Dec 27, 2012

நீதானே என் பொ(பு)ன்வசந்தம் (2012)


நடிப்பு: சமந்தா, ஜீவா, சந்தானம்
இசை: இசைஞானி இளையராஜா
தயாரிப்பு: எல்ரெட் குமார்
இயக்கம்: கவுதம் வாசுதேவ மேனன்

இவ்ளோ நாள் கழிச்சு ஃப்ரண்ட்ஸ் எவ்ளோ சொல்லியும் கேக்காம நேத்து "நீதானே என் பொன்வசந்தம்" பாக்கலாம்னு உக்காந்தேன். ஒரு அரைமணி நேரத்துலயே அது எவ்ளோ பெரிய தப்புனு புரிஞ்சுருச்சு.படம் ஒரு 3 மணி நேரம் இருக்கும். ஆனா 5 மணி நேரம் உக்காந்துருந்த மாதிரி ஒரு பீலிங்க். மொத மொறயா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு பதிவ போடப்போறமே தமிழ் படத்துலருந்து ஆரம்பிப்போம்னு நினச்சேன்.எல்லாம் என் நேரம்.சரி வாங்க படத்துல அப்டி என்னதான் இருக்குனு பாப்போம்.

படத்தோட கத என்னா ?

அது டைரக்டருக்கே தெரில போல.படத்துல என்ன சொல்ல வர்றோம்னு தெரியாம ரொம்ப கொழம்பிட்டாரு. எனக்குத் தெரிஞ்சு இதான் கௌதமோட மோசமான ScreenPlay.(நடுநிசி நாய்கள் பாக்கலயானு கேக்காதிங்க அது படத்திலயே சேத்தி கிடயாது) ஜீவாவும்(ரகு) சமந்தாவும்(நித்யா வாசுதேவன்) ஸ்கூல்லருந்தே லவ் பண்றாங்க.அப்றம் பிரிஞ்சுடறாங்க.மறுபடியும் காலேஜ்ல பாத்துப் பேசி லவ் பண்றாங்க. மறுபடியும் பிரிஞ்சுடறாங்க.ஜீவா கல்யாணம் பண்ண ட்ரை பண்றப்ப சமந்தா வந்து வசனம் பேசறாங்க. உடனே கல்யாணத்த நிறுத்திட்டு சமந்தாக்கு கிஸ்ஸ போடறாரு ஜீவா. இடையில சந்தானமும் வர்றாரு. அவ்ளோதாங்க கத.

VTV ல த்ரிஷா சிம்புவ புரிஞ்சுக்காம பிரிஞ்சு போய்டுவாங்க.அதனால ஒரு சின்ன கோவம் நமக்கு இருந்துகிட்டே இருக்கும். இந்தப்படத்துல நம்ம எல்லாத்துக்கும் ஜீவா மேல கடுப்பு வரும். VTV ல சிம்பு த்ரிஷாவ விரட்டி விரட்டி லவ் பண்ணுவாரு. அதே மாதிரி இந்தப் படத்துல சமந்தா ஜீவாவ விரட்டி விரட்டி லவ் பண்ணுறாங்க. இந்த மாதிரி ஒரு அதிசயமான, நிஜத்தில் நடக்காதத(பொண்ணுங்க என்னிக்கு பாஸ் பசங்கள விரட்டி விரட்டி லவ் பண்ணிருக்காங்க) சொன்னதும் படத்தோட தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.

சரி என்னதான்யா படத்துல நல்லா இருக்கு ?

சமந்தா...சமந்தா..சமந்தா. படத்துல நல்லா இருந்த ஒரே மேட்டரு சமந்தா மட்டும்தான். என்னா அழகு பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. ஒவ்வொரு எக்ஸ்ப்ரஷனும் அவ்ளோ க்யூட்டா கொடுக்கறாங்க. நடிப்புல பின்றாங்க. இந்தப்படம் மொக்கயா இருந்தாலும் சமந்தா கேரியர்ல இன்னொரு மைல்கல்.ஜீவா எதோ பரவால்லிங்க. வளைஞ்சுருக்க மூக்க வச்சுக்கிட்டு க்ளோஸ்அப்-ல பேசும் போதெல்லாம் இவரு ஹீரோவா இல்ல காமெடியனானு ஒரு டவுட்டு வருது. மத்தபடி ஓகே.

சந்தானம் :)

படத்துல நமக்கு கொஞ்சமே கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னனா அது சந்தானம் தான். காமெடி எதோ பரவால. இந்தப் படத்துல VTV-ய கிண்டல் பண்ணிருக்காரு. அதத்தவிர ஒரு சில இடத்துல சிரிக்க வைக்கிறாரு.அவ்ளோதான்.

இசை ???????!!!!!!!!

இசைன்னா ? இசைன்னா......இசை...!!!!!!! பாட்டு,பின்னணி இசை கேக்றப்பலாம் ஒரு வேள 1940கள்ல வந்த படத்தப் பாக்குறமோனு ஒரு டவுட்டு இருந்துகிட்டே இருக்கு. எப்பவுமே படத்துக்கு நடுவுலதான் பாட்டு இருக்கும்.இங்க பாட்டுக்கு நடுவுல படம் இருக்குங்க. அதுலயும் படத்துல வர்ற சீனுக்கும் பாட்டுக்கும் சம்பந்தமே இருக்காது.

அய்யா..!!ராசா...!!இளையராசா...!!தெய்வமே...!! இன்னமும் ஏன் அய்யா உங்க சொந்தக் குரல்லயே பாடுவேன்னு அடம் புடிக்றீங்க? கொஞ்சம் ரெஸ்ட்டு எடுத்துக்கப்படாதா.. சச்சினே 39 வயசுல ரிடையர்ட் ஆயிட்டாருங்க. அப்றம் இன்னொரு கேள்விங்க அய்யா. படத்துக்கு ம்யூசிக் போடும்போது டைரக்டர் பாலா எதும் உங்கள டிஸ்டர்ப் பண்ணாரா ?? அப்டியே சேது,நந்தா,பிதாமகன் படம் பாக்ற எஃபக்ட்டு வந்துருச்சு. "இதற்குத்தானா ஆசைப்பட்டாய்.."னு உங்க கரகர கொரல்ல எட்டுக்கட்டைல பாடும்போது அப்டியே எனக்கு நட்டுக்கிச்சு.பாட்ட கேட்டுட்டு அப்டியே பக்கத்துல இருந்தவன கடிச்சு வக்கிற அளவுக்குப் போயிட்டேன்னா பாத்துக்கங்க.

"பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா.." பாட்டு திடீர்னு வரவும் பக்கத்துல இருக்ரவனுக்கு வலிப்பு வர ஆரம்பிச்சுருச்சு.அது போக படம் வேற இழுத்துக்கிட்டே இருந்ததுல நொற தள்ளிருச்சு. ஆம்புலன்சு வச்சு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போனாய்ங்க.என்ன ஆனானோ??

"வானம் மெல்லக் கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே" - கொஞ்சம் சுமாரான பாட்டு.அதயும் நீங்களே பாடி எங்கள குளுர்ச்சிப் படுத்திட்டீங்க. மத்தபடி "என்னோடு வா வா" "சாய்ந்து சாய்ந்து" நல்லாருந்துச்சு.

டெக்னிகலா எதும் தேறுமா ?

ஒரு ரொமான்டிக் படத்துக்குரிய ஒளிப்பதிவே இல்ல. இன்டர்வெல்-க்கு முன்னாடி வர்ற ஒரு 10 நிமிடம் ஒரே ஷாட்டாக எடுத்துருப்பாங்க. ஜீவாவும் சமந்தாவும் சண்ட போடற மாதிரி ஒரு ஷாட். அவங்க பேசிக்கிட்டே இருக்கும் போது கேமரா பாட்டுக்கு எங்கெங்கயோ போகுது. ஒரு கிலோமீட்டருக்கு அங்கிட்டு போயிருது.நமக்கு மண்ட காய ஆரம்பிச்சுரும்.

எடிட்டிங்க்னு ஒன்னு படத்துல இருந்துச்சானு கேள்வி கேக்ற அளவுக்கு ரொம்ப மோசம். நிறைய இடத்துல கத்திரி போட்ருக்கனும்.படம் ரொம்ப லெங்க்த்த்த்த்த்த்த்த்த்த்து..

பாக்கலாமா வேணாமா?

இத மீறியும் நீங்க போனிங்கன்னா உங்க உயிருக்கு நா உத்திரவாதம் இல்ல.படம் பாத்துட்டு வந்து பக்கவாதம் வந்துருச்சுன்னு இங்க வந்து புகார் பண்ணக்கூடாது ஆமா..இப்பவே சொல்லிப்புட்டேன்.

கௌதம் மேனனிடம் ஒரு கேள்வி

யேன்..?? யேன் இப்ப்ப்புடி...??!!! "விண்ணைத்தாண்டி வருவாயா" மாதிரி ஒரு காவியத்தைப் படைச்சுட்டு எப்புடி இந்த மாதிரி ஒரு படத்த கொடுக்க மனசு வந்துச்சு. இப்பவாச்சும் புரிஞ்சுக்கங்க.. ம்யூசிகல் படம்னா அது ரஹ்மான் மாதிரி ஒரு லெஜண்டால தான் கொடுக்க முடியும். அப்பறம் இன்னொரு கேள்வி கேட்டே ஆகனும். சின்ன வயசுல பாடகர் ஆகனும்னு எதாச்சும் கனவு இருந்துச்சோ. இந்தப் படத்துல "நீதானே என் பொன்வசந்தம்" ங்கற பாட்டை பாடியிருக்கீங்க. ஏன் சார் ? உங்க இசை ஆர்வத்துக்கு நாங்க தான் கிடச்சமா? தியேட்டர விட்டு எல்லாரும் தெறிச்சுக்கிட்டு ஓடறாய்ங்க.

கடசியா

இந்தப் படத்த VTV-2 னு யாராச்சும் சொன்னீங்க அவ்ளோதான் கெட்ட கோவம் வந்துரும். அந்தப் படத்துல ஒரு 10 பர்செண்ட் கூட வராது இந்தப்படம். ஆக மொத்தத்தில VTV எந்த அளவுக்கு ஒரு ஃபீல் கொடுத்துச்சோ அதுக்கு நேர் மாறா இந்தப் படம் எரிச்சலயே தருகிறது.

நீதானே என் பொன்வசந்தம் = உடம்பெல்லாம் புண் வசந்தம்

2 comments:

  1. இந்த படத்த இதுவரை ஒரு 10 தடவ பார்த்துருப்பேன் ,,,,, ஒரே காரணம் சமந்தாவின் நடிப்பு , முகபாவனைகள் , சிலிர்ப்பு , சிரிப்பு , துக்கம் என்று அனைத்தையும் நித்யாவாக வாழ்ந்த இருப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. பதிவுல எழுதி இருக்கற இந்த வார்த்தைகளை மறுபடியும் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
      //சரி என்னதான்யா படத்துல நல்லா இருக்கு ?
      சமந்தா...சமந்தா..சமந்தா. படத்துல நல்லா இருந்த ஒரே மேட்டரு சமந்தா மட்டும்தான். என்னா அழகு பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. ஒவ்வொரு எக்ஸ்ப்ரஷனும் அவ்ளோ க்யூட்டா கொடுக்கறாங்க. நடிப்புல பின்றாங்க. இந்தப்படம் மொக்கயா இருந்தாலும் சமந்தா கேரியர்ல இன்னொரு மைல்கல்.// :) :)

      Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.

மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Welcome to Killadiranga - எனக்குப் பிடித்த சினிமா பற்றி என் பார்வையில்!!

Contact Me

Name

Email *

Message *