Jul 8, 2013

சிங்கம் 2 (2013) - வாங்கல்லேஏஏஏஏ


சனிக்கிழமை. காலையில எந்திரிச்சதே 11 மணிக்கு தான். சரி வீக் எண்டு எதுனா பிளானு போடுங்கடானு நண்பர்கள்ட்ட சொல்லிட்டு கழிவறைக்கு சென்று அமர்ந்தபோது கண நேரத்தில் வந்தது ஒரு குரல். ‘மச்சி சிங்கம் 2 நேத்து ரிலீஸ்டா. போலாமா’னு. நான் உள்ளே இருந்தே ‘ஏண்டா வேற எதும் நல்ல பிளான் சிக்கலியா’னு கேக்க, கொஞ்ச நேரம் யோசிச்சான். ‘மச்சி படத்துல ஹன்சிகா இருக்காடா’ன்னான். என்னால ஒன்னும் பேச முடியலை. சரி நான் வரேனு நினச்சிகிட்டு ஓக்கே பண்ணிட்டான். மதியானம் 1:30 மணிக்கு படம். எதுனா மல்டிபிளக்ஸ்ல டிக்கெட் புக் பண்ணியிருக்கோம்னு நீங்க நினச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல.

பெங்களூர் அவுட்டர்ல வர்த்தூர்னு ஒரு ஏரியா. ஏரியா கூட இல்ல. அது ஒரு குக்கிராமம். ஒயிட்ஃபீல்டு பக்கத்துல இருக்கு. போற வழியில பெங்களூரு கூவம் ஒன்னு கூட ஓடுது. அப்பிடி ஒரு ஏரியா. காலையில சாப்பிடவே இல்ல. சரி தியேட்டர்ல போயி சாப்பிட்டுக்கலாம்னு அவசர அவசரமா கிளம்பி போனோம். மொத்தம் 9 பேரு. கூட்டமா போயி தியேட்டருக்குள்ள நுழைஞ்சா மொத்தம் ஒரு 30 பேரு அங்கங்க நின்னுட்டுருக்காய்ங்க (எங்களயும் சேத்து). 1 மணி போல போய்ச்சேர்ந்தோம். பசி வேற அல்லயக் கவ்வுது. டிக்கெட் விலை 60ரூ, 80ரூ. சரினு நாங்க 80ரூ டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனோம்.

படம் ஆரம்பிக்கறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி நண்பர்கள் 4,5 பேரு எந்திரிச்சு சாப்பிடறதுக்காக வெளில போயிட்டாய்ங்க. என்னய விட்டுட்டு போயிட்டாய்ங்க. சரினு போனவய்ங்களுக்கு போன் போட்டு எனக்கு எதாச்சும் வாங்கிட்டு வாங்கடானு சொன்னேன். படம் ஆரம்பிச்சு 10 நிமிஷம் இருக்கும். அஞ்சலி ஒரு குத்துப்பாட்டுக்கு கவர்ச்சியா டான்ஸ் ஆட ஆரம்பிச்சிருந்தா. நல்லா கொழு கொழு மொழு மொழு வள வள தள தளனு.. அப்பப்பாத்து வெளில போனவய்ங்க புரோட்டாவோட உள்ள வந்தாய்ங்க. பார்சல பிரிச்ச உடனே, உள்ளே இருந்த மீதிப்பேரும் பாய்ஞ்சு வர்றாய்ங்க. ஒருத்தனும் மதிய சாப்பாடு சாப்பிடலை போல. பசியோட வந்திருக்காய்ங்க.


நான் யோசிச்சேன். அஞ்சலியா இல்ல புரோட்டாவா.. புரோட்டாவா இல்ல அஞ்சலியா..? அஞ்சலிய நாளைக்கு திருட்டு விசிடில கூட பாத்துக்கலாம். புரோட்டாதான் முக்கியம்ன்ற தன்மான முடிவுக்குத் தள்ளப்பட்டேன். நண்பர்களோட அடிச்சுப் பிடிச்சு ரெண்டு புரோட்டாவ தின்னு முடிச்சு நிமிந்து பாத்தா பாட்டு முடிஞ்சுடுச்சு. அய்யகோ கொடுத்த காசுக்கு 30 ரூவா இப்பவே முடிஞ்சு போச்சேனு அதிர்ச்சியில சோகத்துல இருந்தப்ப ‘விடு மச்சி.. ஹன்சிகா வரும்போது மொத்தமா கரெக்ட் பண்ணிக்கலாம்’னு நண்பன் ஆறுதல் சொன்னான்.


படத்தோட கதை என்னானு பாத்தா அதேதான். பாத்து பாத்து அலுத்து சலிச்சுப்போன கதை. சிங்கம் முடிஞ்ச இடத்துல இருந்து சிங்கம் 2 ஆரம்பிக்குது. போலிஸ் வேலையில இருந்து ராஜினாமா பண்ற துரைசிங்கம் ரகசிய உளவாளியா ஆகற மாதிரி முடிச்சிருப்பாங்க. அந்த புள்ளியில இருந்தே இந்த இரண்டாம் பாகம் ஆரம்பிக்குது. இந்த பாகத்துல போதைப்பொருள் கடத்துற கும்பலை துரைசிங்கம் எப்பிடி அழிக்கறாருனு சில பல ஆக்சனோட சொல்லிருக்காரு இயக்குனர் ஹரி.

ஹரியோட பழைய படங்கள் வெற்றி பெற்றதுக்கு அவரோட வசனம் ஒரு முக்கிய காரணமா இருந்ததுனு சொல்லலாம். அந்த வசனத்துலயே வீரம் தெறிக்கும். அதுக்காகவே அந்த படங்கள்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இதுல அப்டியே சிரிப்பு தான் தெறிக்குது. ‘ஓடு மீன் ஓட உறுமீன் உறும’னு என்னமோ ஒரு டயலாக் வரும். அப்போ மொத்த தியேட்டரும்(30 பேரும்) என்னமோ காமெடி சீனப் பாத்த மாதிரி குலுங்கி குலுங்கி சிரிக்குது. ‘ஊரு விட்டு ஊரு நாடு விட்டு நாடு’ இந்த வசனம் பத்தி சொல்லவே தேவையில்ல. ஏற்கனவே ஃபேஸ்புக்ல சிரிப்பா சிரிக்கற வசனம் இது.

ஹரியோட இன்னொரு முக்கியமான பிளஸ்பாயிண்ட் அவரோட திரைக்கதை. கதை எவ்ளோ மொன்னையா இருந்தாலும் தன்னோட வேகமான திரைக்கதையால அதை மறைச்சுடுவாரு. இதுல அந்த மாதிரி தான் அதிவேகமான திரைக்கதை. படம் முழுக்க லாங் ஷாட்டுகள் தான். கேமரா மூவ்மெண்ட்லயே இருக்கு. டக்கு டக்குனு சீனு மாறிட்டே இருக்கு. இந்தப் படத்துல யாரயாச்சும் பாராட்டனும்னா அது கேமராமேனையும் எடிட்டரையும் தான். பாவம் ரொம்ப உழைச்சுருக்காங்க.

ஒரு சீன்ல, துரைசிங்கம் என்.சி.சி. மாஸ்டரா வேலை பாக்குற ஸ்கூல்ல காலை ப்ரேயர்ல தேசியகீதம் பாடிட்டுருக்கும். அப்போ ஒரு ரவுடி வந்து கலாட்டா பண்ணுவான். உடனே துரைசிங்கத்துக்கு பொத்துக்கினு கோவம் வந்துரும். ஆனா உடனே அடிக்க மாட்டாப்ல. தேசியகீதம் முடியற வரைக்கும் காத்திருந்து அப்பறம் தான் அந்த ரவுடிய பெண்டு எடுப்பாரு. இந்த சீன எங்கயோ பாத்துருக்கோமேனு மைண்ட்ல ஒரு பொறி. அட நம்ம அர்ஜுன் படத்துல இதே சீன் வருமே. முந்திலாம் வேற மொழிப் படங்கள்லருந்து தான் காப்பி அடிப்பாய்ங்க. இப்ப தமிழ்ப்படங்கள்லருந்தே காப்பி அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்களா ? பேஸ்..பேஸ்.. நன்னாருக்கு..


கொடுத்த காசுக்கு உண்மையிலேயே ஒர்த்னா அது ஹன்சிகா தான். தானைத்தலைவி ஹன்சிகாவ ஸ்கூலு படிக்கற பொண்ணா காமிச்சுருப்பாங்க (இன்னும் கொஞ்ச நாள்ல கைக்குழந்தையா காமிக்கக்கூட வாய்ப்பிருக்கு). ஸ்கூல் யூனிஃபார்ம் மாட்டிவிட்டு நம்ம இதயத்துடிப்ப எகிற விட்டுருக்காய்ங்க. ‘ஹ்ம்ம்..நான் படிச்ச காலத்துல இந்த மாதிரிலாம் என் ஸ்கூல்ல பொண்ணுங்க இல்லயே’னு பக்கத்துல நண்பன்(தினேஷ்) பெருமூச்சு விட்டது நல்லா கேட்டுது. கூட அனுஷ்கா வேற படத்துல இருக்கா. சொல்லவா வேணும்.

படத்துல சந்தானம் வர்றார். சிரிக்க வைக்க முயற்சி பண்றாரு. விவேக்கும் வர்றாரு. நல்லவேளை சிரிக்க வைக்கிறேன்னு எதும் மொக்க போடல, தப்பிச்சோம். சந்தானம் ஒருசில டபுள் மீனிங் டயலாக் பேசறாரு. அதத் தவிர சிரிப்பே வரல. ஆயாசமே மிஞ்சுது. ஒரு இடத்துல ‘நான் வெட்டுனா மூணு துண்டு’ம்பார். எப்டின்னு கேட்டா ‘வெட்டு வாங்கறவன் ஒரு துண்டு போட்டுருந்தான் அதயும் சேத்து மொத்தம் 3 துண்டு’னு விளக்கம் வேற. படிக்கற உங்களுக்கே இவ்ளோ கோவம் வருதுனா பாத்த எங்களுக்கு எப்டி இருந்துருக்கும். ‘கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத’னு அவரோட டயலாக்கயே திருப்பி சொல்லிட்டு கூல் ஆக வேண்டியதாயிருக்கு.

படத்தோட வில்லன நீங்க பாக்கனுமே. பாக்கறதுக்கு காண்டாமிருகம் மாதிரி இருக்காருன்றதுக்காக அதே மாதிரி சவுண்டும் போடனும்னு சொல்லிட்டாய்ங்க போல. சீன்ல வரும்போதெல்லாம் உறுமிட்டே இருக்காரு. சமயத்துல யானை பிளிர்ற மாதிரிலாம் சவுண்டு வுடுறாரு. பாவம் டப்பிங் பேசுன ஆளுக்கு கொரவளயே அந்து போயிருக்கும். அந்த வில்லன தவிர உள்ளூர் வில்லன்னு ரெண்டு பேரு வர்றாய்ங்க. அம்புட்டுட்டுதேன்.

அப்புறம் வேற என்ன சொல்றது ? எதுவோ மிஸ் ஆகுதே..!! ஆங்.. துரை சிங்கமா நடிச்ச ஆளப்பத்தி சொல்லலியே. டெய்லி ரெண்டு லிட்டர் நல்லெண்ணை விட்டு மீசைய வளத்துருப்பாரு போல. கம்பீரமா தெரியறாரு. ஆனா என்ன ஒண்ணு, பையன் பக்கத்துல எதுவும் டேபிளோ, இல்ல காரோ இருந்துரக்கூடாது. அவருக்குப் பிடிக்காது போல. உடனே ஒரு எம்பு எம்பி அடிச்சு விளயாட ஆரம்பிச்சுடறாரு.(நன்றி:சொக்கு). கைய சைடுல உயர்த்தி எம்பி அடிக்கும்போது, மலிங்கா ஸ்டைல்ல பால் போடற மாதிரியே இருக்கு. அப்பறம் படத்துல நிறைய சீன்ல நல்லா கவனிச்சுப் பாத்திங்கன்னா ஒரு மேட்டர் தெரிய வரும். அவுரு நிக்கற இடங்கள்லாம் கொஞ்சம் மேடான இடங்களாவே இருக்கும். குறிப்பா அனுஷ்காவோட வர்ற சீன்கள். ஹை ஹீல்ஸ் போட்டும் படியில ஏறி நின்னும் கூட அவரோட உயரம் கண்ண உறுத்திண்டே இருக்கு.

அப்பறம் வசனமும் கரெக்டா பேசறாரா இல்லியானு தெரியல. ஒரு இடத்துல வில்லனப் பாத்து “ஓச்சுறுவேன்... ஜாக்கிரதை”னுவாரு. படம் பாத்த எவனுக்கோ அந்த வசனத்தோட அர்த்தம் சரியா புரியல போல. ‘அவனா நீ’னு கலாய்க்கிறான். இன்னொருத்தன் ‘பாவம் அந்தாளுக்கு மலச்சிக்கல் போல..பாரு.. டயலாக் பேசறப்பலாம் அந்த மாதிரி தான் மூஞ்சிய வச்சுருக்காப்ல’ங்கறான். எனக்கு ரொம்ப ஃபீலிங்கா போச்சு. எந்த மாதிரிலாம் நடிச்சுகிட்டுருந்த ஆளு இப்டி போயிட்டாரேனு. நாம என்ன பண்ண முடியும்.

பாடல்கள் மற்றும் இசை. உண்மைய சொன்னா ஒவ்வொரு பாட்டு வரும்போதும் நான் பயந்துகிட்டே இருந்தேன். எங்க இந்த ம்யூசிக் டைரக்டரு ‘கமக் கமக் பதநிசா’னு எங்கருந்தாச்சும் பாடிட்டு வந்துரப்போறாரோனு. நல்ல வேளை அப்டி எதுவும் நடக்கல. ஆனா ஒரு பாட்டு கூட மனசில நிக்கவே இல்ல. அதுக்காண்டி வருத்தமும் இல்ல. ஏன்னா பாட்டுல அனுஷ்கா வந்து அந்தக்கொறையப் போக்கிருவா.

படத்துல தமிழ் போலிஸ் சென்டிமெண்ட் சீன் நிறைய வர்றதுனால போலிஸ்காரங்களுக்கெல்லாம் கண்டிப்பா ரொம்ப பிடிச்சுக்கும்னு நினைக்கறேன். படம் கண்டிப்பா ஹிட் ஆகும்னு தோணுது. ஏன்னா இது கமர்சியல் படங்களோட இலக்கணத்த கரச்சுக்குடிச்சு எடுத்த படம். கரெக்டா அரை மணி நேரத்துக்கு ஒரு தடவ பாட்டு, அங்கங்கே காமெடி, சென்டிமெண்ட்னு எல்லாம் கலந்தடிச்சு கலக்கிக் கொடுத்துருக்காங்க. குடும்பத்தோட பாக்கறதுக்கு ஏற்ற படம்னு சொல்லியே கலக்சன் கல்லா கட்டிருவாய்ங்க. இது ஜெயிச்சதுனா இந்த மாதிரி, காது ஜவ்வு கிழியற மாதிரி வசனங்களோட அடுத்தடுத்து படங்கள எதிர்பாக்கலாம்.

சிங்கம் 2: காது ஜவ்வு கிழியனும்னா ஆஆஆஆங்கல்ல்ல்லே

14 comments:

 1. unga nanbar padikra school la indha maadhiri ponnunga irundha maattum apdiye thallirupparu ...

  ReplyDelete
  Replies
  1. டாய்ய்,

   சொக்கு தான இது ?? ஒன் நெஞ்சுல தில் இருந்தா நண்பர் பேர சொல்லி திட்டிப் பாருடா ??!! (அப்பாடா.. கோர்த்து விட்டாச்சு..ஹிஹி) :) :)

   Delete
 2. அனுஷ்கா போட்டொ பொட்டுருக்கலாமெ

  ReplyDelete
  Replies
  1. அடாடா.. நீங்க அனுஷ்கா ரசிகர்னு தெரியாம போயிருச்சே.. இனிமே படத்துல இருக்கற எல்லா ஹீரோயினயும் போட்டுர வேண்டியதுதான். :)
   (ஆனா உங்க வயசுக்கு அனுஷ்காலாம் ஆன்ட்டி மாதிரி.. அத மைண்ட்ல வச்சுக்கங்க..!!) :) :)

   Delete
 3. தல,
  செம ஓட்டு ஓட்டி இருக்கீங்க. ரொம்பவே ரசிச்சேன்... :):)

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல,

   படம் உங்களுக்கு பிடிச்சுப் போச்சுனு உங்க விமர்சனம் பாத்து தெரிஞ்சுக்கிட்டேன். அங்கயே ஒரு பெரிய்ய கமெண்டு போட்டுருக்கேன் பாருங்க..!!

   வருகைக்கு மிக்க நன்றி தல.. :):)

   Delete
 4. செம நக்கல் விமர்சனம் இருந்தாலும் ஹன்சிகா CUTE தான் UNIFORM இல்

  ReplyDelete
  Replies
  1. ப்ரேம்,

   ஸாரி நண்பா.. உங்க கமெண்ட் எப்டியோ தெரியாம ஸ்பாம் பகுதிக்கு போயிருச்சு. இப்போ தான் பாக்குறேன். ஹன்சிகா க்யூட்டா ? எனக்கு வேற மாதிரில்ல தோணுச்சு..ஹிஹி.. :)

   உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!!

   Delete
 5. இனிமே படத்துல இருக்கற எல்லா ஹீரோயினயும் போட்டுர வேண்டியதுதான் ... GA GA GA PO ...

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவி அனானி..!!!

   எத எங்க கொண்டுவந்து கோக்குற ? போட்டோ போடறத சொன்னேன்யா.. அப்டியே எங்கயாச்சும் மாட்டி விட்டிராத சாமி..உனக்கு புண்ணியமா போகும்.. (ஞான் ஒரு சிறுவனாக்கும்) :)

   Delete
 6. சூர்யா ஹரி படிச்சா அவிங்க கூட சிரிச்சிடுவாங்க போல :)

  ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *