Jun 19, 2013

எனக்குப் பிடித்த End Credit இசைக்கோர்வைகள்


ஒரு படத்தப் பத்தி பதிவு எழுதறேன்னா கண்டிப்பா சில மணி நேரங்களாவது அதுக்குனு செலவிடுவேன். அந்தப் படத்தப் பத்தின பிண்ணனித் தகவல்கள் எல்லாத்தயும் தெரிஞ்சப்புறம்தான் பதிவு எழுதவே ஆரம்பிப்பேன். இந்த சில மணி நேரங்கள்ன்றது சில சமயம் சில நாட்களா கூட ஆகியிருக்கு. அது ஏன்னா, அந்தப் படத்தப் பத்தி தேடும்போது அப்டியே வேற எதுனா இன்ட்ரஸ்டிங்கான மேட்டர் சிக்கியிருக்கும். அத அமுக்கி அங்கேர்ந்து வேற எதுனா சிக்கி அத அமுக்கி.. இத அமுக்கி.. எதயோ அமுக்கி... இப்டி பட்டன் தேயுற வரைக்கும் அமுக்கினே நாள் ஓடிரும். பல நாட்கள் இந்த மாதிரி வேஸ்ட் (என்னப் பொறுத்தவர வேஸ்ட் இல்ல) பண்ணிருக்கேன். அந்த அளவுக்கு சினிமான்னா அப்டி ஒரு வெறி.(ஹிஹி.. இத நா ஆணவத்துல சொல்லலீங்க.. ஒரு திமிர்ல தான் சொல்றேன்..ஹிஹி(என்னா இன்னிக்கி சனியன் வாய்ல உக்காந்துருக்கான் போல..அடி வாங்கிக்கொடுக்காம போமாட்டான் போலருக்கு))

இப்ப எதுக்கு இத நா சொல்ல வந்தேன்..??!! ஆங்.. நியாபகம் வந்துருச்சி. ரொம்ப நேரம் செலவு பண்ணாம ஒரு பதிவ போட்டுப் பாப்பமேனு ஒரு யோசனை. உடனே என் 65 கிலோ மூளைய (உடம்பு பூரா மூளை பாஸ்) ஊஸ் பண்ணி ஒரு டாபிக் சூஸ் பண்ணேன். நீங்க என்ன நம்பலனா கூட பரவால. உடனே ஃபேஸ்புக்ல திரைப்படக் காதலர்கள் குழுமம் போயி அங்க நண்பர் சிவராஜ் கேட்ட "உங்களுக்குப் பிடிச்ச எண்ட் க்ரெடிட் சாங் எது"னு கேட்ட கேள்வில இருந்து தான் இந்த பதிவுக்கு டாபிக் காப்பியடிச்சனு பிரச்சனயக் கெளப்பி விட்டுராதிங்க. நேர்மை தான் எனக்கு ரொம்ப முக்கியம் பாஸ்.

எனக்குப் பிடிச்ச என்ட் க்ரெடிட் சாங் லிஸ்ட் இது. மெல்லிசை எதுவும் இருக்காது. எல்லாமே அதிரடியான இசை. அதனால சில நல்ல படங்களோட இசைய இதுல சேர்க்கல. அதுக்காண்டி நான் 'அதுக்கு' சரிப்பட்டு வரமாட்டேன்னு நினச்சு ஊர விட்டு ஒதுக்கி வச்சுராதிங்க. அதே போல இது எந்த ஆர்டர்லயும் இல்ல. மனசுல தோணுன வரிசைல போட்டிருக்கேன். தோ லிஸ்ட் ஸ்டார்ட்டடு..

1. Sin City(2005)

இந்தப் பதிவ எழுத ஆரம்பிச்ச உடனேயே எனக்கு முதல்ல தோணுன படம் இது தான். அடேங்கப்பா.. என்னாமா போட்டுருக்கான்யா மியூசிக்கு.. அடாடா.. இந்த இசைக்கு நான் அடிமை ஆயிட்டேன்னா அது மிகையே கிடையாது. டைரடக்குடரு ராபர்ட் ராட்ரிகய்ஸே போட்ட இசை இது. கேட்டுப் பாத்துட்டு சொல்லுங்க எப்டினு.


2. Hangover(2009)

எண்டு தீம்னா அது இதான். இந்தப் பாட்டுக்காகவே உக்காந்து படம் பாத்த குரூப்லாம் இருக்கு தெரியும்ல. இந்த மாதிரி ஒரு துள்ளலிசைப் பாடலை இது வரை நான் கேட்டதே இல்ல. டெய்லி காலங்காத்தால இத கேட்டுட்டு ஆபிஸ் போயிப் பாருங்க. அன்னிக்கு நாள் முச்சூடும் செம்ம உற்சாகமா இருக்கும். நா அப்டி தான் பண்றேன்.


3. Batman Trilogy

படம் பாத்து முடிச்சு பிறகும், இசையினால ஒரு ரசிகன மயிர்க்கூச்செறிய வைக்க முடியும்னா அது Hans Zimmer னால தான் முடியும். பெஸ்ட் ஆஃப் சிம்மர்னா அது இதான். தோ நீங்களும் கேட்டு மயிர்க்கூச்செறியுங்க.


4.Pirates of the caribbean series

இந்த இசையைக் கேட்டுட்டு ரொம்ப நாளைக்கு இத ரிங்டோனா வச்சிருந்தேன். இன்னொரு மயிர்க்கூச்செறிய வைக்குற இசை இது. ஸேம் ம்யூசிக் டைரடக்கரு. ரொம்ப பாப்புலருங்கூட. இந்த ம்யூசிக் தெரியாத ஹாலிவுட் ரசிகர்களே இருக்க முடியாது. என்னா நாஞ்சொல்றது ?


5.Sherlock Holmes(2009)

இதுவும் சிம்மரோட வேலை தான். ஒரு பீரியட் படத்துக்கு எந்த மாதிரி இசையமைச்சா நல்லாருக்குமோ அந்த மானிக்கி இசை அமைச்சிருப்பாப்ல. செம்ம ஸ்டைலான இசை.


6.The Good, the Bad, and the Ugly(1966)

இது காலத்தால் அழிக்க முடியாத பல இசைக்கோர்வைகளக் கொடுத்த என்னியோ மோரிக்கோனோட இசை. என்னியோ பத்தி நம்ம இசை இளவரசன் நிறைய இடங்கள்ல சொல்லிருக்கார்ன்றதால இத்தோட நிறுத்திக்கறேன். அது சரி யாரந்த இசை இளவரசன்..? என்னாது இசை இளவரசன் யார்னு தெரியாதா?? டாய்... பஸ்ஸ கொளுத்துங்கடா.. கடைய மூடுங்கடா.. ஆய்ய்..ஓய்ய்.. (க்கும்.. நான் என்னிக்கு இந்த பட்டத்த கொடுத்தேனோ தெரில.. அன்னிலருந்து ஆளக் காணோம்.. இவரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 ரூவா இனாமா கொடுக்கப்படும்.. அல்லாங்காட்டி ஏர்டெல் வீடியோ காண்பிக்கப்படும்..)


7.Inception(2010)

இது ஒரு விதமான மர்ம இசை. இதுவும் சிம்மர் தான். இந்த சிம்மர் பய போடாத இசையே கெடியாதுங்க. ஒவ்வொரு படத்துலயும் கலக்குறாரு.


8.Jurassic Park(1993)

எவ்ளோ நேரத்துக்கு தான் சிம்மர் இசையையே கேக்குறது. கொஞ்சம் தலீவர் படத்துலருந்தும் கேப்போம். நம்ம தலீவர் ஸ்டீவனோட ஆஸ்தான இசையமைப்பாளர் ஜான் வில்லியம்சோடஇசை இது. யாராலயும் அவ்ளோ சீக்கிரமா மறக்க முடியாத இசை.


9.Indiana Jones series

ஜார்ஜ் லூகாஸ் கதையெழுத ஸ்டீவன் டைரக்ட் பண்ண ஜான் வில்லியஸ் இசையமைச்ச படம் இது. க்ளாசிக் அட்வெஞ்சர் படம். ஒரு அட்வெஞ்சர் படத்துக்கு இசை எப்டி இருக்கனும்னு இதுலருந்து பாடமே கத்துக்கலாம்.


10.Matrix Revolutions(2003)

இசைல மட்டுமில்ல எந்த டிபார்ட்மென்ட்லயுமே சோடை போகாத பட வரிசை இது.  துடிப்பைக் கொடுக்கும் இந்த துள்ளலிசையைக் கேட்டுப் பாருங்க.


11.Mission Impossible Series

இந்தப் படத்தோட தீம் இசை தான் இதோட எண்டு கார்டு இசையும். இதுவும் ரொம்ப பாப்புலர் தான்


12.Django Unchained(2012)

இது அதிரடி இசை வகை கெடியாது. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமா உணர்ச்சியத் தூண்ட வைக்கற (!!!?? நீங்க வேற எதுனா நெனச்சிகினா அதுக்கு நான் பொறுப்பில்ல சாமியோவ்) இசை. குவண்ட்டின் படங்கள்னாலே இசைக்கு முக்கியத்துவம் இருக்குறது எல்லாத்துக்கும் தெரிஞ்சது தான். அதுல இதுவும் ஒரு ஸ்பெஷல்.


13.Slumdog Millionaire(2008)

எல்லாத்தயும் சொல்லியாச்சு. நம்ம இசைப்புயல் இசைய சொல்லலேன்னா தெய்வ குத்தமாய்டாது? ஆஸ்கார் வாங்குன இசையாச்சே.. சொம்மாவா..!!


14.Kill Bill Vol 1(2003)

குவண்ட்டினோட மாஸ்டர்பீஸ் படங்கள்ல ஒன்னு இந்த கில் பில். அதுல முதல் வால்யூம்ல வர்ற இந்த எண்டு கார்டு இசையக் கேட்டுப் பாருங்க. இதுவும் மெல்லிசை வகை தான்.


15.Contraband(2012)

என்னாடா இது ? என்னவோ புதுசா ஒரு படத்த சொல்றேனேன்னு பாக்காதிங்கோ. இந்தப் படத்துல வர்ற எண்டு கார்டு இசை உங்கள அப்டியே டான்சாட வைக்கும். எண்டு கார்டு கெடைக்கலங்கறதால ஒரிஜினல் பாட்டோட லிங்க் கொடுத்துருக்கேன். இதுல கரெக்டா 1 நிமிஷத்துக்கு அப்புறம் தான் துள்ளலிசையே வரும். அதுனால முழுசா கேளுங்கோ.


இது போக Fight Club, Kick Ass, Super 8, Shutter Island, Full Metal Jacket, National Treasure, Adventures of TinTin, Planet Terror, Death Proof போன்ற படங்கள்லயும் என்டு தீம் நல்லா இருக்கும். அது போக இப்டியே இன்னும் சொல்லிட்டே போகலாம்.

எதுனா விட்டுப்போயிருந்தா அதுக்குக் காரணம்  நான் இல்ல. எனக்கு வந்துருக்கற இந்தப் பாழாப்போன ஷார்ட் டெர்ம் மெமாரி லாஸ் தான் காரணம். அதுக்காண்டி கோச்சிகினு பின்னூட்டம்லாம் போட மாட்டேன்னு அடம் பிடிக்காம சமத்தா (சமந்தா கிடயாது..ஆசையப் பாருங்க.. அதான் சித்தார்த் கொத்தினு போயிட்டான்ல) உங்களுக்குப் பிடிச்ச எண்டு க்ரெடிட் தீம் என்னானு லிங்க்கோட விலாவாரியா ஒரு பின்னூட்டத்தப் போட்டுட்டுப் போங்க பாக்கலாம்.
வர்ட்டா ?!! நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்.

6 comments:

  1. தல,
    14 படங்களுமே அட்டகாசமான என்ட் க்ரெடிட் சாங் லிஸ்ட் கொண்டவை தான். ஒன்னு ஒன்னும் கேட்ட கேட்க புல் அரிக்குது. எத பெஸ்ட்ன்னு கண்டிப்பா சொல்ல முடியாட்டும், ரொம்பவே பிடிச்சது Dark Knight தான். ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க இந்த பதிவை போட.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல,

      //14 படங்களுமே//

      14 ஆ?? 15 படம் இல்ல கொடுத்துருக்கேன்.. உங்களுக்கு பிடிக்காத அந்த ஒரு படம் எது தல ?
      எனக்கு ரொம்ப பிடிச்சதும் டார்க் நைட் ம்யூசிக் தான். எப்போ கேட்டாலும், எத்தனை தடவை கேட்டாலும் புல்லரிக்க வைக்கிற இசை. அப்புறம் உண்மையிலேயே ரொம்ப ரிலாக்ஸா போட்ட பதிவு தான் தல இது. மனசுல தோணுனத அப்டியே போட்டாச்சு. மெனக்கெடவே இல்ல.

      ரொம்ப நன்றி தல தொடர்ந்து உற்சாகப்படுத்திட்டே இருக்கீங்க..!! :)

      Delete
  2. Replies
    1. தல,

      என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம். ரொம்ப பிஸியோ..?
      வருகைக்கு மிக்க நன்றி தல. அடிக்கடி வாங்க !!

      Delete
  3. தல எனக்கு பிடிச்சது Titanic படம் தான் அப்புறம் வழக்கம் போல பதிவு சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நண்பா,

      எனக்கும் டைட்டானிக் ம்யூசிக் ரொம்ப பிடிக்கும். மனசை நெகிழ்ச்சியில ஆழ்த்துற இசை அது. ஆனா இங்க நான் கொடுத்துருக்கறது எல்லாமே கொஞ்சம் அதிரடியான இசை. மெல்லிசையை கணக்குல எடுத்துக்கல.

      அப்புறம் என்ன நீங்களும் 'தல'னு ஆரம்பிச்சிட்டீங்களா ?ஹா ஹா..!!
      வருகைக்கு மிக்க நன்றி நண்பா. அடிக்கடி வாங்க!!

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *