Jul 12, 2013

Flags of Our Fathers(2006) - A movie about WWII


இரண்டாம் உலகப்போரைப் பத்தி படம் எடுக்கனும்னா ஹாலிவுட்டுக்கு அல்வா சாப்பிடற மாதிரி. சினிமானு ஒன்னு இருக்கற வைக்கும் இரண்டாம் உலகப்போரைப் பத்தின படங்கள் வந்துகினே இருக்குங்குறது என்னோட அனுமானம். ஏன்னா கலெக்சன் கன்ஃபார்ம்டுல. இதுவரைக்கும் நான் எத்தனை இரண்டாம் உலகப்போர் படங்கள் பாத்துருக்கேன்னு எனக்கே கணக்கு வழக்கு இல்லை. அத்தினி பாத்துருக்கேன். அத்தினி வந்திருக்கு. இங்கன கிளிக்கினீங்கனா  விக்கியில ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய லிஸ்ட்டே பாக்கலாம். முக்காவாசி ஹிட்லர் பத்தின படங்களா இருக்கும்.

இந்தப் படம் இரண்டாம் உலகப்போர்ல அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில இவோ ஜிமா-ங்கற இடத்துல நடந்த போரைப் பத்தினது. நிறையப்பேரு இந்தப் படத்தப் பாத்துருப்பீங்க. பாக்காத கொஞ்சமே கொஞ்சம் பேருக்காண்டி இந்தப் பதிவு. ஏன்னா, நானும் ரொம்ப மாசமா இந்தப் படம் பாக்கனும்னு ஹார்ட் டிஸ்க்ல வச்சிருந்து இப்போதான் பாத்தேன். என்னிய மாதிரி டைம் வேஸ்ட் பண்ணாம படத்தப் பத்தி தெரிஞ்சுக்க வைக்க தான் இன்னிக்கு இந்த டீலிங்கி. (வர வர சுயபுராணம் ஜாஸ்தியாகுதுனு இந்த பதிவுலகச் செம்மல் மேல நிறைய அவதூறு வர்றதுனால நேரா மேட்டருக்கு ஜம்பிங்க்)

இரண்டாம் உலகப்போர்ல அமெரிக்காவும் ஜப்பானும் தீவிரமா சண்டை போட்டுட்டு இருந்த நேரம். அமெரிக்கா ஜப்பானை கைப்பத்துறதுக்காக ஒரு ஐடியா போட்டது. டோக்யோல இருந்து 650 மைல் தூரத்துல இருக்கற ஒரு தீவு தான் இவோ ஜிமா(Iwo Jima). இந்த இடம் ஜப்பானுக்கும் அமெரிக்காவோட ராணுவ தளங்கள் இருந்த மேரியனாஸ்(Marianas)ங்கற இடத்துக்கும் நடுவுல இருக்கற இடம். அதுபோக 3 ஏர்ஃபீல்ட்சும் இங்க இருக்குது. இங்கருந்து ஜப்பானோட மத்த தீவுகளை தாக்குறது ரொம்ப ஈசி. இந்த மாதிரி நிறைய பலன்கள் இருந்ததால அமெரிக்கா இந்த தீவு மேல படையெடுத்து போர் புரிஞ்சது.

இந்தப்போர்ல பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டன. ஜப்பானை விடவும் அமெரிக்காகாரன் தான் நிறைய பேரு பாதிக்கப்பட்டாய்ங்க. ஆனா ஜப்பான் சைடுதான் நிறைய உயிர் பலியாச்சு. இரண்டாம் உலகப்போர்ல ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போரில் நடந்த உண்மை சம்பவங்களைதான் நம்ம க்ளிண்ட் ஈஸ்ட்வுட் படமா எடுத்துருக்கார். இந்தப்போரைப்பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க இங்கன கிளிக்குங்க.

இந்தப்போரின்போது அமெரிக்க அரசை சேர்ந்த 6 வீரர்கள் அமெரிக்க கொடியை அந்த மலை மேல நடுவாங்க. அது ஒரு பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமா மாறப்போகுதுனு அப்போ அவங்களுக்கு தெரியலை. அங்கே போர் புரிஞ்சுகிட்டுருந்த அமெரிக்க வீரர்களுக்கு அது ஒரு மாபெரும் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இதப் பார்த்து இன்னும் உத்வேகத்துடன் சண்டை போட்டாங்க.

அந்த சம்பவம் போட்டோ எடுக்கப்பட்டு அமெரிக்கப் போர் வரலாற்றில் அழிக்க முடியாத புகழைப் பெற்றது. அந்த போட்டோவுக்கு புலிட்சர் அவார்டு கூட கொடுக்கப் பட்டது. போர் நடந்துகொண்டு இருந்தப்ப இந்த போட்டோ பத்திரிக்கைகள்ல எல்லாம் வெளியாகி பெரிய பரபரப்பு ஏற்பட்டுச்சு. போரில் அமெரிக்கா ஜெயிக்க வேண்டுமென மக்களிடையே பெரிய நாட்டுப்பற்று ஏற்பட்டுச்சு. இதை சாதகமா பயன்படுத்திக்கிட்ட அரசாங்கம், இதை வச்சி மக்கள்ட்ட போர்ப்பத்திரங்களை வித்து நிதி திரட்டியது.

அந்த நிதி திரட்டுவதற்காக நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்ணாங்க. கொடியை நட்ட 6 பேரில் 3 பேர் ஆல்ரெடி இறந்து விட்டிருந்தனர். மீதி உள்ள 3 பேர் வரவழைக்கப்பட்டு வார் ஹீரோவாக அமெரிக்காவெங்கும் கொண்டாடப்பட்டாங்க. ஒவ்வொரு ஊருக்கா போயி போரைப் பத்தி எடுத்து சொல்லி நிதி திரட்டுவது தான் இவங்களுக்கு கொடுக்கப் பட்ட வேலை.

இதுல என்னா மேட்டர்னா ? இவ்ளோ பிரபலமடைஞ்ச அந்த கொடி இரண்டாவதா நடப்பட்ட கொடி. முதல்ல, ஒரு பட்டாலியன் பல நெருக்கடிகளுக்கு மத்தியில கஷ்டப்பட்டு மலை மேல ஏறி ஒரு சிறிய கொடியை நட்டுருக்காங்க. அதுவும் போட்டோ எடுக்கப்பட்டிருக்கு. அந்த சமயம் போரைப் பார்வையிட வந்த நேவி செக்ரட்டரி அதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டிருக்கார். அதை சென்டிமெண்டலா, ஒரு நினைவுச்சின்னமா தானே வச்சுக்கனும்னு பிளான் பண்ணி அந்தக் கொடியை எடுத்துட்டு வர சொல்லிடறாரு. அதுக்கு பதிலா இரண்டாவதா ஒரு மாற்று கொடியை மேல அனுப்பி நட சொல்லிருக்காரு.

அப்டி நடப்பட்ட அந்த இரண்டாவது கொடிக்கு தான் அவ்வளவு முக்கியத்துவம் கிடைச்சது. இந்த உண்மை சம்பவங்களை தான் படமா எடுத்து நமக்கு படைச்சிருக்காரு ஈஸ்ட்வுட். அப்படி போர் நாயகர்களா கொண்டாடப்படுற அந்த 3 வீரர்களின் மனநிலை எப்டி இருந்ததுக்கறதுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீன்கள் அமைச்சிருக்காரு. போருக்குப் பிறகு அந்த 3 பேரின் வாழ்க்கையும் என்ன ஆனதுங்கற பார்வைல படம் அமைக்கப்பட்டிருக்கு. உண்மையான ஹீரோக்கள் போரில் இறந்து விட்டிருக்க, தாங்கள் ஹீரோக்களா கொண்டாடப்பட்டபோது எந்தளவு குற்ற உணர்ச்சிக்கு ஆளானங்க-ன்றத பதிவு செஞ்சுருக்காரு.

ஆனா ஈஸ்ட்வுட் சொல்ல நினைத்த அந்த உணர்ச்சிபூர்வமான விஷயங்கள் நம் மனசை அடைஞ்சதானு கேட்டா டவுட்டு தான். "சேவிங் ப்ரைவேட் ரையன்" படம் நம்மிடையே எந்தளவு தாக்கத்த ஏற்படுத்துச்சுனு தெரியும். அதுவும் கடைசி 45 நிமிஷம் உள்ளுக்குள்ள ஒரு உணர்வு வரும் பாருங்க. கேப்டன் மில்லரும்,ரையனும் மற்ற வீரர்களும் எதிரிகள எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கறப்ப, தரை அதிர்ற சத்தம் கேட்டு உஷாரா ஆவாங்க.. அந்த சீன்ல கொஞ்சம் கொஞ்சமா அந்த சத்தம் அதிகமாகறப்போ, அந்த வீரர்களோட மனநிலை நமக்கும் வரும். பாத்துட்டு இருக்கற நமக்கு மனசில ஒரு இனம்புரியா பயம் வரும். இந்தப் படத்துல இருந்து தான் போர் படங்கள் மேலயே ஒரு ஆர்வம் வந்தது. தலைவன் ஸ்பீல்பெர்க்கின் மேஜிக் அது. மனுஷன் சும்மா பூந்து விளாடியிருப்பாரு. அந்த மாதிரி ஒரு உணர்வு இதுல மிஸ்ஸிங்னு தான் எனக்கு தோணுது.

இதுல ஒரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் என்னானா, இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் ஸ்பீல்பெர்க். புத்தகமா வெளிவந்த இந்தக் கதையோட உரிமையை வாங்கி வச்சிருந்த ஸ்பீல்பெர்க் இதுக்கு திரைக்கதை ரெடி பண்ணச் சொன்னாராம். கடைசில வந்த திரைக்கதை பிடிக்காம போனதால அப்படியே வச்சிருந்துருக்காரு. கடைசில ஈஸ்ட்வுட் வந்து திரைக்கதை அமைச்சப்பறம் தான் ஸ்பீல்பெர்க்குக்கு நம்பிக்கையே வந்ததாம். அப்புறம் ஈஸ்ட்வுட் இயக்க, இவரு தயாரிப்பாளர் ஆயிட்டாரு.

கதை முன்பின்னா நகரும் நான்லீனியர் திரைக்கதை உத்தியில அமைஞ்சுருக்கறது சுவாரசியமா இருக்கு. நடிகர்களும் நல்லாவே நடிச்சுருக்காங்க. போர்க்காட்சிகள்ல எல்லாம் ரியாலிட்டி வேணும்ங்கறதுக்காக நிறைய உழைச்சிருக்கறது நல்லா தெரியுது. காட்சிகள்லாம் பிரமாண்டமா எடுத்துருக்காங்க. (அத்தனியும் ஸிஜினு பாத்தவுடனே தெரிஞ்சுக்கலாம்). இத்தனை இருந்தும் ஏதோ மிஸ்ஸாகுற ஃபீலிங் இருந்துகிட்டே இருக்கு. ஒருவேளை "சேவிங் ப்ரைவேட் ரையன்" கூட கம்பேர் பண்ணாம பாத்திருந்தா நல்லா இருந்துருக்குமோ என்னமோ..!!

எவ்வளவு தான் குறைகள் சொன்னாலும், போர்ப்பட பிரியர்கள் தவறவிடக்கூடாத படங்கள்ல இதுவும் ஒண்ணு.

இன்னொரு முக்கியமான விஷயம்.. எப்பவுமே ஹாலிவுட் வார் படங்கள்ல அமெரிக்காகாரன் தான் ரொம்ப நல்லவன்ற மாதிரியே காமிப்பாங்க, ஒரு சில படங்கள் தவிர்த்து(The Hurt Locker (2008),Zero Dark Thirty (2012)..etc.,). இதுவும் அந்த மாதிரி தான். அமெரிக்காவோட பார்வைல, போர் எப்படி இருந்ததுனு எடுக்கப்பட்டிருக்கும். சரி பத்தோட பதினொன்னு-னு நினச்சிக்கிட்டிருக்கும் போது தான் இன்னொரு ஆச்சரியமான விஷயம் தெரிய வந்தது.

இதே போரை ஜப்பானியர்களின் பார்வைல சொல்லிய இன்னொரு படம் இருக்கு. Letters from Iwo Jima(2006) இந்தப் படமும் ஈஸ்ட்வுட் தான் இயக்கி இருக்காருன்றது இன்னொரு ஆச்சரியம். இந்த ரெண்டு படங்களுமே சில மாத இடைவெளியில அடுத்தடுத்து வந்திருக்கு. ஜப்பானியர்களின் பார்வைல சொன்ன இந்தப் படம் "ஃப்லாக்ஸ் ஆஃப் அவர் ஃபாதர்ஸ்" விட நல்லா இருக்குமாம். சரி அதயும் பாத்துட்டு இன்னொரு பதிவப் போட்டுற வேண்டியதான்.(எங்க ஓடுறீங்க.. இப்போ நம்ம வலைத்தளத்த தமிழ்மணத்துல வேற இணைச்சாச்சு..( நன்றி:ராஜ்) ஒரு ஓட்டக்குத்திட்டுப் போங்க)

Flags of Our Fathers(2006) - If you like war movies, Go for it.

8 comments:


  1. என்னதான் நல்லா இருந்தாலும் சேவிங் ப்ரைவேட் ரையன்'ஐ டச் பன்ன முடியாது

    ReplyDelete
    Replies
    1. லியோன்,

      ஆமா நண்பா.. இன்னும் சொல்லப்போனா அந்தப்படம் அளவுக்கு தாக்கம் ஏற்படுத்துன இன்னொரு வார் மூவி நான் இன்னும் பாக்கலனு தான் சொல்லுவேன்.. குப்ரிக்கோட Full Metal Jacket விடவும் எனக்கு "சேவிங் ப்ரைவேட் ரையன்" ரொம்ப பிடிக்கும்.

      இந்தப்படமும் பாக்கலாம் நண்பா. நல்ல படம் தான்...!! க்ளிண்ட் ஈஸ்ட்வுடின் சிறந்த படங்களில் ஒன்று.

      Delete
  2. Full Metal Jacket பார்த்துவிட்டேன் நல்ல படம்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பா.. குப்ரிக்கின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்று அந்தப்படம். முதல் பாதி முழுக்க ராணுவ வீரர்கள் ட்ரில் பண்ற காட்சிகள் மட்டுமே வரும். முழுமையாக நம்மை அவர்களின் மனநிலைக்கு மாற்றி விடுவார் குப்ரிக். அதைப்பற்றி விவாதித்தால் ஒரு தொடர்பதிவே போடலாம்.(பயப்படாதீங்க.. அந்தத் தப்ப நான் பண்ணவே மாட்டேன்)

      Delete
  3. படம் பார்த்து இருக்கேன் தல. ஆஹா ஓஹோன்னு சொல்ல முடியாட்டும், பார்க்க வேண்டிய படமே. சில காட்சிகள் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்தது.. Letters from Iwo Jima பத்தி கேள்விபட்டது இல்ல.

    ReplyDelete
    Replies
    1. தல,

      எனக்கும் அதே எண்ணம் தான். மனதைக் கவராவிட்டாலும் பார்க்க வேண்டிய படம். இந்தப்படம் பார்த்தபிறகு நெட்ல சர்ச் பண்றப்ப தான் "லெட்டர்ட் ஃப்ரம் இவோ ஜிமா" பற்றி தெரிய வந்தது. இதைவிட நல்லா இருக்கும்னு போட்டிருக்காங்க. அதையும் பாத்துடுங்க தல.

      Delete
  4. நல்லா எழுதி இருக்கீங்க.
    லெட்டர்ஸ் ஃப்ரம் ஐவோ ஜிமாவையும் உடனே எழுதி விடுங்கள்.
    அப்போதுதான் இப்பதிவு முற்று பெறும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா,

      இந்தச் சிறுவன் அழைப்பை ஏற்று இங்கே வந்துருக்கீங்க.. மிக்க மகிழ்ச்சி.. :) உங்க சொல்லைத் தட்ட முடியுமா.. கண்டிப்பா அந்தப் படத்தையும் பாத்துட்டு எழுதிடறேன்.

      வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *