Jul 16, 2013

Pacific Rim(2013) 3D - பாப்கார்ன் படம்


இயக்குனர் கியர்மோ டெல் டோரா (அப்படித்தான் சொல்லனுமாம்) எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவர். இவரது முந்தைய படங்கள கண்டிப்பா பார்த்திருப்பீங்க. எனக்கும் ரொம்ப பிடித்த படங்கள் அவை. அவரோட டைரக்சன்ல, மெகா பட்ஜெட்ல, பிரமாண்டமா வந்துருக்கற, இந்தப்படத்தோட ட்ரைலர் வந்தப்பவே எதிர்பார்ப்பும் எகிற ஆரம்பிச்சுருச்சு. படம் வெளிவந்து பல பேரும் ஆஹா ஓஹோ என சிலாகிக்க, கருந்தேளும் தனது பதிவில சூப்பர் டூப்பர்னு புகழ்ந்து தள்ள, ஃபேஸ்புக் பூரா இந்த செய்திகளா இருக்க, எனக்கோ படம் பாத்தே ஆகனும்னு வெறியாய்டுச்சு. என்னோட இவ்ளோ எதிர்பார்ப்பயும் படம் பூர்த்தி பண்ணியதா ?

படத்த பத்தி சொல்லறதுக்கு முன்னாடி எந்த மாதிரி மனநிலையில தியேட்டருக்கு போனேன்னு சொல்லவேண்டியது அவசியம். சனி, ஞாயிறு டிக்கெட் ரேட் 400, 500 னு இருக்க, நான் திங்கட்கிழமை காலை ஷோவுக்கு புக் பண்ணேன். (ரூபாய் 150 ஒண்டிதான்). நம்ம ஃப்ரண்ட்ஸ்லாம் ஒரு மொக்க பாடாவதி தமிழ் படத்துக்கு கூப்பிட்டா கூட வருவாய்ங்க. ஆனா ஹாலிவுட் இங்கிலிபீசு படம்னா மட்டும் சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிச்சுருவாய்ங்க. வேற வழியில்லாம தனியாவே போக வேண்டிய கட்டாயம். முந்தின நாள் 1 மணி வரை டெக்ஸ்டர் பாத்துட்டு இருந்தேன். மறுபடி காலங்காத்தால தூக்கம் வராம 6 மணிக்கெல்லாம் எந்திரிச்சு இன்னொரு எபிசோடு டெக்ஸ்டர் பாத்தேன். அப்புறம் கெளம்பி ட்ராபிக்ல சிக்கி சீரழிஞ்சு ஆபிஸ் போயி அங்க பேக்(Bag) வச்சுட்டு அப்டியே தியேட்டருக்கு போனேன். (Q Cinemas, Park Square Mall, ITPL).

இன்னொரு முக்கியமான விஷயம் எனக்கு இந்த 3டி-யில படம் பாக்குறது சுத்தமா பிடிக்காது. ஆனா அங்க 2டி இல்ல. 3டி-லதான் போட்டுருந்தாய்ங்க. பொதுவா படத்தோட பிரமாண்டத்தயே இந்த 3டி தான் கெடுக்குதுங்கறது என்னோட தாழ்மையான கருத்து. படம் சொல்ல வர்ற கருத்து முக்கியமில்லாம, 3டி டெப்த் தான் முதல்ல தெரியும். இன்னிக்கு அனுபவத்துல இருந்து இனிமே படம் பாக்காம இருந்தாலும் இருப்பனே தவிர, 3டி படத்துக்கு மட்டும் போகக்கூடாதுனு முடிவே எடுத்துட்டேன். அவ்ளோ கண் எரிச்சலைக் கொடுத்துருச்சு இந்தப்படம்(3டி). ப்ரைட்னஸ் வேற ரொம்ப கம்மி. கண் எல்லாம் கொஞ்ச நேரத்துலயே வலிக்க ஆரம்பிச்சுருச்சு.

இவ்ளோ சங்கடத்துலயும் படத்த ஒரு ஆர்வத்தோட பாக்க உக்காந்துருந்தேன். என் எதிர்பார்ப்பு எல்லாம் பூர்த்தியானதானு கேட்டா ஒரு கேள்விக்குறி தான் பதில். படத்தோட கதை, ஹாலிவுட்ல பாடாவதி டைரக்டர் மொதக்கொண்டு அத்தனை பேரும் அடிச்சு தொவச்சு காயப்போட்டு சட்னியாக்குன அதே ஏலியன் கதை. ஏலியன்கள், பூமி மேல ஆசைப்பட்டு, மக்களையெல்லாம் கொன்னுட்டு குடியேற ஆசைப்படுதுங்க. இதுக்கு முன்னாடியே ஒரு தடவை டைனோசரா வந்து உளவு பாத்துட்டு போயிருக்குதுங்க. இப்போதான் கரெக்டான சூழ்நிலை அமைஞ்சதால, பெரிய பெரிய கைஜு(kaiju)-ங்கற மிருகங்களை அனுப்பி உலகத்த அழிக்க ட்ரை பண்ணுதுங்க. அதுங்களை அழிக்க மனிதர்கள்லாம் சேர்ந்து ஜேகர்(Jaeger)ங்கற பிரமாண்டமான ரோபோட்ட உருவாக்கறாங்க. மனிதர்களுக்கும் ஏலியன்களுக்கும் நடந்த இந்தப் போராட்டத்துல யாரு ஜெயிச்சாங்கங்கறது தான் படமே.

படத்தோட கதை அடுத்தடுத்து இப்டித்தான் போகப்போகுதுனு நல்லா யூகிக்க முடியுது. யூகித்த மாதிரியே அடுத்தடுத்த சீன் வர, செம போர் அடிக்குது. படம் பாக்கும் போது வேற சில படங்கள் நினைவுக்கு வந்துட்டுப் போனத தடுக்க முடியலை. இண்டிபெண்டன்ஸ் டே படம் அடிக்கடி நினைவுக்கு வந்தது. அதில அமெரிக்க அதிபர் ஒரு ஸ்பீச் கொடுப்பாரு. (இன்னிக்கு பாத்தாலும் எனக்கு புல்லரிக்கற சீன்). அதே மாதிரியே இங்கேயும் ஒரு ஸ்பீச் வருது. (இதே கருத்த ஃபேஸ்புக்ல நண்பர் பாரத்-தும் சொல்லிருக்காரு). இண்டிபெண்டன்ஸ் டே படம் பாத்தவங்க அத்தனை பேருக்கும், இந்தப்படம் பாக்கும்போது, அந்த சீன் கண்டிப்பா நினைவு வரும்.

இந்த மாதிரி படங்கள் ஏற்கனவே நிறைய பாத்தாச்சு. ஒரே மாதிரியான கதையும் கூட. போன வருஷம் வந்த "பேட்டில்ஷிப்(Battleship)" படம் கூட இதே கதை தான். இந்த மாதிரி படத்துல லாஜிக் பாக்கக்கூடாது தான். இருந்தாலும் நிறைய இடங்கள்ல சரியான விளக்கம் கொடுக்காம படம் அடுத்தடுத்து நகர்ந்துடுது. ஒருவேளை அடுத்த பாகத்துக்கு அடிபோடறாங்களோ என்னமோ ?! முதல்ல கைஜுக்களை சமாளிக்க முடியாம திணறி, மறுபடி உத்வேகத்தோட சண்டை போடறப்ப நமக்கு புல்லரிக்கனும்னு எதிர்பாக்குறாங்க போல. அட போங்கய்யா என்றே தோன்றியது. கைஜுக்களை பாக்கற போதெல்லாம் எனக்கு டைனோசார் தான் ஞாபகம் வந்தது. என்ன ஒரே வித்தியாசம்னா இது சைசு ரொம்ப ஜாஸ்தி அவ்ளோதான்.


இத்தனையும் தாண்டி என்னை 2 மணி நேரம் தியேட்டர்ல உக்கார வச்சது எதுனு கேட்டா சந்தேகமே இல்லாம பரபரப்பான ஆக்சன் சீன்கள் தான். வள வளானு இல்லாம முதல் சீன்லருந்தே கதை ஆரம்பிச்சுருது. முழுக்க முழுக்க க்ளிசே காட்சிகள் நிறைந்த படமா இருந்தாலும் அதிலும் தன்னோட தனித்தன்மையக் காண்பிச்சு அத மறக்கடிச்சுடறாரு GDT. உதாரணத்திற்கு ஏலியன்கள் வானத்திலிருந்து குதிக்காம பசிபிக் கடல்லருந்து வர்றது, ரெண்டு பேர் சேர்ந்து ஜேகரை இயக்கறது, ஆக்சன் படமா, வழக்கமான கதையா இருந்தாலும் அதையே அழுத்தமா சொன்னதுனு நிறைய சொல்லலாம். ஹீரோயினோட ஃப்ளாஸ்பேக் தெரிஞ்சுக்கிட்டு ஹீரோ அவள புரிஞ்சுக்கறது கவிதையா இருந்தது.

ஹீரோ ஹீரோயினுக்கு இடையில முதல்ல வர்ற அந்த சிலம்பு சண்டை ரொம்ப சுவாரசியமா இருந்தது. நம் தமிழ்நாட்டோட தற்காப்புக்கலை ஒரு ஹாலிவுட் படத்துல வருதேனு நினைக்கிறப்ப கொஞ்சம் பெருமையா இருக்குல. ஹீரோ ஒரு வித ஏளனத்தோட ஹீரோயின் கூட சண்டை போட, ஹீரோயின் சரிசமமா சிலம்பு சுத்தி அசரடிக்கறது  அருமை.

கைஜு பத்தி ஆராய்ச்சி செய்யுற ரெண்டு விஞ்ஞானிகளுக்கிடையேயான காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம். கேப்டன் ஹீரோட்ட வந்து "நீ இப்போ சண்டை போட வரலேன்னா இன்னும் கொஞ்ச காலத்துல பூமியே அழிஞ்சுரும். அப்போ சாகறதுக்கு இப்போ சண்டை போட்டு சாகறது மேல்"னு சொல்லி ஜேகரை இயக்கறதுக்கு கூப்பிடுவாரு. இதுபோல நறுக்குத் தெறித்தாற்போல குட்டி குட்டி வசனங்கள்ல நம் கவனத்தை ஈர்க்கிறார் டைரக்டர். அப்பறம் கதாபாத்திர படைப்புல ரொம்பவே மெனக்கெட்டிருக்காரு. சும்மா ஏனோதானோனு இல்லாம ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து படம் பண்ணிருக்காரு. அதுதான் இந்தப்படம் கொஞ்சமேனும் மனசுல இடம் பிடிக்க காரணமா இருக்கு.

இந்தப்படத்தின் மிக முக்கியமான மற்றொரு விஷயம் படத்தின் ஸிஜி. சமீபத்துல இந்த மாதிரி ரியாலிட்டியான ஸிஜி ஆக்சன் பாக்கலைனு தான் சொல்லனும். அவ்ளோ தத்ரூபமா இருக்கு. அந்த ஜேகர் ரோபோட்டுகளுக்கும், கைஜு மான்ஸ்டர்களுக்கும் உயிர் கொடுத்து நம்ம கண் முன்னாடி அலைய விட்டுருக்காரு GDT. ஒவ்வொரு ஜேகரின் டிசைனையும் பாத்து பாத்து உருவாக்கியிருக்காரு. அதோட கலருக்காக பல ஓவியங்களைப் பாத்து இன்ஸ்பைர் ஆனாராம். இந்த அளவு உழைச்சதுனால தான் ஜேகர்களுக்கும், ட்ரான்ஸ்ஃபார்மர்களுக்கும் நல்லா வித்தியாசம் தெரியுது.

பிரமாண்டமா எடுக்கனும்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் எவ்ளோனுலாம் யோசிக்க கூடாது. பிரமாண்டத்தின் எல்லை எதுவோ அது வரை போலாம்னு நினச்சுட்டாரு போல. அவ்ளோ பிரமாண்டம். எனக்குத் தெரிந்து இவ்ளோ பிரமாண்டமான படம் நான் பாத்தது கிடையாது. இதுக்கு மேல ஒருத்தன் பிரமாண்டமா யோசிக்கனும்னா எங்க ஆளு ஷங்கர் தான் ஹாலிவுட்டுக்கு போகனும். எல்லார் வயித்துலயும் புலி படம் வரையறது, ரோடு, லாரிக்கெல்லாம் பெயிண்ட் அடிக்குறதுனு யாருக்குமே தோணாத பிரமாண்டத்த எடுத்த அவருக்கு இதலாம் ஜூஜிபி.

அப்புறம் இந்தப் பிரமாண்டத்துக்கு மகுடம் சேத்ததுனா அது பிண்ணனி இசை. காட்சிக்காக புல்லரிக்குதோ இல்லியோ, ஆனா இந்தப்படத்தின் பிண்ணனி இசை நிச்சயம் புல்லரிக்க வைக்கும். அதுவும் ஜேகர் ரெடியாகும்போது ஒரு ம்யூசிக் வரும் பாருங்க. அற்புதம். ஒலிக்கலவையும் மிரட்டுது. இந்தப் பிரமாண்டத்துகாகவும், இசைக்காகவுமே கூட இன்னொரு தடவை படம் பாப்பேன். அவ்ளோ நல்லா மிரட்டலான இசை. கேமரா கோணங்கள் ஒவ்வொன்னும் ஆல்ரெடி பிரமாண்டமான காட்சிய இன்னும் பிரமாண்டமா காமிக்குது.

மொத்தம் கிட்டத்தட்ட 1500கோடி ரூபாய் போட்டு எடுத்துருக்காங்க. எனக்கென்னவோ லாபம் பார்த்துடுவாங்கனு தான் தோணுது. வழக்கமான கதையா இல்லாம, கொஞ்சம் வேற மாதிரி யோசிச்சு வித்தியாசமா எடுத்துருந்தா மனசார வாழ்த்தியிருக்கலாம். இப்போ கொஞ்சம் சுணங்கிக்கிட்டே நல்லாருக்கு.. ஆனா........னு இழுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டாச்சு. இது கண்டிப்பா GDT-ன் திரையுலக வாழ்க்கைல மைல் கல் தான். ஆனா பெஸ்ட் இல்ல.

மொத்தத்துல உங்களுக்கு இந்த பிரமாண்டம், ரோபாட்டுகள், கைஜு மாதிரியான பிரமாண்ட விலங்குகள் இதலாம்லாம் பிடிக்கும்னா கண்டிப்பா இந்தப்படமும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனா தலையில தூக்கி வச்சு கொண்டாடற அளவுக்கு ஸிஜியும், இசையும், ஆக்சனும் படத்துல இருக்கு. முக்கியமா என்னைப்போன்ற சிறுவர்களுக்கு படம் ரொம்ப பிடிச்சுரும். அதனால வீட்டுல இருக்கற கொழந்த குட்டிகளோட போயி பாத்துட்டு வாங்க. ஒரு பெரிய பிரமாண்டமான பாப்கார்ன் பாக்ஸோட படம் பாக்க உக்காந்திங்கன்னா ஒரு நல்ல என்டர்டெயினர் காத்துக்கிட்டிருக்கு. (3டி-ல தயவுசெய்து பாக்காதிங்க..வேஸ்ட்டு)

Pacific Rim(2013) 3D - பாப்கார்ன் வாங்கலியோ பாப்கார்ன்...!!!

6 comments:

  1. தம்பி...கருந்தேள் பதிவை நம்பி நானும் படம் பாத்தேன்.
    வழக்கமா ஹாலிவுட் திரில்லர் படம் பாத்தா பீதியாகும்.
    இந்தப்படம் பாத்த பிறகு பேதியாயிருச்சு.

    ஹாலிவுட் எவ்வளவு நல்ல டைரக்டரையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி விடும்.
    அதை அடக்கி தன் வசப்படுத்திய ஆண்மகன்கள் ஒரு சிலரே.
    இந்த இயக்குனருக்கு ஆண்மை இல்லை.

    இந்தப்படத்தை, 2டி,3டி எந்த எழவு டியிலும் பாத்தாலும்...
    சங்குதாண்டி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்,

      உலக சினிமா பாக்குற உங்களுக்கு இந்த ஆக்சன் படம் பிடிக்காம போனதுல ஆச்சரியம் இல்ல. ஆனா ஆக்சன் படங்கள விரும்பி பாக்குற எனக்கே சற்று ஏமாற்றம் தான்.(எதிர்பார்ப்பில்லாம போயிருக்கனும் போல)

      இவரோட இதற்கு முந்தைய படங்கள்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால இந்த ஒரு படத்த மட்டும் வச்சு எடை போடறது சரியில்லைங்கறது என்னோட தாழ்மையான கருத்து. சரி விடுங்க அடுத்த படம் வரும்போது பழைய ஆளா வர்றாரானு பாப்போம்..!!

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. :)

      Delete
  2. கருந்தேளின் பதிவை படித்துவிட்டு நானும், நண்பனும் அதீத எதிர்பார்ப்பில் இருக்கிறோம். இங்கே நாளை தான் படம் வெளியாகிறது. பார்ப்போம் எப்படி யிருக்கிறது என்று.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சாய் பிரசாத்,

      உங்க எதிர்பார்ப்ப கொஞ்சம் கம்மி பண்ணிக்கிட்டு போனா நல்லாருக்கும்ங்கறது என்னோட தாழ்மையான கருத்து. படம் பாத்துட்டு வந்து எப்பிடி இருக்குனு உங்க பார்வைல சொல்லுங்க.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!!

      Delete
  3. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/cinema-reviews.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்கண்ணா,

      நமக்கும் திண்டுக்கல் தான் சொந்த ஊரு. உங்கள இங்க சந்திச்சதுல மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி சந்திப்போம்.

      வலைச்சர செய்திக்கு மிக்க நன்றி. :)

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *