May 7, 2013

A History of Violence(2005) (18+) - பாட்ஷா ரீமேக்..??


ஹலோ ஃபிரண்ட்ஸ்,

இப்போ கொஞ்ச நாளா ஆஃபீஸ்-ல நிறய வேலை இருந்ததால இந்தப் பக்கமே வர முடியாம போயிடுச்சு. (இல்லன்னா மட்டும் வகை வகையா எழுதிக் கிழிச்சுருப்பாரு...!!) இனிமே ஒரு மாசத்துக்கு 2, 3 பதிவாவது எழுதனும்னு இருக்கேன்.(உன்ன தான் எதிர்பார்த்து காத்துக்கிட்டிருக்கோம் பாரு..!!) இங்க பதிவு தான் எழுதலயே தவிர நிறைய படங்கள் பாத்துட்டேன். தமிழ்-லயே கூட
"வத்திக்குச்சி", "உதயம்-NH4" போன்ற படங்கள் பாத்துட்டு, பாராட்டி பதிவு எழுதனும்னும், "கேடி பில்லா கில்லாடி ரங்கா", "சேட்டை" படங்கள பாத்துட்டு வந்து காய்ச்சி எடுக்கனும்னும் தோனுச்சு. ஆல்ரெடி நம்ம "கொழந்த" அண்ணன் ஃபேஸ்புக்-லயே கழுவி கழுவி ஊத்திட்டார்னு விட்டுட்டேன்.

எக்கச்சக்கமான ஹாலிவுட் படங்களும் பாத்தேன்.(அப்போ ஆபிஸ்ல நிறய வேல இருக்குனு சொன்னதெல்லாம் பொய்யா..?) எல்லாத்தயும் எழுதனும்னு ஆசயாதான் இருக்கு. ஆனா என்ன பண்றது நமக்கு முன்னாடியே பிரபல பதிவர்கள் எல்லாத்தயும் எழுதி வச்சுட்டாங்க. "American Beauty(1999)", "Road to Perdition(2002)", "SkyFall(2012)", "Pan's Labyrinth(2006)", "The China Town(1974)", "A Fistful of Dollars(1964)" இந்த படங்கள பாத்தவுடனே பதிவு எழுதனும்னு துடிச்சேன். அதுவும் நம்ம தலீவர் குவண்ட்டினோட "Django Unchained(2012)" பாத்த அடுத்த செகண்டு இதப் பத்தி எழுதிட்டு தான் மறுவேலைனு இருந்தேன். ஆனா பாருங்க நம்ம கருந்தேளண்ணன் Django Unchained (2012) – English இந்தப் பதிவுலயும், அப்புறம் நம்ம கீதப் ப்ரியன் ட்ஜாங்கோ அன்செய்ண்ட் இந்தப் பதிவுலயும் அக்குவேற ஆணிவேறா பிரிச்சு பேன் பாத்துருக்காங்க. அதனால எனக்கு எழுத வாய்ப்பில்லாமலே போயிருச்சு.(அடேயப்பா..!!)

சரி.. யாருமே எழுதாத படமா பாத்து எழுதுவோம்னு இந்தப் படத்த தேர்ந்தெடுத்தேன். ஆனா இதயும் ஜாக்கி சேகர் அண்ணே (HISTORY OF VIOLENCE) 18+ திருந்தி வாழ்வது தவறா? பதிவுல 2009 லயே எழுதிட்டாரு. சரி இருந்தாலும் பரவால. இப்படியே விட்டா அப்பறம் நாம எழுதறதுக்கு எதுவும் இருக்காதுனு முடிவு பண்ணி இந்தப் படத்தப் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டேன்.

இந்தப் படம் நம்ம "பாட்ஷா" படத்தோட ரீமேக்னு சொல்லலாம். அல்லது இன்ஸ்பிரேஷன்னு சொல்லி சந்தோஷப் பட்டுக்கலாம். ஆனா அது கொடுக்கற உணர்வு முற்றிலும் வேறானது. அது என்னனு கடசில பாக்கலாம். பாட்ஷா படத்தோட கதை என்னா? அமைதியா தன்னோட குடும்பத்தோட சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கற ஆட்டோ ட்ரைவர் ரஜினி. ஒரு கட்டத்துல லோக்கல் ரவுடிங்க தன் குடும்பத்துக்கு தொல்லை கொடுக்கும்போது அடி பின்றதுல இவரு கடந்த காலத்துல பெரிய டான்.. பாட்ஷா-னு தெரிய வருது. இதனால பழய வில்லன் ரகுவரன் மறுபடியும் வந்து தொல்லை கொடுக்கறாரு. ரஜினிக்கும், அவரு குடும்பத்துக்கும் நிம்மதி போயிடுது. கடசில வில்லன அழிச்சுட்டு வந்து மறுபடியும் தன்னோட அமைதியான வாழ்க்கைக்கு திரும்பிடறாரு.

இதே கதைதாங்க ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்துக்கும். மனைவி எடி(Edie), டீனேஜ்ல இருக்கற மகன் ஜாக்(Jack), குட்டிப் பொண்ணு சாரா(Sarah) இப்படி குடும்பத்தோட சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கறாரு டாம் ஸ்டால்(Tom Stall). ஒரு சின்ன ஹோட்டலையும் நடத்திக்கிட்டு வர்றாரு. அவரோட பையன் அவர விட ரொம்ப அமைதியானவனா இருக்கான். ஸ்கூல்-ல பேஸ்பால் விளையாடறப்ப எதிர் டீம்ல ஒருத்தன் அடிச்ச பால்-அ கேட்ச் பிடிச்சுடறான். இதனால கடைசி நிமிஷத்துல ஜாக்கோட டீம் ஜெயிச்சுடறாங்க. இதனால கோபப்படுற எதிர் டீம் ஆளு ஜாக்-கிட்ட வந்து "நீ என்ன அவ்ளோ பெரிய ஹீரோவா"னு கேட்டு வம்புக்கு இழுக்கறான். ஆனா சண்டை போட விருப்பமில்லாத ஜாக் அமைதியா பதில் சொல்லுறான். "விளையாட்ட போயி ஏன் பெருசுபடுத்துற" கேட்டுட்டு அவன் திட்டறதெல்லாம் அமைதியாவே கேட்டுக்கறான்.

இப்படி ரொம்ப சந்தோஷமான, எந்த பிரச்சனையுமில்லாத வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டுருக்கும் போது டாம் நடத்திட்டு வர்ற ஹோட்டல்-ல திடீர்னு ஒரு பிரச்சனை வருது. ஹோட்டலை மூடுற சமயத்தில ரெண்டு கொள்ளைகாரனுங்க உள்ள வந்து துப்பாக்கி முனையில கொள்ளையடிக்க முயற்சி பண்ணுறாங்க. அப்பவும் "இங்க அவ்வளவா பணம் நாங்க வச்சுக்கறதில்ல"னு அமைதியா பதில் சொல்லுறாரு டாம். கொஞ்ச நேரத்துல அங்க வேலை பாக்குற பொண்ண தொல்ல பண்ண ஆரம்பிச்சுடறாய்ங்க. துப்பாக்கி முனையில மிரட்டிகிட்டு இருக்கும்போது வேற வழியில்லாத டாம் தன்னோட சமயோசித புத்திய யூஸ் பண்ணி சண்டயெல்லாம் போட்டு அவங்க ரெண்டு பேரையும் கொன்னுடறாரு. எல்லாரும் டாமை ஒரு பெரிய ஹீரோவா கொண்டாடுறாங்க. லோக்கல் டிவி சேனல் எல்லாத்துலயும் டாம் பத்தின கவர் ஸ்டோரி தான். ரொம்ப பிரபலமாயிடறாரு. இருந்தாலும் மறுபடியும் தன்னோட அமைதியான எளிமையான வாழ்க்கைக்கு திரும்பிடறாரு டாம். ஆனா இதுக்கப்புறம் தான் பிரச்சனையே ஆரம்பிக்குது.

அடுத்த நாள் ஒரு பெரிய மாபியா தலைவன் கார்ல் ஃபோகர்ட்டி (Carl Fogarty) டாமோட கடைக்கு வந்து அவன ஜோயி க்யூசக்-னு (Joey Cusack) கூப்பிடறாரு. "உன் பேரு டாம் கிடையாது. நீ ஒரு பெரிய கொள்ளைக்கூட்டத்த சேர்ந்தவன்"னும் சொல்லுறாரு. தன் கூட ஃபிலடெல்ஃபியா வரைக்கும் வர சொல்லுறாரு. டாம், தான் நீங்க நினைக்கற ஆள் இல்லனு சொல்லி அவங்கள அனுப்பிடறாரு. ஆனா அத நம்ப மறுக்கற கார்ல் அப்போதைக்கு போயிட்டு மறுபடி மறுபடி வந்து தொல்லை கொடுக்கறாரு. இதுக்கிடையில ஜாக் தன்னோட ஸ்கூல்ல அந்த பேஸ்பால் பேட்ஸ்மேன் கூட சண்டை போட்டுடறான். இதுக்கு முன்னாடி அமைதியா இருந்தவன் இப்போ சண்ட போட்டதுக்கு காரணம், அவன் அப்பா டாம் ஸ்டால் அந்த கொள்ளைக்காரங்கள கொன்னது தான். இதனால ஸ்கூல்ல இருந்து சஸ்பெண்ட் பண்ணிடறாங்க. இப்படி கொஞ்ச கொஞ்சமா டாம் குடும்பத்து நிம்மதி போயிட்டு இருக்குது.

கொஞ்ச நாள்ல டாம தேடி வீட்டுக்கே தன்னோட அடியாளுங்க கூட வந்துடறான் கார்ல். அப்போ ஜாக்-க பணயக்கைதியா வச்சுக்கிட்டு டாம வர சொல்லுறான். அந்த சமயத்தில வேற வழியில்லாம அவன் சொல்லுறதுக்கு ஒத்துக்கிட்டா மாதிரி நடிச்சு அவனோட அடியாளுங்க ரெண்டு பேரையும் கொன்னுடறாரு டாம். சுதாரிச்சுக்கிட்ட கார்ல் துப்பாக்கிய எடுத்து டாம சுடும்போது பின்னாடியிருந்து ஜாக், ஷாட்கன் மூலமா கார்ல்-அ சுட்டுக் கொன்னுடறான். இத பார்த்த எடி அப்படியே உறைஞ்சு போயிடறா.

அவளுக்கு உண்மையிலேயே டாம் ஒரு பெரிய டான் தானோ-னு சந்தேகம் வந்துருது.
"நீங்க அடிச்ச அடியில ரெண்டு பேரு செத்துப்போயிட்டாங்க. நாடி நரம்பு ரத்தம் சதையில சண்டை வெறி ஊறிப்போயிருக்கற ஒருத்தனால தான் இந்த மாதிரி அடிக்க முடியும். சொல்லுங்க.. நீங்க யாரு.. ஃபிலடெல்ஃபியா-ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. சொல்லுங்க...சொல்லுங்க..சொல்லுங்க.."
னு டாம கேக்குறாரு. அப்போ வேற வழியில்லாம டாம்
"என் பேரு டாம்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு"
னு சொல்லி தன்னோட உண்மையான கடந்த காலத்த சொல்லுறாரு.(பாட்ஷா-ல மாதிரி ஃபிளாஷ்பேக்லாம் கிடையாது. சும்மா வாய்லயே சொல்லுறாரு)

இதனால அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையில ஒரு பிரிவு வருது. மறுபடியும் ஃபிலடெல்ஃபியால இருக்க டாமோட பிரதர் ரிச்சி க்யூசக்(Richi Cusack) (பிரதர் தான்..ஆனா ரெண்டு பேரும் எதிரிங்க) உடனே தன்னை வந்து பாக்க சொல்லுறாரு. இல்லனா உன் குடும்பத்தயே கொன்னுருவேனு மிரட்டுறாரு. சரி இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டியே ஆகனும்னு அங்க கிளம்பிப்போறாரு டாம். பிறகு என்ன நடந்தது ? டாம் அவரோட பிரதர்ட்ட இருந்து தப்பிச்சாரா ? தன் குடும்பத்தோட ஒண்ணு சேர்ந்தாரா ? மறுபடியும் அவர் வாழ்க்கையில நிம்மதி வந்ததா ? லேப்டாப் திரையில் காண்க.

அவ்ளோதாங்க கதை. பாட்ஷா-க்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்னா பாட்ஷாவுல வன்முறை தவறானதாவே தெரியாது. ரஜினி முதல் முறையா சண்டை போடும்போது நமக்கு உற்சாகம் பொங்கும். 
"அப்படிப்போடு..!! இங்க அடி..!! பின்னாடி பாரு ஒருத்தன்..!! அவன் மூஞ்சியப் பேர்த்தெடு..!!".
ஆனா இங்க அப்டியில்ல. டாம் சண்டை போடும்போது 'அய்யோ அடுத்தடுத்து என்ன பிரச்சனையெல்லாம் வரப்போகுதோ..நிம்மதி போகப்போகுதோ'னு தோணும். வன்முறை வாழ்க்கை அல்ல. அது எப்படி மனித வாழ்க்கையின் நிம்மதியைக் கெடுக்கிறது என்பதை நல்லா உணர்த்துற ஒரு படம் இது.

தேவையில்லாத காட்சிகள் எதுவுமே இல்லாத, தெளிந்த நீரோட்டம் போன்ற ஒரு திரைக்கதையைக் கொண்ட படம். கொஞ்சம்கூட ஒரு இடத்துலகூட சலிப்பே வராத சுவாரசியமான காட்சிகளக் கொண்ட திரைக்கதை. மொத்தமா ஒரு நல்ல ஃபுல் என்டர்டைனர் மூவி. கருத்தும் இருக்குது. வன்முறை தவறு தேவையில்லாதது. மனித வாழ்க்கையின் நிம்மதியை, சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடியது. இந்தக் கருத்தோட சேர்த்து ஒரு நல்ல ஆக்ஷன் படம்.

இந்தப் படம் முன்னாடியே இதே பேர்ல கிராபிக் நாவலா வந்துருச்சு. அதுலருந்து நிறைய மாறுதல்கள் பண்ணி படத்த உருவாக்கியிருக்காங்க. நாவல்ல வன்முறை இன்னும் ஜாஸ்தியாம். அதே போல டாமுக்கு நிறைய ஃபிளாஷ்பேக்-களும் உண்டாம். அவரு எப்படி பெரிய டான் ஆனாரு. அப்போ என்னலாம் பண்ணிட்டு இருந்தாருனு ஃபிளாஷ்பேக்ல சொல்லுவாங்கலாம். ஆனா படத்துல அந்த சீன் எதுவும் இல்ல. அவரு எப்படி கடந்த காலத்து வாழ்க்கையையும் இன்றைய நிம்மதியான வாழ்க்கையையும் கடந்து வர்றாரு, தான் பெரிய டான்-னு தெரிஞ்சப்பறம் குடும்பத்தோட, மனைவியோட குழப்பமான மனநிலையை எப்படி சமாளிக்கறாரு - இத தான் படத்துல முக்கியமா காமிச்சுருப்பாங்க. டாமோட வன்முறை அவரோட பையனை எப்படி பாதிக்குதுனு நாவல்ல இல்லியாம். படத்துல தனியா ஆட் பண்ணிருக்காங்க. அதே போல நாவல்ல க்ளைமாக்ஸ்ல அவர் எப்படி எதிரிகளை வயலன்ட்டா அழிக்கறாருனு மட்டும்தான் இருக்கும். ஆனா படத்துல மனச நெகிழ்ச்சிப் படுத்துற மாதிரி ஒரு க்ளைமாக்ஸ் இருக்கும். அந்த அனுபவத்த படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க.

படத்த தனியா உக்காந்து பாருங்க. குழந்த குட்டிகளோட உக்காந்து பாத்து அடி வாங்குனா நான் பொறுப்பு கிடையாது இப்பவே சொல்லிட்டேன் ஆமா. படம் 18+ ரேட்டிங்க் வாங்குறதுக்கு வன்முறை சீன்கள் மட்டும் காரணமில்லை. உண்மையா பாத்தா வன்முறை ரொம்பக் கம்மிதான். ஆனா 18+ க்கு காரணமான ரெண்டு முக்கியமான சீன் இருக்கு.!! :) :) அதுல ஒரு சீன் டாம் குடும்பம் சந்தோஷமா வழ்ந்துட்டுருக்கும்போது  வரும். இன்னொரு சீன் டாம் ஒரு டான்னு தெரிஞ்ச பிறகு வரும். இந்த ரெண்டாவது சீனை மிஸ் பண்ணாம பாருங்க. வயலண்ட் கலந்த செக்ஸ் சீன் அது. படிக்கட்டுல வெறித்தனமா உறவு கொள்கிற காட்சி அது.

அந்த சீன எடுக்கறதுக்கு முன்னாடி டைரக்டர் ரொம்ப கவலப்பட்டுருக்காரு. மரத்தால செய்யப்பட்ட படிக்கட்டுல நடிக்கும்போது(!!!) ரெண்டு பேருக்கும் அடிபட வாய்ப்பிருக்கேனு யோசிச்சு ஸ்டன்ட்மேன் கிட்ட எதாச்சும் ஸ்டன்ட்பேட் வச்சு படிக்கட்டுகள சாஃப்ட்டா ஆக்க முடியாதான்னு கேட்டுருக்காரு. அந்த ஸ்டன்ட்மேன் "இதுவரைக்கும் எந்த டைரக்டருமே ஒரு மேட்டர்(!!) சீனுக்காக ஸ்டன்ட்பேட் கேட்டதே இல்ல. இதான் முதல் தடவ"னு சொல்லி சிரிச்சி விட்டாராம். கடசில ஸ்டன்ட்பேட் இல்லாமலே அந்த சீன எடுத்துருக்காங்க. அதுல எடியா நடிச்ச Mario Bella வுக்கு முதுகில நிறைய அடி பட்டுச்சாம். அடுத்த சீன்ல அவங்க முதுகில அடிபட்ட காயம் தெரியும். ஆனா சீனுக்கு தேவைப்பட்டத விட நிறைய அடி பட்டதுனால அடுத்த சீன்ல மேக்கப் போட்டு காயத்த கம்மியா காமிச்சுருக்காங்க. என்னவொரு டெடிகேஷன் பாத்திங்களா..??!!

நடிப்ப பொறுத்தவரையில எல்லாருமே பின்னியிருக்காங்க. நிறைவான நடிப்பு. ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான அளவு இருந்தது. வில்லனா கடைசில வர்ற (டாமோட பிரதர்) William Hurt ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். பத்தே நிமிஷம் வந்தாலும் பிரிச்சு மேய்ஞ்சிருப்பாரு. மொத்தம் அஞ்சே நாள்ல இவரு போர்ஷன எடுத்துட்டாங்களாம்.

இன்னொரு சீன நான் கண்டிப்பா சொல்லியே ஆகனும். படத்தோட முத சீனு. லாங் ஷாட்ல வர்ற அந்த சீன் எனக்கு குவண்ட்டின் டாரன்டினோவ ஞாபகப்படுத்துச்சு. சாதாரணமா ஒரு ஹோட்டல்ல இருந்து காலி பண்ணப்போற ரெண்டு பேரு சோம்பல் முறிச்சுக்கிட்டே அங்கேர்ந்து கெளம்புவாங்க. அப்படியே நார்மலா பேசிக்கிட்டே போகும்போது திடீர்னு அவங்க யார்னு உணர்த்தற மாதிரி காட்சி மாறும். அது என்னனு படத்துல பார்த்து தெரிஞ்சுக்கங்க. அது ஒன்னியும் அவ்ளோ பெரிய சஸ்பென்ஸ்லாம் இல்ல. குவண்ட்டின் படங்கள் பாக்குறவங்களுக்கெல்லாம் அது ஒரு பொருட்டாவே தெரியாது. இருந்தாலும் நல்ல சீன் அது.

டைரக்டர் David Cronenberg இவரோட இன்னொரு படம் Crash(1996) இதுவும் ஹார்ட் டிஸ்க்ல இருக்கு. கார் ஆக்ஸிடண்ட் பண்ணி அது மூலமா கிளர்ச்சியடைஞ்சு செக்ஸ் வச்சிக்கற ஒரு குரூப் பத்தின டிஸ்டர்ப்பான படம். இந்தப் படத்தோட விமர்சனத்த நம்ம ஹாலிவுட் பாலா ஆல்ரெடி எழுதியாச்சி.
Crash (1996) இங்கன க்ளிக் பண்ணிப் படிச்சுப் பாருங்க.

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் அந்தளவுக்கு இல்லனாலும் குடும்பத்தோட பாக்க ஏற்றது அல்ல. ஆனா குடும்பத்தின் நிம்மதியை, சந்தோஷத்தை, மனித உறவுகளை அலசற படம். பட் க்ரைம் த்ரில்லர்.

ஓக்கே ஃப்ரண்ட்ஸ் இப்போதைக்கு Bye. மீண்டும் சந்திப்போம்.

(மறக்காம கீழ உங்க பொன்னான கருத்துக்கள கொட்டிட்டுப் போங்க.. எதாச்சும் தப்பா இருந்தா கண்டிப்பா திட்டிட்டாவது போங்க..!!)

2 comments:

  1. உங்க விமர்சனம் படம் பார்க தூதூதூதூண்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பாருங்க உங்களுக்கு 18 வயசு பூர்த்தியாயிருந்தா..!! :) :)

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *