Feb 26, 2013

85 வது ஆஸ்கர் விருதுகள் 2013


இந்திய நேரப்படி 25-பிப்ரவரி-2013 இன்று காலை 8:30 மணிக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் ஆரம்பித்தது. வழக்கம்போல பல எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும் சில ஏமாற்றங்களுடனும் நடந்து முடிந்தது.


இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட Life of Pi (2012) 4 விருதுகளை அள்ளியது. சிறந்த இயக்குனர் விருதை இப்படத்தை இயக்கிய Ang Lee பெற்றார். முழு பட்டியலும் கீழே..

சிறந்த படம்:

Argo (2012) - பென் ஆஃப்லெக் இயக்கி நடித்திருக்கும் இப்படம், 1979 லிருந்து 1981 வரை இரானின் அமெரிக்க தூதரகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்க தூதர்கள் இரானில் சிறை வைக்கப்பட, அதிலிருந்து தப்பி கனடா தூதரகத்தில் நுழையும் 6 பேரையும், சிறை பிடிக்கப்பட்டவர்களையும் மீட்பதற்கு அமெரிக்கா அரசாங்கம் செய்யும் முயற்சிகளே கதை. விறுவிறுப்பான திரைக்கதை, நகைச்சுவையுடன் கூடிய வசனங்கள், தேர்ந்த இயக்கம் என நல்லதொரு த்ரில்லர் படம் இது.


சிறந்த இயக்குனர்:

Life of Pi (2012) படத்தை இயக்கிய Ang Lee க்கு இந்த விருது கிடைத்தது. இது இவர் வாங்கும் இரண்டாவது விருது. சிறந்த ஒளிப்பதிவுடன் கூடிய மாறுபட்ட படம் இது. ரிலீஸ் ஆனபோதே இது கண்டிப்பாக விருது வாங்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விதமான ஆர்ட் ஃப்லிம். துணிச்சலான கதையை இயக்கி சிறந்த இயக்குனர் விருதை வாங்கி விட்டார் ஆங்க் லீ.


சிறந்த நடிகர்:

இந்த முறை நம்ம தலைவர் ஸ்பீல்பெர்க் படம் Lincoln (2012) ல நடிச்ச Daniel Day-Lewis க்கு சிறந்த நடிகர் விருது கிடைச்சுருக்கு. இது இவரு வாங்குற 3 வது அவார்டு. நல்ல பிரிண்ட் வராததால இந்தப் படம் இன்னும் பாக்கல. ஆனா தலைவரோட படம்ங்கறதால, நடிப்பும் நல்லாவே இருந்துருக்கும்னு நம்பிக்கை இருக்கு. சீக்கிரம் நல்ல பிரிண்ட் போடுங்கப்பா.. ஐ ஆம் வெய்ட்டிங்க்..


 சிறந்த நடிகை:

சிறந்த நடிகை விருது Silver Linings Playbook(2012) படத்துல நடிச்ச Jennifer Lawrence க்கு கிடைச்சிருக்கு. ஆஸ்கர் வரலாற்றிலேயே 30 வருஷத்துக்கு அப்புறம் நடிப்புக்காக கொடுக்கப்படும் 4 விருதுகளுக்கும் நாமினேட் ஆன படம் இது தான். இந்த ஜெனிஃபர் வேற யாருமில்லீங்க, இதுக்கு முன்னாடி Hunger Games நடிச்ச அதே பொண்ணுதான். இந்தப் படத்துல செக்ஸ் அடிமையா இருந்து அதுல இருந்து மீளும் கதாபாத்திரம்..பிச்சுட்டாங்க . அப்பறம் இன்னொரு விஷயம். இந்தப் படத்துல ஹீரோவுக்கும் Bi Polar Dis Order ங்கற மனநோய் இருக்கு. (3 ல தனுஸ்க்கு இருக்குற அதே நோய்) ஹீரோவும் ரொம்ப நல்லா நடிச்சிருந்தாரு.


சிறந்த துணை நடிகர்:

Django Unchained (2012) நம்ம இன்னொரு தல குவண்ட்டின் டாரண்ட்டினோ டைரக்ட் பண்ண படம்.  இதுல நடிச்ச Christoph Waltz க்கு இந்த விருது கிடைச்சிருக்கு. ரெண்டாவது தடவையா இந்த விருது வாங்குறாரு. நல்ல பிரின்ட் வராத அதே காரணத்தால இன்னும் இதயும் பாக்கல.


 சிறந்த துணை நடிகை:

Russel Crowe, Anne Hathaway,Hugh Jackman,Amanda Seyfried, Helena Bonham Carter என பல பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்த Les Misérables (2012) படத்திற்காக Anne Hathaway க்கு இந்த விருது கிடைத்திருக்கிறது.( த டார்க் நைட் ரைசஸ்-ல கேட்வுமன்-ஆ வருவாங்கள்ல..அவுங்களே தான்) இது ஒரு ம்யூசிகல் ஜானர். இந்த மாதிரி படங்களில் நடிப்பு தான் ரொம்ப முக்கியம். அதை உணர்ந்து அனைவரும் போட்டி போட்டு நடித்திருப்பர். பிரஞ்சுப் புரட்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலை அடிப்படையாக வைத்து வந்த படம் இது. ம்யூசிகல் ஜானர் பிடிக்கும் என்றால் தவற விடக்கூடாத படம்.


சிறந்த திரைக்கதை:

நான்லீனியர் டைப் திரைக்கதை உத்தியை நம்ம தலீவர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு முன்னாடியே 1990 கள்ல பூந்து விளையாண்ட இன்னொரு தலீவர் குவண்ட்டின் டாரண்ட்டினோ. அவரு எழுதுன Django Unchained (2012) படத்துக்கு சிறந்த திரைக்கதை விருது கிடைச்சிருக்கு. யப்பா டாரண்ட் மஹாராசங்களே சீக்ரமா இந்தப் படத்தயும் ரிலீஸ் பண்ணுங்கப்பா.


 சிறந்த திரைக்கதை(Adopted):

ஏற்கனவே வந்த ஒரு நாவல், அல்லது சிறுகதை, அல்லது உண்மை சம்பவங்கள் இவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்படும் திரைக்கதைகளுக்கு இந்த விருது தரப்படுகிறது. Argo (2012) படத்துக்காக Chris Terrio க்கு கிடைத்தது.


சிறந்த அனிமேஷன் படம்:

Brave (2012) 


சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்:

Amour (2012) ஆஸ்த்திரிய நாட்டு திரைப்படம்.


சிறந்த ஒளிப்பதிவு:

முன்பே சொன்னது போல் மிகச்சிறந்த விஷுவல் ட்ரீட்மெண்ட்-ஐ தந்த Life of Pi (2012) படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்தது.


சிறந்த எடிட்டிங்க்:

Argo (2012) 


சிறந்த இசை(ஒரிஜினல் ஸ்கோர்):

Life of Pi (2012)


சிறந்த இசை(ஒர்ஜினல் ஸாங்க்):

Skyfall (2012)


இன்னும் பல விருதுகள், பல படங்களுக்கு கொடுக்கப்பட்டன. இதில் என்னுடைய எதிர்பார்ப்புகளையும் (எத்தன படம் எடுத்து ஆஸ்காருக்கு அனுப்பிருக்க..!!) ஏமாற்றங்களையும் !!?? (அடங்கப்பா..!!) இன்னொரு பதிவுல சாவகாசமா சொல்றேன். இப்போதைக்கு நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *