாழும் இந்த உலகம் அல்லது பிரபஞ்சத்திற்கு இணையான, பல பிரபஞ்சங்கள் இருக்கின்றன. நம் ஒவ்வொருவரும் அந்த பேரலல் யுனிவெர்சிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு நல்லவனாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அந்த பேரலல் யுனிவெர்சில் பயங்கர வில்லனாக வாழ்ந்துகொண்டிருக்கலாம். இங்கு சாதாரண ஐ.டி. கூலித்தொழிலாளியாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அந்த பேரலல் யுனிவெர்சில் இந்தியாவின் பிரதமராகக்கூட வாழ்ந்துகொண்டிருக்கலாம். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான கணக்கிட முடியாத அளவு பல யுனிவெர்ஸ்கள் இருப்பதாக ஒரு தியரி சொல்கிறது.
சரி. இதற்கும் பெர்முடா முக்கோணத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றுகிறதா ? அதற்கும் நமது கற்பனையாளர்கள் ஒரு முடிச்சு போட்டு வைத்திருக்கின்றனர். அப்படி பேரலல் யுனிவெர்ஸ் இருப்பதை நம்மால் உணரவோ அல்லது அந்த யுனிவெர்சுக்கு போகவோ முடியாது. அப்படி போகவேண்டுமென்றால் அளவுகடந்த சக்தி தேவைப்படும். அப்படியே சக்தி கிடைத்தாலும் நம்மால் அதைப் பயன்படுத்தும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்காது. முகப்புத்தகத்தில் அண்ணன் ராஜ்சிவாவின் அறிவியல் கட்டுரைகளைப் படித்தால் இந்த விடயங்களை இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.
பெர்முடா முக்கோணம் இந்த பேரலல் யுனிவெர்சுகளுக்கு இடையே பயணம் செய்ய ஊடகமாக பயன்படுகிறது என்பதுதான் நமது கற்பனையாளர்களின் தியரி. அதெப்படி இதை ஒரு ஊடகமாகப் பயன்படுத்த முடியும் ? இது எப்படி சாத்தியமாகும் ? என்றெல்லாம் யோசித்தால் அதற்கும் விளக்கம் வைத்திருக்கிறார்கள். இதுவரை இங்கு நடந்துள்ள அமானுட சம்பவங்களை அவர்கள் உதாரணமாகச் சொல்கிறார்கள். இதுவரை இந்தப்பகுதியில் பறந்த விமானங்களோ, கப்பல்களோ திரும்பி கண்டுபிடிக்கப்படவே இல்லை. அவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் இந்த முக்கோணப்பகுதியில் இருக்கும் அளவுகடந்த அமானுட சக்தியின் மூலமாக வேறு யுனிவெர்சுக்கு பயணம் செய்துவிட்டார்கள். அதனாலேயே அவர்களைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் விளக்கம் கொடுக்கிறார்கள்.
குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் பிளைட் 19. டிசம்பர் 5, 1945ம் ஆண்டு அட்லாண்டிக் பகுதியில் பறந்துசென்ற பிளைட் 19 எனும் குண்டுவீச்சுப் பயிற்சி விமானம் காணாமல் போனது. போர்க்கப்பலில் இருந்து பறந்து சென்ற இந்த விமானம் திட்டமிடப்பட்ட பாதையில் பறந்து, பெர்முடா முக்கோணப் பகுதியில் பறக்கும்போது மறைந்துவிட்டது. இதற்கு மேல் ஆச்சரியமூட்டும் வகையில் இன்னொரு சம்பவம் நடந்தது. பிளைட் 19 காணாமல் போனதால் அதைக் கண்டுபிடிப்பதற்காக 13 பேர் கொண்ட தேடுதல் & மீட்புப்படை விமானம் அனுப்பப்பட்டது. அந்த விமானமும் பெர்முடா முக்கோணப்பகுதியில் பறந்தபோது மறைந்து விட்டது. இதுபோல பல சம்பவங்கள் இங்கே நடந்துள்ளன. அவை வேறு ஒரு யுனிவெர்சுக்கு பயணம் செய்துவிட்டதாலேயே அவற்றை திருப்பி கண்டுபிடிக்க முடியவில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், இப்படியும் நடக்க சாத்தியம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி வேறு யுனிவெர்சுக்கு போகமுடியாவிட்டால் அவர்கள் வேறு எங்கு சென்றிருப்பார்கள் என்பதற்கும் ஒரு தியரி இருக்கிறது. இங்கே தான் ஏலியன்களின் பங்கு வருகிறது. இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிரகங்களில் வேறு சில உயிரினங்களும் இருக்கலாம். அவை நம் மனித இனத்தை விட சக்தி வாய்ந்ததாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட, மனிதனை விட அறிவியலில் மேம்பட்ட உயிரினங்கள் வந்துபோகும் வழியாக, ஊடகமாக பெர்முடா முக்கோணத்தைக் கருதுகின்றனர்.
"தோர்" படம் நாம் எல்லோரும் பார்த்திருப்போம். அதில் ஒரு கிரகத்தில் இருந்து இன்னொரு கிரகத்திற்கு செல்வதற்கு Bifrost எனும் ஊடகத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இது அண்டவெளியின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்தை இணைக்கும் ப்ரிட்ஜ் ஆக செயல்படுகிறது. இதன் மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு உடனடியாக சென்று சேரலாம். இன்றைய அறிவியலிலும் "கருந்துளை (Black Hole)" என்ற ஒரு கான்செப்ட் உண்டு. இந்த கருந்துளைகளைப் பயன்படுத்தும் ஆற்றல் கிடைத்தால் அண்டவெளியின் எந்தவொரு இடத்திற்கும் நினைத்த நேரத்திற்குப் போய் விடலாம்.
அப்படிப்பட்ட ஒரு துளையாக இந்த பெர்முடா முக்கோணம் இருக்கலாம் என்றும் கருதுகின்றனர். இந்த வழியாக ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்கின்றனர். அதைப்போலவே இந்த வழியில் சென்ற கப்பல்களும், விமானங்களும் இந்தப்பகுதியின் சக்தியை கட்டுப்படுத்த முடியாமல், அப்படியே அண்டவெளிக்கு சென்றுவிட்டன. ஏலியன்கள் வாழும் ஏதோ ஒரு கிரகத்தில் அவை இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இப்படிப் பல மர்மங்கள் நிறைந்த இந்தப்பகுதியைப்பற்றி இன்னும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இயற்கை எவ்வளவு ஆச்சரியங்கள் நிறைந்தது என்று தெரிந்து கொள்ளலாம். இயற்கையின் சக்தியை ஒருபோதும் மனிதனால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள இயலாது என்பதையே இந்த உதாரணம் உணர்த்துகிறது.
ஆனால் நான் இங்கு குறிப்பிட விரும்பிய விடயமே வேறு. அப்படி ஏலியன்களின் இருப்பைப்பற்றிய கற்பனையாகவும் இந்த பெர்முடா முக்கோணம் அமைந்துவிட்டது. உண்மையிலேயே ஏலியன்கள் இருக்கிறதா ? அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் எந்த அளவில் நடந்து கொண்டிருக்கிறது ? இதுவரை ஏலியன்கள் பற்றியும் அவற்றின் இருப்பை உறுதி செய்யும் நோக்கில் வந்த பறக்கும் தட்டுக்களைப் பற்றியும் வரலாற்றில் என்னவெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ? அரசு இதைக் கண்டுபிடிப்பதற்கென எடுத்த முயற்சிகள் என்னென்ன ?
இந்தக்கேள்விகளுக்கான பதில்களையும், ஹாலிவுட் சினிமா ஏலியன்களை வைத்து நடத்திய கற்பனை யுத்தத்தையும் அடுத்த பதிவில் காண்போம். (பயப்படாதீங்க.. ரொம்ப பெரிய தொடர்லாம் எழுதி பயமுறுத்த மாட்டேன். ஒன்றிரண்டு பதிவுகளோடு முடிந்து விடும் சிறிய தொடர் இது)
பெர்முடா முக்கோணத்தைப் போலவே பல மர்மங்கள் நிறைந்த இன்னொரு இடத்தைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம். ஓரிரு நாட்களில் அடுத்த பதிவு. (அப்பறம் இந்தப் பதிவுல புத்சா, இதுக்கு முன்னாடி பதிவுகள்ல இல்லாத ஒரு மேட்டரு இருக்கு.. என்னானு கண்டுபிடிங்க பாக்கலாம். அதுக்கு க்ளூ இந்த லாஸ்ட் லைன்லயே இருக்கு)
தொடரும்-
வியக்க வைக்கும் தகவல்கள்...
ReplyDeleteமுகப்புத்தகத்தில் ராஜ்சிவா அவர்களின் அறிவியல் கட்டுரைகளை வாசிக்க வேண்டும்... நன்றி...
க்ளூ என்ன தொடருமா...? தொடர வாழ்த்துக்கள்...
வருகைக்கு மிக்க நன்றிங்ணா..!!
Deleteக்ளூ - இந்த தொடர் சம்பந்தமானது அல்ல.. அது இந்தப்பதிவு எழுதப்பட்டிருக்கும் பாணி சம்பந்தமானது. இதுக்கு முன்னாடி பேச்சு வழக்குல எழுதிட்டு இருந்தேன்.. இதுல எழுத்து வழக்குல முடிஞ்ச வரைக்கும் ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து எழுதி இருக்கேன்.. அதத்தான் அப்டி சொல்லியிருக்கேன்..!!
நீங்க இதுல குறிப்பிடுற பல விஷயங்கள உங்க கட்டுரைய தொடர்ந்துட்டே நானும் கற்றுக்கொள்ளுகிறேன் நண்பா :) :) நீங்க நிறைய விஷயங்கள பற்றி அசால்டா எழுதுகிறேலே நன்று எல்லோருக்கும் புரிவது போல அங்க நிக்குறேல். அப்புறம் ட்விஸ்ட் க்ளு ரெம்ப யோசிச்சிட்டேன் இதுல நீங்க தொடருங்க அடுத்ததுல தெரிஞ்சுக்குறேன் நண்பா :) :)
ReplyDeleteவாங்க தல,
Deleteஅந்த க்ளு விஷயம் என்னானு மேல இருக்கற கமெண்ட்ல சொல்லிருக்கேன் பாருங்க. அந்த லாஸ்ட் லைன் மட்டும் பேச்சு வழக்குல இருக்கும். மத்ததெல்லாம் எழுத்து வழக்குல இருக்கும்.
Lost City of Atlantis - i guess
ReplyDeleteக்ளூ பத்தி சொல்றீங்களா ? அது இல்லை. மேல இருக்கற கமெண்டை மறுபடியும் படிங்க..!! :)
Deleteஆ... நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா... ஒரு தொடர் முடியரதுக்குள்ள இன்னொன்னு.... நல்லது நல்லது சீக்கிரமே பிர்பல பதிவராயிருவிங்க..... (சும்மா தமாசுக்கு சீரியசா எடுத்துக்காதீங்க)....
ReplyDeleteஅப்பறம் என்ன டெம்ளேட் வசனம் தான் - அருமையான பதிவு
//ஒரு தொடர் முடியறதுக்குள்ள//
Deleteஆரம்பிச்சா தானே முடிக்கறதுக்கு.. :P கண்டிப்பா டைம் ட்ராவல் தொடரை மறுபடியும் ஆரம்பிக்கறேன் தல.
அப்புறம் என்ன டெம்ளேட் வசனம் தான் - மிக்க நன்றி ஹிஹி..!!
ஆஹா! மொழிமாற்றி ஒரு பயணம். சினிமா உதாரணமின்றி ஒரு சினிமா பதிவு... இதெல்லாம் இன்னும் தியறியாகத்தான் இருக்கின்றது என்பதை கவனத்திற் கொள்க. நமக்கென்ன கண்ணுக்கு முன்னுக்கு இருக்குற சிலந்திய விட இல்லாத சிலந்திய பத்திதான் கவலை. மர்மம் இருக்கும் வரைதான் தேடல் அது துலங்கி விட்டால் அட அவ்வளவுதானா என்று இன்னொரு மர்மத்தை தேட ஆரம்பித்து விடுவோம். உண்மையை விட அதற்கான தேடல்தான் அலாதியானது த்ரில்லானது! அருமை!
ReplyDeleteஅலாதியானது - இந்த வார்த்தை எனக்கு ரொம்ப புடிச்சுப்போச்சு. அடுத்தடுத்து நா இத யூஸ் பண்ணப்போறேன்..!!
Deleteஇதெல்லாமே தியரியாக இப்போது இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அறிவியல் வளரும்போது நிரூபணம் ஆகலாம் என்று எனக்கு நம்பிக்கையிருக்கு.
//சினிமா உதாரணமின்றி ஒரு சினிமா பதிவு// - பாராட்டுறீங்களா இல்ல கலாய்க்கறீங்களானே தெரியலியே.. :)
what a man ..
ReplyDeleteIndha paiyanukkula ennamo irundhirukku paaren ...
எனக்கு 7/G லொள்ளுசபா தான் ஞாபகம் வருது மச்சி.. :) ;)
Deletesuperb... (note : thanglish la type panrathuku sorry) unga kita irunthu narya ethir pakuren... Aliens, pramid, ipdi narya ethir pakuren.... sekram adutha pathiva post pannuga... waiting... :)
ReplyDeleteபிரமிட்க்கும் ஏலியன்களுக்கும் நிறைய தொடர்பு இருக்குனு நான் இது சம்பந்தமா தேடினப்போ தெரிஞ்சுக்கிட்டேன்.. நீங்களும் அப்போ நிறைய தேடி படிச்சுருக்கீங்க போல..!! அய்யகோ அப்ப பயமால இருக்கு.. எதுனா நான் பாட்டுக்கு கதை வுட முடியாது.. கேட்ச் பண்ணிருவீங்க.. :) :)
Deleteஇருந்தாலும் ஏலியன் வச்சு வந்த படங்கள பத்தி தான் நாம அடுத்தடுத்து பாக்கப்போறோம். சினிமா தான் நமது மெயின் குறிக்கோள்.. :) (இருந்தாலும் உங்க எதிர்பார்ப்பு எனக்கு பயத்தையே கொடுக்குது.. இன்னும் நல்லா எயுதனுமே)
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!!
ஆண்டிச்சாமி, இவ்ளோ விஷயங்களை மண்டைக்குள்ள வச்சிக்கிட்டு எதுக்கய்யா ஹாங்க் ஓவர் பார்ட் த்ரீயெல்லாம்... என்னமோ போடா மாதவா, இந்தப் பயபுள்ள போகுற ரூட்டே புரியல
ReplyDeleteஇவ்ளோ விஷயங்களும் என் மண்டைக்குள்ள இல்லேங்க.. இணையத்துல இருந்துச்சு.. ஹிஹி.. :)
Deleteஅந்த ஹேங்கோவர் 3 - சும்மா என் காலேஜ்ல படிக்கும்போது ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வர்ற மாதிரி ஒரு படம் எடுறானு ஃப்ரண்ட்ஸ் கேக்க, அந்த சமயம் பாத்து ஹேங்கோவர் பாக்க, அப்டியே அத கொஞ்சம் இன்ஸ்பிரேஷனா வச்சு எடுத்துப்புட்டோம்.. வேற ஒன்னியுமில்ல.. :)